How does blueberries help you lose weight: இன்றைய காலகட்டத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக பலரும் பல பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். அதில் ஒன்றாக உடல் பருமனும் அடங்கும். இதனால், எடையிழப்புக்கு பலரும் பல முயற்சிகளை மேற்கொள்கின்றனர். எனினும், இந்த எடையிழப்பு பயிற்சி மிகவும் கடினமானதாகும். உடல் எடை குறைப்பு முயற்சியில் ஈடுபடுபவர்கள் குறிப்பாக தங்கள் உணவைக் கண்காணிப்பது அவசியமாகும். இதனுடன், சீரான தூக்கமுறை, மன அழுத்தத்தை நிர்வகித்தல் போன்றவற்றின் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம்.
அதன் படி, உடல் எடையைக் குறைக்க ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள், பழங்கள், காய்கறிகள், பானங்கள், நட்ஸ் மற்றும் விதைகள் போன்ற பல்வேறு வகைகளைத் தேர்ந்தெடுக்கலாம். அவ்வாறு, உடல் பருமனைக் குறைக்க உதவும் பழங்களில் புளூபெர்ரி பழங்களும் அடங்கும். அவுரிநெல்லிகள் என்றழைக்கப்படும் புளூபெர்ரி பழங்களை பெரும்பாலும் சூப்பர்ஃபுட் என்றே கூறலாம். இந்த துடிப்பான சிறிய பழம் சுவையுடன் கூடிய எடையிழப்புக்கு உதவும் ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. இதில் வைட்டமின்கள் சி, கே, ஆன்டிஆக்ஸிடன்ட்கள், மாங்கனீசு மற்றும் உணவு நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன.
இந்த பதிவும் உதவலாம்: Weight Loss Fruits: இந்த பழங்கள் மட்டும் போதும்.. ஒரே மாசத்துல ஸ்லிம்மா ஆகிடுவீங்க.!
உடல் எடை குறைய அவுரிநெல்லிகள் எவ்வாறு உதவுகிறது?
அதிக நார்ச்சத்து உள்ளடக்கம்
உடல் எடை இழப்புக்கு பங்களிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாக அமைவது நார்ச்சத்துக்கள் ஆகும். அவ்வாறே, அவுரிநெல்லியில் உள்ள உணவு நார்ச்சத்து முழுமை உணர்வுகளை அளிக்கிறது. இது நாள் முழுவதும் ஒட்டுமொத்த கலோரி உட்கொள்ளலைக் குறைத்து உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. ஆய்வு ஒன்றில், அதிக நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்பவர்கள் குறைந்த உடல் எடை மற்றும் மேம்பட்ட மனநிறைவைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த
அடுத்ததாக, அவுரிநெல்லியில் நிறைந்துள்ள ஆக்ஸிஜனேற்றிகள் எடையிழப்புக்குப் பங்களிக்கக் கூடியதாகும். குறிப்பாக, இதில் உள்ள அந்தோசயினின்கள், வீக்கத்தைக் குறைப்பதிலும், வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆய்வு ஒன்றில், அந்தோசயினின்கள் கொழுப்பு வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதாகக் கூறப்படுகிறது. மேலும், இது கொழுப்பை சேமிப்பதற்கு மாற்றாக உடலில் கொழுப்பு எரிவதை எளிதாக்குகிறது.
குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் (குறைந்த GI)
புளூபெர்ரி பழங்கள் பொதுவாக குறைந்த கிளைசெமிக் குறியீட்டை கொண்ட பழங்களாகும். அதாவது இவை இரத்த சர்க்கரை அளவுகளில் குறைந்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகும். மேலும், இரத்த ஓட்டத்தில் சர்க்கரையின் மெதுவான வெளியீடு காரணமாக, உடலில் நிலையான ஆற்றல் அளவை பராமரிக்க உதவுகிறது. கூடுதலாக, இது அதிக கலோரி தின்பண்டங்களுக்கான பசியைக் குறைக்கிறது. ஆய்வு ஒன்றில், குறைந்த ஜிஐ கொண்ட உணவுகளை உட்கொள்வது எடை நிர்வாகத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Fruits for Weight Loss: சட்டுனு உடல் எடை குறைய பழம் சாப்பிடலாமா? எந்த பழம் அதிக நன்மையை தரும்!
மேம்பட்ட இன்சுலின் உணர்திறன்
அவுரிநெல்லிகளின் வழக்கமான நுகர்வானது மேம்பட்ட இன்சுலின் உணர்திறனுடன் தொடர்பு கொண்டதாகும். ஆய்வு ஒன்றில், அவுரிநெல்லிகளை உணவில் சேர்த்துக்கொண்ட பங்கேற்பாளர்கள், சிறந்த இன்சுலின் உணர்திறனைக் கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இது இரட்டிப்பு நன்மைகளாக எடையை நிர்வகிக்கவும், வகை 2 நீரிழிவு நோயைத் தடுப்பதற்கும் உதவுகிறது.
உடல் எடை குறைய எவ்வளவு அவுரிநெல்லிகள் சாப்பிட வேண்டும்?
சிறந்த ஆரோக்கிய நன்மைகள் மற்றும் எடையிழப்புக்கு ஒரு நாளைக்கு 1 முதல் 2 கப் அவுரிநெல்லிகள் உட்கொள்வதை சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இது குறித்து பிரபல வலைதளம் ஒன்றில் கூறப்பட்டதை விரிவாகக் காண்போம்.
எமோரி பல்கலைக்கழகத்தின் ஊட்டச்சத்து நிபுணரான டாக்டர் கொலின் கெல்லி அவர்களின் கூற்றுப்படி, “புளூபெர்ரிகள் நம்பமுடியாத அளவிற்கு பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்டதாகும். இதை எடை குறைக்கும் உணவில் ஒரு சிறந்த கூடுதலாக அமைகிறது. மேலும், இது நார்ச்சத்துக்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்களால் நிறைந்ததாகும். இதில் குறைந்தளவிலான கலோரிகளே உள்ளது. மேலும், இதன் நார்ச்சத்துக்கள் அதிக நேரம் உண்பதைத் தடுக்கிறது. கூடுதலாக, இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், குறிப்பாக அந்தோசயினின்கள், வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தையும், கொழுப்பை எரிப்பதையும் ஆதரிப்பதுடன், எடையிழப்புக்கும் பங்களிக்கிறது” என்று கூறியுள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: weight Loss Fruits: மளமளனு எடை குறைய இந்த 7 பழங்களை சாப்பிடுங்க!!
Image Source: Freepik