Fruits For Weight Loss: பழங்கள்… உங்கள் ஆரோக்கியத்தை சீராக வைத்து, உங்கள் சருமத்தை பளபளப்பாகக் காட்டுவது மட்டுமல்லாமல், எடையைக் குறைக்கவும் உதவும். இவற்றில் உடலுக்குத் தேவையான அனைத்து வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. ஒரு நாளைக்கு ஒரு பழத்தையாவது கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் பல முயற்சிகளை மேற்கொள்கின்றனர். உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு ஆகியவற்றுடன் சில வகையான பழங்களை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் எடையை விரைவில் குறைக்கலாம். எடையைக் கட்டுப்படுத்த விரும்புபவர்கள் சாப்பிட வேண்டிய குறைந்த சர்க்கரை, குறைந்த கலோரி பழங்கள் சிலவற்றை இங்கே காண்போம்.

உடை எடையை குறைக்க உதவும் பழங்கள் (Fruits For Weight Loss)
ஸ்ட்ராபெர்ரி
ஸ்ட்ராபெர்ரி, ஒரு சுவையான பழம் மட்டுமல்ல, அவை கலோரிகளிலும் குறைவு. இந்த பழங்கள் உடல் எடையை குறைக்க உதவும். சர்க்கரையின் அளவு குறைவாக இருப்பதால், இந்த பழம் நீரிழிவு நோயாளிகளுக்கு, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
கிவி
கிவி பழங்களில் சர்க்கரை மற்றும் கலோரிகள் குறைவாக உள்ளது. நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், உங்கள் உணவில் கண்டிப்பாக இருக்க வேண்டிய பழம் கிவி. வளர்சிதை மாற்ற செயல்பாட்டை மேம்படுத்த கிவி மிகவும் உதவியாக இருக்கும்.
இதையும் படிங்க: Cucumber Water Benefits: வெள்ளரி தண்ணீர் குடிப்பதில் இத்தனை நன்மைகள் இருக்கா?
ஆரஞ்சு
ஆரஞ்சு பழத்தில் உள்ள நார்ச்சத்து, விரைவான எடையைக் குறைக்க உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின்-சி உங்களை நீண்ட நேரம் திருப்தியாக வைத்திருக்கும். ஆரஞ்சுப்பழம் பசியை போக்க வல்லது. இது உங்கள் சருமத்தை பளபளப்பாக மாற்றுகிறது.
திராட்சை
திராட்சையில் வைட்டமின்-சி, நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இவற்றை சாப்பிட்டால் வயிறு நீண்ட நேரம் நிரம்பி இருக்கும். மேலும் இதில் சர்க்கரை மற்றும் கலோரிகள் குறைவாக உள்ளது. எனவே இவற்றை தினமும் சாப்பிட்டு வந்தால், உடல் எடையை எளிதில் குறைத்து, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தலாம்.
அவகேடோ
அவகேடோவில் நார்ச்சத்து மற்றும் ஒலிக் அமிலம் உள்ளது. நார்ச்சத்து உங்களை நீண்ட நேரம் முழுதாக வைத்திருக்கும். பசியை கட்டுப்படுத்த உதவுகிறது. மறுபுறம், ஒலிக் அமிலம் செரிமான செயல்பாட்டை மேம்படுத்துகிறது மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது.
ஆப்பிள்
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியமில்லை என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கும் ஆப்பிள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் அதிக நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து உள்ளது. எனவே இவற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் எளிதில் உடல் எடை குறையும்.
வாழைப்பழம்
வாழைப்பழம் எல்லா காலங்களிலும் கிடைக்கும். இது அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. இவற்றில் சர்க்கரைச் சத்து அதிகமாக இருப்பதால், இவற்றைச் சாப்பிட்டால், நீண்ட நேரம் பசி எடுக்காது. இதன் விளைவாக, அவர்கள் குறைவான உணவை உட்கொள்கிறார்கள். இது எடையை குறைக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம் போன்றவை உடலுக்கு பல வழிகளில் நல்லது.
இங்கு உங்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து சுகாதார தகவல்களும் பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. ஆனால், இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.
Image Source: Freepik