Thu Oct 29, 2026 | 10:47 AM IST

Low Calorie Snacks: வெறும் 100 கலோரிகளை கொண்ட வெயிட் லாஸ் ஸ்னாக்ஸ்!!

Low Calorie Snacks: வெறும் 100 கலோரிகளை கொண்ட வெயிட் லாஸ் ஸ்னாக்ஸ்!!Low Calorie Snacks: வெறும் 100 கலோரிகளை கொண்ட வெயிட் லாஸ் ஸ்னாக்ஸ்!!

Snacks Under 100 Calories Healthy Winter Munching Options: குளிர்காலம் என்றாலே நாம் அனைவருக்கும் டீ, சூப், சுட சுட போண்டா, பஜ்ஜி தான் நினைவிற்கு வரும். குளிர்காலத்தில் சாப்பிடும் பொருட்களின் சுவை வித்தியாசமாக இருக்கும், கோடையில் சாப்பிட முடியாது. ஆனால், உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இவற்றை கனவில் மட்டுமே சாப்பிட முடியும். ஏனென்றால், இயல்பாகவே குளிர்காலத்தில் இயல்பாகவே உடல் எடை வேகமாக அதிகரிக்கும். இந்நிலையில், எண்ணெய் பொருட்களை சாப்பிட்டால் உடல் எடை மிக வேகமாக அதிகரிக்கும்.

குளிர்காலத்தில் நாம் எவ்வளவு அதிகமாக உணவு உண்ணுகிறோமோ, அவ்வளவு கலோரிகள் உடலுக்குள் செல்கிறது. கலோரி உட்கொள்ளல் அதிகமாகும் போது உடல் பருமன் அதிகரிக்கும் என்பது வெளிப்படையான உண்மை. இந்த குளிர்காலத்தில், நீங்கள் சுவையாகவும் சாப்பிடணும் அதே சமயம் உங்கள் எடையையும் கட்டுக்குள் வைத்திருக்க விரும்பினால், உங்கள் உணவில் குறைந்த கலோரி தின்பண்டங்களை சேர்க்கலாம். இது உங்கள் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். அதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Green Grapes: எடை குறைய பச்சை திராட்சை உதவலாம்.!

தேங்காய் சிப்ஸ் - Coconut Chips

பலர் குளிர்காலத்தில் காஃபி மற்றும் டீயுடன் சிப்ஸ் சாப்பிட விரும்புகிறார்கள். நீங்கள் குளிர்காலத்தில் உருளைக்கிழங்கு சிப்ஸ் பதிலாக, தேங்காய் சில்லுகளை சாப்பிடலாம். தேங்காய் சிப்ஸில் கலோரிகள் மிகவும் குறைவு. கூடுதலாக, இது நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் புரதத்தின் நல்ல மூலமாகும்.

ஃப்ரூட் சாலட் - Fruit Chat

குளிர்காலத்தில் பல வகையான பழங்கள் கிடைக்கும். ஆப்பிள், மாதுளை, ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி, கொய்யா மற்றும் உங்களுக்கு விருப்பமான பருவகால பழங்களை நறுக்கி, அவற்றை உங்கள் சிற்றுண்டியில் ஃப்ரூட் சாலட்டாக சேர்க்கவும். இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மட்டும் அதிகம் இல்லை. மாறாக, அவை உடலுக்கு நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் போன்ற ஊட்டச்சத்துக்களை வழங்க உதவுகின்றன.

இந்த பதிவும் உதவலாம் : Weight Loss Tips: தூங்கும் போது கூட உடல் எடை குறைய… இத செஞ்சா மட்டும் போதும்!

மசாலா சோளம் - Masala Corn

வேகவைத்த அல்லது சுட்ட சோளம் அனைவருக்கும் பிடிக்கும். குறிப்பாக பாப்கார்ன் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. குளிர்காலத்தில் உங்கள் சிற்றுண்டி உணவில் மசாலா கார்ன் சேர்க்கலாம். அவை நார்ச்சத்து நிறைந்தவை, இது செரிமானத்தை ஊக்குவிக்கிறது மற்றும் உங்கள் வயிறு நீண்ட நேரம் நிறைந்ததாக இருக்கும்.

பாசி பருப்பு அடை - Moong Dal Chilla

ருசியான மற்றும் திருப்திகரமான ஏதாவது ஒன்றைச் சாப்பிடும் மனநிலையில் நீங்கள் இருந்தால், நீங்கள் பாசி பருப்பு அடையை முயற்சி செய்யலாம். பருப்பு, பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் இரவு முழுவதும் ஊறவைத்த அரிசி மற்றும் மசாலாப் பொருட்களை அரைத்து கரைசலை தயார் செய்யவும். நான்-ஸ்டிக் பாத்திரத்தில் இதை தோசை போல வார்க்கவும். புரதச்சத்து நிறைந்த இது சுவையானது மட்டுமல்ல, உங்களை நிறைவாகவும் வைக்கும்.

இந்த பதிவும் உதவலாம் : Belly Fat: தொங்கும் தொப்பையை சட்டென குறைக்க… இந்த 3 விஷயங்கள பின்பற்றுங்க!

ஸ்மூத்தி - Smoothies

குளிர்காலத்தில் பல வகையான பழங்கள், காய்கறிகள் மற்றும் கீரைகள் சந்தைகளில் கிடைக்கும். உங்கள் சிற்றுண்டி உணவில் பழங்கள் மற்றும் காய்கறி ஸ்மூத்திகளை சேர்க்கலாம். இது புரதத்தின் நல்ல மூலமாகும். ஸ்மூத்தி ஆரோக்கியமாக இருக்க, நீங்கள் அதில் ஆளி விதைகள், சியா விதைகள் மற்றும் பூசணி விதைகளை சேர்க்கலாம்.

Pic Courtesy: Freepik

Read Next

→ Weight Loss Tips: தூங்கும் போது கூட உடல் எடை குறைய… இத செஞ்சா மட்டும் போதும்!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Devaki Jeganathan

Senior Sub Editor

நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.