ஸ்நாக்ஸ் சாப்பிட்டாலும் வெயிட் ஏறாம இருக்க இதெல்லாம் சாப்பிடுங்க.

  • SHARE
  • FOLLOW
ஸ்நாக்ஸ் சாப்பிட்டாலும் வெயிட் ஏறாம இருக்க இதெல்லாம் சாப்பிடுங்க.

எனினும் உடல் எடை குறையாமல் அதே நிலையில் இருக்கும். இதற்கு அவர்கள் உணவுகளுக்கு இடையில் எடுத்துக் கொள்ளும் நொறுக்குத் தீனிகளே. இந்த சூழ்நிலையில் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் வகைகளைத் தேர்வு செய்வதன் மூலம் அதிக கலோரிகள் இல்லாமல் உடல் எடையைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

எந்த வகையான ஸ்நாக்ஸ்?

ஸ்நாக்ஸ் வகைகளில் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. இது உடல் எடையைக் குறைப்பதுடன், ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான சிறந்த வழியாகும். குறிப்பாக இதில் சர்க்கரை, ஆரோக்கியமற்ற கொழுப்புகள், கலோரிகள் போன்றவை அதிகம் இருப்பதால் இவை விரைவாக உடல் எடையை அதிகரிக்கலாம். இதனைத் தவிர்த்து, உடல் எடையைக் குறைக்க உதவும் குறைந்த கலோரிகள் நிறைந்த உணவுகள், அதிக புரதம் மற்றும் நார்ச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Amla Powder For Weight Loss: தொப்பை சீக்கிரம் குறைய ஆம்லா பொடியை இப்படி பயன்படுத்துங்க.

உடல் எடையைக் குறைக்கும் தீனி வகைகள்

இந்த வகை ஸ்நாக்ஸ் வகைகளுடன், குறைந்த அளவிலான கலோரிகள் கொண்ட உணவுகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் உடல் எடையை விரைவாகக் குறைக்கலாம்.

முட்டை

ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் மிகுந்த உணவாக முட்டை கருதப்படுகிறது. ஆய்வு ஒன்றில் காலை உணவாக முட்டை எடுத்துக் கொள்பவர்களுக்கு பசி குறைவாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அதே சமயம், அடுத்த வேளை உணவில் குறைந்த அளவிலான கலோரிகள் உட்கொள்ளப்படுவதன் மூலம் விரைவில் உடல் எடையைக் குறைக்கலாம். காலை உணவில் முட்டையைச் சேர்த்துக் கொள்வது வயிறு முழுமையாக உணரப்படுவதுடன், அந்த நாள் முழுவதும் உடலுக்குத் தேவையான ஆற்றலையும் தருகிறது.

முளைகட்டிய பயிறு

பொதுவாக முளைகட்டிய பயிறுகளில் அதிகளவிலான நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தருகிறது. இதில் கொண்டைக்கடலை, பச்சைப்பயிறு போன்ற பயிறு வகைகளை முளைகட்ட வைத்து சாப்பிடுவது சிறந்தது. இவை நார்ச்சத்துக்களுடன், புரதச்சத்தையும் தருவதால் பசியைத் தூண்டும் ஹார்மோன்களின் அளவைக் குறைக்க செய்கிறது. மேலும், இது செரிமான ஆற்றலை மேம்படுத்த உதவுகிறது.

ஓட்ஸ்

இன்று உடல் எடையைக் குறைக்க உதவும் பெரும்பாலானோர் ஓட்ஸ் வகை உணவுகளையே காலை உணவாகத் தேர்ந்தெடுக்கின்றனர். இதில் நார்ச்சத்துக்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. இதை ஸ்நாக்ஸாக எடுத்துக் கொள்ளும் போது நீண்ட நேரம் பசி இல்லாத உணர்வைத் தருகிறது. மேலும், ஓட்ஸ் எடுத்துக் கொள்வது வயிற்றில் அமில உற்பத்தியைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Fennel Seeds Benefits: ஆஹா! எடையை வேகமா குறைக்க இந்த ஒரு விதை போதுமா? இது தெரியாம போச்சே..

மோர்

நீரேற்றத்துடன் உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவும் சிறந்த உணவாக மோர் கருதப்படுகிறது. இவை மிக எளிதில் ஜீரணிக்க உதவுகிறது. வைட்டமின்கள், என்சைம்கள் புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகள் போன்ற ஊட்டச்சத்துக்களை மோர் கொண்டுள்ளது. மேலும், இதில் கால்சியம் மற்றும் புரதச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் இவை கலோரி நுகர்வைத் தடுக்கிறது.

பழ வகைகள்

சிறந்த ஸ்நாக்ஸ் வகைகளில் ஒன்றாக பழங்கள் உள்ளன. இவை நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தருகிறது. அனைத்துப் பழங்களும் பல்வேறு வகையான ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளன. மற்ற உணவுகளைக் காட்டிலும் இவை உடலுக்கு நீரேற்றத்தைத் தருகின்றன. எனவே இதில் உள்ள நீர்ச்சத்துக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் வயிறு நிரம்பிய உணர்வைத் தருவதுடன் பசியைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

பாதாம்

பாதாம் சிறந்த ஸ்நாக்ஸ் வகையாகும். இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்துக்கள், புரதம், வைட்டமின் ஈ, மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் போன்றவை ஆக்ஸிஜனேற்றத்தின் சிறந்த மூலங்களாகும். நார்ச்சத்துக்கள், புரதம் இரண்டும் நிறைந்துள்ளதால் நீண்ட நேரம் முழுமையாக வைத்திருக்கச் செய்வதுடன், பசியைக் குறைக்கிறது.

இது போன்ற ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் வகைகளுடன், குறைந்த அளவிலான கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்து மிக்க உணவுகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் உடல் எடையை விரைவாகக் குறைக்க முடியும்.

இந்த பதிவும் உதவலாம்: Pumpkin For Weight Loss: உடல் எடையை வேகமா குறைக்கணுமா? பூசணிக்காய் இப்படி சாப்பிட்டா போதும்.

Image Source: Freepik

Read Next

சீத்தா பழ பிரியர்களே இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா? உஷார்..

Disclaimer