Amla Powder For Weight Loss: தொப்பை சீக்கிரம் குறைய ஆம்லா பொடியை இப்படி பயன்படுத்துங்க.

  • SHARE
  • FOLLOW
Amla Powder For Weight Loss: தொப்பை சீக்கிரம் குறைய ஆம்லா பொடியை இப்படி பயன்படுத்துங்க.

நெல்லிக்காய் பொடி உடல் எடையைக் குறைக்க எவ்வாறு உதவுகிறது?

  • ஆம்லா பவுடரில் அதிக அளவிலான நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது வயிற்றை நீண்ட நேரம் முழுமையாக வைத்து உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
  • உடலில் உள்ள கலோரிகளை எரிக்க நெல்லிக்காய் பொடி உதவுகிறது.
  • மேலும், இது செரிமானம் மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. இதன் மூலம் உடல் எடையைக் குறைக்கிறது.
  • நெல்லிக்காய் பொடியை எடுத்துக் கொள்வது உடலில் சேரும் நச்சுக்களை எளிதில் வெளியேற்ற உதவுகிறது. இதன் மூலம் உடலில் இருந்து தேவையற்ற கொழுப்புகள் மற்றும் கலோரியைக் குறைக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Weight Loss Protein: உடல் எடையைக் குறைக்க புரதத்தை எடுத்துக் கொள்வதற்கான சிறந்த வழிகள்

உடல் எடை குறைய நெல்லிக்காய் பொடியை பயன்படுத்துவது எப்படி?

உடல் எடையைக் குறைக்க உதவும் நெல்லிக்காய் பொடியை பல்வேறு வழிகளில் பயன்படுத்தலாம்.

வெதுவெதுப்பான நீருடன் நெல்லிக்காய் பவுடர்

உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், நெல்லிக்காய் பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம். இதற்கு ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் அதில் ஒரு ஸ்பூன் நெல்லிக்காய் பொடி சேர்த்து குடித்துவர உடல் எடையைக் குறைக்கலாம். தினமும் இரவில் தூங்கும் முன் எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு எடுத்துக் கொள்ள உடலில் உள்ள கொழுப்பு மற்றும் கலோரிகளைக் குறைக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Brown Sugar Weight Loss: உடல் எடை குறைய நாட்டுச் சர்க்கரையை இப்படி பயன்படுத்துங்க

நெல்லிக்காய் பொடி மற்றும் தேன்

நெல்லிக்காய் பொடியை தேனுடன் சேர்த்து சாப்பிடுவதன் மூலம், உடல் எடையைக் குறைக்கலாம். ஒரு கிளாஸ் தண்ணீரை சூடாக்கி, அதில் நெல்லிக்காய் தூள் மற்றும் தேன் கலந்து குடிக்கலாம். தினமும் காலையில் வெறும் வயிற்றில் அல்லது படுக்கைக்கு முன் இதைக் குடித்து வர, உடலில் உள்ள கொழுப்பு மற்றும் கலோரிகளைக் குறைக்கலாம்.

நெல்லிக்காய் பவுடர் மற்றும் இஞ்சி

நெல்லிக்காய் பொடி மற்றும் இஞ்சி பொடியை எடுத்துக் கொள்ளலாம். ஒரு கிளாஸ் தண்ணீரில் இஞ்சி மற்றும் நெல்லிக்காய் பொடி சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். பின், தினமும் காலையில் வெறும் வயிற்றில் வடிகட்டி குடிக்க வேண்டும். இந்த வகையில் நெல்லிக்காய் பொடியை உட்கொள்வதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம். இது ஒரு ஆயுர்வேத தேநீர் ஆகும். எந்த பருவத்திலும் குடிக்கலாம். இவை இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து சாப்பிட்டு வர உடல் எடையைக் குறைக்கலாம்.

இந்த வழிகளில் நெல்லிக்காய் பொடியை எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் எடையை வேகமாகக் குறைக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Weight Loss Drink: எடை இழப்புக்கு வெறும் வயிற்றில் நீங்க குடிக்க வேண்டிய பானங்கள்

Image Source: Freepik

Read Next

Weight Loss Night Drinks: வேகமா எடை குறைய நைட் தூங்கும் முன் இந்த பானங்களை எல்லாம் குடிங்க.

Disclaimer