Weight Loss Night Drinks: வேகமா எடை குறைய நைட் தூங்கும் முன் இந்த பானங்களை எல்லாம் குடிங்க.

  • SHARE
  • FOLLOW
Weight Loss Night Drinks: வேகமா எடை குறைய நைட் தூங்கும் முன் இந்த பானங்களை எல்லாம் குடிங்க.

பொதுவாக இரவு நேரங்களில் எடுத்துக் கொள்ளும் அதிக உணவு காரணமாக உடல் எடை மிக வேகமாக அதிகரிக்கலாம். ஏனெனில், இரவு உணவுக்குப் பின் உடலில் உள்ள குளுக்கோஸ், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்கலாம். இதற்கு தீர்வாக உடல் எடையைக் குறைக்க இரவு நேரங்களில் சில பானங்களை எடுத்துக் கொள்ளலாம். இது உடல் எடையை வேகமாகக் குறைக்க உதவும்.

இந்த பதிவும் உதவலாம்: Walking After Eating: இரவு சாப்பிட்ட பின் வாக்கிங் செல்வது உடல் நலத்திற்கு நல்லதா?

உடல் எடையைக் குறைக்க உதவும் பானங்கள்

உடல் எடையை வேகமாகக் குறைக்க மேம்படுத்தப்பட்ட செரிமான அமைப்பு மிக முக்கியமான ஒன்றாகும். சில உணவு மாற்றங்களுடன், செரிமான செயல்திறனை அதிகரிப்பது உடல் எடையை திறம்படக் குறைக்க உதவுகிறது. மேலும், இது உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கலாம். இது போன்ற பல்வேறு நன்மைகளைத் தரும் பானங்கள் சிலவற்றை இதில் காணலாம்.

வெள்ளரிக்காய் – பார்ஸ்லி சாறு

வெள்ளரிக்காய், வோக்கோசு கொண்டு தயாரிக்கப்படும் சாறு விரைவாக உடல் எடை இழப்புப் பயணத்திற்கு உதவுகிறது. இதைத் தொடர்ந்து உட்கொள்வது, விரைவான முடிவுகளைத் தரும். மேலும் வெள்ளரியில் அதிக நீர் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளன. மேலும் இதிலுள்ள பல்வேறு பண்புகள் உடல் எடையைக் குறைக்க உதவுகின்றன.

இதற்கு, துண்டாக நறுக்கப்பட்ட வெள்ளரி, ஒரு கொத்து வோக்கோசு எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் அரை தேக்கரண்டி அரைத்த இஞ்சி மற்றும் 1 தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு சேர்த்து அருந்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Weight Loss Exercise For Women: உடல் எடை சீக்கிரம் குறைய இந்த உடற்பயிற்சி செய்யுங்க!

வெந்தய நீர்

வெந்தயவிதைகள் உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவுகின்றன. இது உடலின் வெப்பத்தை உருவாக்கி, உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், இது உடலின் செரிமான அமைப்பை வலுப்படுத்த உதவுகிறது. இந்த நீரை இரவு தூங்குவதற்கு அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் முன்பாக உட்கொள்ளலாம்.

இதற்கு பாத்திரம் ஒன்றில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, இதில் நறுக்கிய வெந்தயத்தைச் சேர்க்க வேண்டும். குறைந்தது மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் வரை இந்த வெந்தயத்தை மூடி வைக்கலாம். பின் வடிகட்டியைப் பயன்படுத்தி, இதை வடிகட்டி வெந்தய நீரைக் குடிக்கலாம்.

மஞ்சள் பால்

இரவில் மஞ்சள் பால் அருந்துவது செரிமானத்தை அமைதிப்படுத்த உதவுகிறது. இது உடலில் ஏற்படும் கூடுதல் எடையைக் குறைக்கிறது. இதில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்றுகிறது. இது நமது செரிமானத்தை சீராக வைக்க உதவும். மேலம் பாலில் கால்சியம், புரதங்கள் போன்றவை நிறைந்துள்ளன. இவை உடல் எடையைக் குறைக்க உதவுகின்றன.

கொதிக்க வைத்த பாலுடன், அரை டீஸ்பூன் மஞ்சள் சேர்த்து சூடாக இருக்கும் போதே குடிக்க வேண்டும். இவ்வாறு இரவு நேரத்தில் சூடாக குடிப்பது உடல் எடையை வேகமாகக் குறைக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Jaggery Lemon Water: உடல் எடை குறைய வெல்லம் கலந்த எலுமிச்சைச் சாற்றை இப்படி குடிங்க

கெமோமில் டீ

உடல் எடை இழப்பிற்கு மட்டுமல்லாமல், வீக்கத்தைக் குறைக்கவும் கெமோமில் டீ உதவுகிறது. இதில் கால்சியம், பொட்டாசியம், ஃபிளவனாய்டுகள் போன்றவை நிறைந்துள்ளன. இவை உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் திறன்களைக் கொண்டிருக்கின்றன. இரவு தூங்கும் முன் ஒரு கப் கெமோமில் டீ அருந்துவது நிம்மதியான தூக்கத்தைத் தர உதவுகிறது.

இந்த கெமோமில் தேநீர் தயாரிக்க, சிறிது தண்ணீரைக் கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதில், உலர்ந்த கெமோமில் இலைகளைத் தண்ணீர் சேர்க்க வேண்டும். 1 முதல் 2 நிமிடங்கள் இதை அப்படியே வைத்து, பின் தேநீரை வடிகட்டி குடிக்கலாம். இதில் இனிப்பு சேர்க்கும் விதமாக தேன் அல்லது ஸ்டீவியா போன்றவற்றைச் சேர்க்கலாம்.

கற்றாழைச் சாறு

படுக்கை நேரத்தில் கற்றாழைச் சாறு அருந்துவது உடல்நலத்திற்கு ஆரோக்கியத்தைத் தருகிறது. பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட கற்றாழை முழுமையான ஊட்டச்சத்தை அளிக்கிறது. இது செரிமான மண்டலத்தில் உள்ள ஒட்டுண்ணிகளை வெளியேற்ற உதவுகிறது.

கற்றாழை இலையின் வெளிப்புற அடுக்கை கீறி எடுத்துவிட்டு, கற்றாழை இலையின் உள்ளே இருக்கும் ஜெல்லை வெளியே எடுக்க வேண்டும். இந்த ஜெல்லை இரண்டு கப் நீரில் கலந்து ஒன்றாக கலக்கவும். ஒரு கிளாஸில் சாற்றை ஊற்றி தூங்கும் முன், இந்த பானத்தை அருந்தலாம். இது எடையிழப்புக்கு உதவும்.

இந்த பதிவும் உதவலாம்: Weight Loss Drink: எடை இழப்புக்கு வெறும் வயிற்றில் நீங்க குடிக்க வேண்டிய பானங்கள்

Image Source: Freepik

Read Next

Diwali Weight Loss: தீபாவளியின் போது உடல் எடையை குறைக்க இதை ட்ரை பண்ணுங்க!

Disclaimer