Weight Loss Drinks: இந்த ஜூஸ் எல்லாம் குடிங்க! மெட்டபாலிசம் அதிகரிக்கும், உடல் எடையும் குறையும்

  • SHARE
  • FOLLOW
Weight Loss Drinks: இந்த ஜூஸ் எல்லாம் குடிங்க! மெட்டபாலிசம் அதிகரிக்கும், உடல் எடையும் குறையும்

ஏனெனில் பலவீனமான வளர்ச்சிதை மாற்றத்தின் காரணமாக, உடல் பருமன் வேகமாக அதிகரிக்கும். இதில் வளர்ச்சிதை மாற்றம் உணவை ஆற்றலாக மாற்றுகிறது. வளர்ச்சிதை மாற்றத்தின் போது புதிய செல்கள் உருவாக்கப்பட்டு பழைய செல்களைப் பாதுகாக்கிறது. வளர்ச்சிதை மாற்ரம் எவ்வளவு வேகமாக நடைபெறுகிறதோ, அந்த அளவுக்கு உடலில் புரதம், கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்பு போன்ற ஊட்டச்சத்துக்கள் ஆற்றலாக மாற்றப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Belly Fat Reduces Fruits: தொப்பையை வேகமா குறைக்கணுமா? இந்த 6 பழங்களை சாப்பிடுங்க போதும்

உடல் எடை குறைய மற்றும் மெட்டபாலிசம் அதிகரிக்க உதவும் பானங்கள்

எலுமிச்சை மற்றும் தேன் கலவை

தேன் மற்றும் எலுமிச்சை இரண்டிலுமே ஆரோக்கியமான கலவைகள் நிறைந்துள்ளது. இந்த இரண்டின் கலவையை குடிப்பது உடல் எடையை விரைவாகக் குறைக்க உதவுகிறது. இது பலவீனமான வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது. இதற்கு ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் 1 தேக்கரண்டி அளவு எலுமிச்சைச் சாறு மற்றும் அரை தேக்கரண்டி தேன் சேர்த்துக் கொள்ளவும். இந்த கலவையை வெறும் வயிற்றில் குடித்து வர உடல் எடையை விரைவாகக் குறைக்கலாம்.

இலவங்கப்பட்டை தேநீர்

இலவங்கப்பட்டையில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளது. இந்த இலவங்கப்பட்டை தண்ணீரை உட்கொள்வது வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு துண்டு அளவு இலவங்கப்பட்டையைச் சேர்த்து தண்ணீர் பாதியாகக் குறையும் வரை நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். இப்போது இந்த நீரை ஆறவைத்து குடிக்கலாம். இந்த இலவங்கப்பட்டை தேநீரை வெறும் வயிற்றில் குடிக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Radish for Weight Loss: எவ்ளோ பெரிய தொப்பையையும் அசால்ட்டாக குறைக்க முள்ளங்கியை சாப்பிடுங்க

செலரி நீர்

செலரியில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் போன்றவை நிறைந்துள்ளது. இதில் 95% அளவிலான நீர் நிறைந்துள்ளது. எனினும், செலரியானது வைட்டமின் ஏ, கே, சி, ஃபோலேட் பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்றவற்றின் நல்ல மூலமாகும். மேலும் இதில் குறைந்தளவிலான புரதம், கொழுப்பு நிறைந்துள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த செலரி நீரை உட்கொள்வது உடல் எடையைக் குறைக்க உதவுவதுடன், மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது.

பெருஞ்சீரக நீர்

இது ஒரு இயற்கையான செரிமான உதவியாக செயல்படுகிறது. இது வயிற்று வலியைத் தீர்க்கவும், சீரான செரிமானத்திற்கும் உதவுகிறது. இதில் உள்ள கார்மினேடிவ் பண்புகள் அதிக உணவு எடுத்துக் கொண்ட பிறகு ஏற்படும் அசௌகரியத்தை எளிதாக்குகிறது. இந்த நீரை எடுத்த்க் கொள்வது உடலைப் புத்துணர்ச்சியடையச் செய்கிறது.

இந்த நீரை அருந்துவது உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதுடன், வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Metabolism Booster For Weight Loss: உடல் எடை குறைய வளர்சிதை மாற்றங்கள் அதிகரிக்க உதவும் சிறந்த பானங்கள்

Image Source: Freepik

Read Next

Belly Fat Reduces Fruits: தொப்பையை வேகமா குறைக்கணுமா? இந்த 6 பழங்களை சாப்பிடுங்க போதும்

Disclaimer