Metabolism Booster For Weight Loss: உடல் எடை குறைய வளர்சிதை மாற்றங்கள் அதிகரிக்க உதவும் சிறந்த பானங்கள்

  • SHARE
  • FOLLOW
Metabolism Booster For Weight Loss: உடல் எடை குறைய வளர்சிதை மாற்றங்கள் அதிகரிக்க உதவும் சிறந்த பானங்கள்

எடை இழப்புக்கு வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும் பானங்கள்

உடல் எடையைக் குறைப்பதுடன், உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும் சில பானங்களைக் காணலாம்.

எலுமிச்சை நீர்

ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சைச் சாறு கலந்து குடிப்பது உடலில் வளர்சிதை மாற்றத்திற்கு உதவும். ஏனெனில் எலுமிச்சையில் வைட்டமின் சி உள்ளது. இது கொழுப்பு ஆக்ஸிஜனேற்றத்திற்கு உதவுகிறது. மேலும் சூடான நீர் வளர்சிதை மாற்றத்தை தற்காலிகமாக அதிகரிக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Brown Sugar Weight Loss: உடல் எடை குறைய நாட்டுச் சர்க்கரையை இப்படி பயன்படுத்துங்க

இஞ்சி டீ

செரிமான நன்மைகளுக்கு மிகச்சிறந்த தீர்வாக இஞ்சி உள்ளது. இது உணவின் தெர்மிக் விளைவை அதிகரிக்க உதவுகிறது. அதாவது சாப்பிடும் போது கலோரி எரிப்பதை அதிகமாக்குதலாகும். இஞ்சி டீ அல்லது சூடான நீரில் இஞ்சி சேர்த்து அருந்தலாம்.

காரமான பானங்கள்

உடல் எடை இழப்பில் காரமான பானங்களைச் சேர்ப்பதன் மூலம் மெட்டபாலிசத்தை அதிகரிக்கலாம். பானங்களில் ஒரு சிட்டிகை கெய்ன் மிளகு அல்லது சில நொறுக்கப்பட்ட சிவப்பு மிளகு செதில்களைச் சேர்ப்பது வளர்சிதை மாற்றத்தைத் தற்காலிகமாக அதிகரிக்கலாம். இதற்கு மசாலாப் பொருள்களில் கேப்சைசின் இருப்பதே காரணமாகும். இது உடலின் வெப்பநிலையை உயர்த்துவதுடன், உடலில் உள்ள கலோரிகளை எரிக்க தூண்டுகிறது.

தண்ணீர்

உடல் எடை இழப்புடன், ஆரோக்கியமான வளர்ச்சிதை மாற்றத்திற்கு உடலை நீரேற்றமாக வைத்திருப்பது அவசியமாகும். நீரிழப்பு உடலில் கலோரிகளை எரிக்கும் திறனைக் குறைக்கலாம். எனவே, தினமும் குறைந்தது 8 கிளாஸ் தண்ணீரைக் குடிப்பதன் மூலம் உடலில் சில கூடுதல் கலோரிகளைக் குறைக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Weight Loss Stages: உடல் எடை இழப்பை விரும்புகிறவர்களா நீங்கள்? இதைக் கவனிங்க

கிரீன் டீ

கிரீன் டீயைப் பருகுவது, வளர்ச்சிதை மாற்றத்தை மென்மையாக வைத்திருக்கும். இதில் நிறைந்திருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் மிதமான அளவிலான காஃபின் உடலில் கலோரிகள் எரிப்பதை அதிகரித்து, கொழுப்பு ஆக்ஸிஜனேற்றத்தை ஊக்குவிக்கிறது. மேலும், இது சர்க்கரை பானங்களுக்கு ஆரோக்கியமான மாற்றாக விளங்குகிறது.

ஆப்பிள் சைடர் வினிகர்

சில ஆய்வுகள் ஆப்பிள் சைடர் வினிகர், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுவதாகக் கூறப்படுகிறது. மேலும், இது உடல் எடை இழப்புக்கும் உதவுகின்றன. எனினும், ஆப்பிள் சைடர் வினிகரை நீர்க்க வைத்து பயன்படுத்துவது நல்லது. ஒரு கிளாஸ் தண்ணீருடன், ஒரு டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகர் கலந்து, சிறிது தேன் கலந்து, அருந்த வளர்ச்சிதை மாற்றம் அதிகரிக்கும்.

மேலே கூறப்பட்ட பானங்கள் ஆரோக்கியமான வளர்சிதை மாற்றத்திற்கு பங்களிக்கும் சமயத்தில், இவை எடை இழப்புக்கான அதிசய தீர்வுகள் அல்ல என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். எனவே எதிர்பார்த்த முடிவுகளைப் பெற சீரான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சியை இணைப்பது அவசியமகும். அதே சமயம், இந்த பானங்களைத் தேர்ந்தெடுக்கும் போது கூடுதல் சர்க்கரை அல்லது அதிகப்படியான கலோரி நுகர்வை கருத்தில் கொள்ள வேண்டும். எடை இழப்பு பயணத்தை திறம்பட ஆதரிக்க, ஒட்டுமொத்த ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக இந்த பானங்களைத் தயாரித்து எடுத்துக் கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Weight Loss Exercise For Women: உடல் எடை சீக்கிரம் குறைய இந்த உடற்பயிற்சி செய்யுங்க!

Image Source: Freepik

Read Next

Workout Tips: உடற்பயிற்சி செய்வதற்கு முன் பால் கலந்த டீ குடிப்பது நல்லதா?

Disclaimer