Weight Loss Exercise For Women: உடல் எடை சீக்கிரம் குறைய இந்த உடற்பயிற்சி செய்யுங்க!

  • SHARE
  • FOLLOW
Weight Loss Exercise For Women: உடல் எடை சீக்கிரம் குறைய இந்த உடற்பயிற்சி செய்யுங்க!


பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிகள்

உடற்பயிற்சி செய்யும் போது, உடல் முழு ஆரோக்கியம் பெறுவதுடன், மன ரீதியாகவும் நன்மையைத் தருகிறது. இவற்றில், பெண்கள் உடல் எடை குறைய வீட்டிலேயே செய்யக் கூடிய சில எளிய உடற்பயிற்சிகளைக் காணலாம்.

இந்தப் பதிவும் உதவலாம்: உடல் எடையை குறைக்க கேரட் ஜூஸ் எப்படி குடிக்கணும்? எவ்வளவு குடிக்கணும்?

பிளாங் உடற்பயிற்சி

பிளாங் உடற்பயிற்சியானது முழு உடல் எடை இழப்பிற்கு உதவுகிறது. எந்த உபகரணமும் இல்லாமல், எளிமையாக செய்யக்கூடிய உடற்பயிற்சி ஆகும். இந்த பிளாங் உடற்பயிற்சி செய்வதால், குறிப்பாக தோள்பட்டை மற்றும் பிற முக்கிய தசைகள் உடல் அசைவுக்கு ஏற்ப வளைந்து உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. இந்த உடற்பயிற்சி மூலம், விரைவாக உடல் எடையைக் குறைக்கலாம்.

ஸ்குவாட்

இந்த வகை உடற்பயிற்சியானது தசைகளை வலுவாக்கும். இந்தப் பயிற்சியின் மூலம் உடலின் கீழ்ப்பகுதியின் எடையைக் குறைக்கலாம். இந்தப் பயிற்சி செய்யும் போது கீழ்ப்பகுதியில் உள்ள கொழுப்புகள் கரைந்து விடுகின்றன. இது முழங்கால் மற்றும் கணுக்கால்களில் ஏற்படும் வலிகளையும் குறைக்க உதவும்.

இந்தப் பதிவும் உதவலாம்: வார இறுதியில் எடை அதிகரிப்பு? இதை தவிர்க்க 7 குறிப்புகள் இங்கே

ஓட்டம் / நடைபயிற்சி

மிக எளிய உடற்பயிற்சியாக நடைபயிற்சி அல்லது ஓடுவது, உடல் எடையை இழக்க பயனுள்ளதாக அமைகிறது. வேகமாக ஓடும் போது அல்லது நடைபயிற்சி செய்யும் போது உடலில் உள்ள கலோரிகளை எரிக்கலாம். ஓடுதல் அல்லது நடைபயிற்சியை காலை அல்லது மாலை நேரத்தில் செய்யலாம். இரவு உணவுக்குப் பின், சிறிது நேரம் நடைபயிற்சி செய்வது உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.

புஷ்-அப் செய்தல்

உடற்பயிற்சியில் புஷ்-அப் செய்வது மிகவும் பிரபலமான பயிற்சிகளில் ஒன்றாகும். இது உடல் எடையைக் குறைப்பதில் மிகுந்த பங்காற்றுகிறது. இதில் உடலின் ஒட்டு மொத்த எடையையும் கையால் தாங்கி நின்று செய்யும் போது கலோரிகள் எரிக்கப்பட்டு உடல் எடை குறைவதைக் காணலாம்.

இந்தப் பதிவும் உதவலாம்: தினமும் உடற்பயிற்சி செய்வது சலிப்பாக இருக்கிறது? ஜாலியாக உடற்பயிற்சி செய்வது எப்படி?

யோகா

பழமையான மற்றும் மிகவும் ஆரோக்கியமான பயிற்சி யோகா செய்வது ஆகும். ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்வது மற்றும் யோகா செய்வது உடல் ஆரோக்கியத்திற்கும், மன ஆரோக்கியத்திற்கும் பெரிதளவு உதவுகிறது.

Image Source: Freepik

Read Next

White Pepper: உடல் எடையை குறைக்க வெள்ளை மிளகை இப்படி பயன்படுத்துங்கள்!

Disclaimer