Tips To Maximize Weight Loss in Gym: நீங்கள் ஜிம்மிற்கு சென்று உடல் எடையை குறைக்க முயற்சிப்பவரா? ஆம் என்றால், உடல் எடையை குறைக்க நீங்கள் அன்றாடம் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்வது மட்டும் போதாது. ஜிம்மிற்கு செல்வதால் மட்டும் உடலை கட்டுக்கோப்பாக மாற்ற முடியாது. ஜிம்மிற்குச் செல்வதுடன், நீங்கள் உங்கள் தினசரி வாழ்க்கையில் ஒரு சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அப்போதுதான் நீங்கள் சரியான ரிசல்ட்டை பெற முடியும்.
உடல் எடையை குறைக்க நாம் என்னதான் ஜிம்மிற்கு சென்றாலும், வீடு திரும்பிய பிறகு அவர்கள் ஆரோக்கியமான உணவைப் பின்பற்றுவதில்லை. அதாவது, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ மாட்டார்கள். இதனால், எடை குறைவதற்கு பதிலாக அதிகரிக்க துவங்குகிறது. ஜிம்மிற்கு செல்வதுடன் சில ஆரோக்கிய குறிப்புகளை பின்பற்றினால், விரைவில் உடல் எடை குறைவதுடன், நீண்ட காலத்திற்கு உடல் எடையை பராமரிக்கவும் முடியும். அவை என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : வார இறுதியில் எடை அதிகரிப்பு? இதை தவிர்க்க 7 குறிப்புகள் இங்கே
ஜிம் செல்வதற்கு முன் சாப்பிடவும்

நீங்கள் ஜிம்மிற்குச் செல்கிறீர்கள் என்றால், உங்கள் உடலுக்கும் ஆற்றல் தேவைப்படும். உடலுக்கு தேவையான ஆற்றலை பெற அதிகம் புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள். 1 கிலோவிற்கு 1.5 கிராம் என்ற விகிதத்தில் ஒவ்வொரு நாளும் புரதத்தை உட்கொள்ள வேண்டும். பால், பருப்பு தண்ணீர், முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் தயிர் போன்றவற்றை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். நீங்கள் நட்ஸ் மற்றும் டோஃபுகளையும் சாப்பிடலாம்.
30 நிமிடம் கார்டியோ உடற்பயிற்சி செய்யுங்கள்

ஜிம்மிற்குச் சென்று உடல் எடையைக் குறைக்க விரும்பினால், ஆரம்பத்தில் கார்டியோ பயிற்சிகளைச் செய்யுங்கள். இதற்காக, டிரெட்மில்லில் நடக்கவும் அல்லது ஓடவும். டிரெட்மில்லில் நடப்பதற்கு முன், அதை சாய்வு முறையில் வைக்கவும். இப்படி செய்வதன் மூலம் நீங்கள் அதிக கலோரிகளை குறைக்க முடியும். இதற்குப் பிறகு, உங்கள் பயிற்சியாளரின் ஆலோசனையின் பேரில் ஜிம்மில் பளு தூக்குதல் செய்யுங்கள், இது உங்கள் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கும்.
இந்த பதிவும் உதவலாம் : Weightloss Without Exercise: உடற்பயிற்சியே செய்யாமல் உடல் எடையை குறைக்கலாம்!
வாரத்தில் 1 நாள் ஓய்வு எடுங்கள்

மாதத்தின் ஒவ்வொரு நாளும் ஜிம்மிற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. உடலுக்கு ஓய்வு கொடுப்பதும் முக்கியம். அதிகமாக உடற்பயிற்சி செய்யத் தொடங்குபவர்கள் சிறிது நேரத்தில் உடற்பயிற்சியை முடிக்க முடியாது. எனவே, சிறிய இலக்குகளை அமைக்கவும். வாரத்தில் 5 நாட்கள் ஜிம்மிற்குச் சென்று, 1 நாள் வீட்டில் உடற்பயிற்சி செய்து, 1 நாள் உடலுக்கு ஓய்வு கொடுங்கள். இரண்டு உடற்பயிற்சி நேரங்களுக்கு இடையே 24 முதல் 72 மணி நேரம் இடைவெளி இருக்க வேண்டும். இது உடலை மீட்டெடுக்க உதவும்.
சரிவிகித உணவை உண்ணுங்கள்

ஜிம்மிற்குச் செல்வதன் மூலம் உடல் எடையை குறைக்கிறீர்கள் என்றால், உங்கள் உடலுக்கு ஆரோக்கியமான உணவும் தேவைப்படும். எனவே, உங்கள் BMI-யின் அடிப்படையில், உங்கள் கலோரி அளவை நிபுணர்களிடம் இருந்து அறிந்து அதன் அடிப்படையில் உணவை உட்கொள்ளுங்கள். உங்கள் உணவில் சரியான அளவு புரதங்கள், காய்கறிகள், பழங்கள், பால் பொருட்கள் மற்றும் தானியங்கள் இருக்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சர்க்கரை சாப்பிடுவதை தவிர்க்கவும்.
இந்த பதிவும் உதவலாம் : உடல் எடையை குறைக்க டீ உதவுமா? வாங்க பாக்கலாம்…
எடைக்கு பதிலாக அளவீட்டைச் சரிபார்க்கவும்

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், அடிக்கடி மெஷினில் நின்று எடையை சோதிப்பார்கள். ஆனால், இப்படி செய்வது முற்றிலும் தவறு. எடையைச் சரிபார்க்க இயந்திரத்திற்குப் பதிலாக அங்குல டேப்பைப் பயன்படுத்த வேண்டும். அங்குல டேப்பின் உதவியுடன், உங்கள் இடுப்பு, மார்பு, கால்கள், தோள்கள் மற்றும் தொடைகளை அளவிடவும். ஒரு வாரத்திற்கு உணவு மற்றும் உடற்பயிற்சி முறையைப் பின்பற்றிய பிறகு, அளவீடுகளை மீண்டும் சரிபார்த்து எழுதுங்கள். இதன் மூலம், உடலின் எந்தப் பகுதிக்கு அதிக வேலை தேவை என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
Pic Courtesy: Freepik