Thu Oct 29, 2026 | 12:51 PM IST

Weightloss Without Exercise: உடற்பயிற்சியே செய்யாமல் உடல் எடையை குறைக்கலாம்!

Weightloss Without Exercise: உடற்பயிற்சியே செய்யாமல் உடல் எடையை குறைக்கலாம்!Weightloss Without Exercise: உடற்பயிற்சியே செய்யாமல் உடல் எடையை குறைக்கலாம்!

Weightloss Without Exercise: உடல் எடையை குறைப்பது என்பது பலரின் இலக்காக இருக்கிறது. ஆனால் வேகமாக ஓடும் இந்த காலத்தில் அதற்கென தனி நேரம் ஏதும் ஒதுக்கமுடிவதில்லை. உடல் எடையை குறைக்க வேண்டும் என நாள் ஒன்றுக்கு பலமுறை தோன்றினாலும் நேரமும், சூழ்நிலையும் அதற்கான சூழ்நிலையை அமைத்துக் கொடுப்பதில்லை. தனிப்பட்ட உடற்பயிற்சிகளை மேற்கொண்டாலும், இந்த பானங்களும் உணவுகளும் உங்கள் உடல் எடையை குறைக்க உதவும்.

உடல் எடையால் வரும் பல பிரச்சனைகள்

ஆரோக்கியம் எவ்வளவு முக்கியம் என்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் பலர் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள் என்று சொல்ல தேவையில்லை. எந்தவொரு பிரச்சனையிலிருந்தும் மீள்வது மிகவும் கடினம். எனவே ஆரோக்கியத்தில் எப்போதும் விழிப்புடன் இருங்கள். அதிக எடை என்பது பல உடல்நலக் கோளாறுக்கு வழிவகுக்கும்.

இதையும் படிங்க: ஆரோக்கியமான கூந்தல் வேண்டுமா? உங்களுக்கான 6 ஆசனங்கள் இங்கே…

தினசரி பழக்கங்கள் மிக முக்கியம்

நீங்கள் உண்ணும் உணவு, வாழ்க்கை முறை, பழக்கவழங்கங்கள் நன்றாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நீங்கள் தினசரி செய்யும் சிறிய தவறு கூட எதிர்காலத்தில் பெரிய பிரச்சனைக்கு வழிவகுக்கும். எனவே பழக்கவழக்கங்கள் என்பது மிக முக்கியம். சரியான வாழ்க்கை முறையை கடைபிடித்தல் அவசியம். அதிக எடை என்பது பலர் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாகும்.

எடை குறைக்க உதவும் பானங்கள்

ஆரோக்கியமான உணவுகள் என்பது பல வகைகளுக்கு உதவுகிறது. சில பானங்களின் மூலம் உங்கள் உடல் எடையைக் குறைக்கலாம்.

சோம்பு தண்ணீரில் சீரகத்தை கலந்து குடிக்கலாம். இது எடை இழப்புக்கு உதவுகிறது. அதோடு நோய் நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்க வல்லது. ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் அற்புதமானது. சீரக விதையில் கலோரிகள் மிகக் குறைவு. செரிமான பிரச்சனைகளை நீக்குகிறது. செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது. மேலும், சீரகத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இது சீரகம் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்ஸ உடலை சுத்தப்படுத்துகிறது.

சோம்பின் நன்மைகள்

சோம்பில் அதிக வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இது எடையைக் குறைக்கவும், செரிமான அமைப்பை மேம்படுத்தவும் உதவுகிறது. சோம்பில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பைட்டோநியூட்ரியண்ட்கள் அதிகம் உள்ளது. உணவு நார்ச்சத்தும் இதில் அதிகம். சோம்பில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கொழுப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் செரிமான செயல்முறையை கவனித்துக்கொள்ள நன்றாக வேலை செய்கிறது. சோம்புக்கு டையூரிடிக் தன்மையும் உள்ளது. இது உடலில் உள்ள கெட்ட பொருட்களை வெளியேற்றும்.

ஒரு கப் வெந்நீரை எடுத்து அதில் சீரகம், சீரகம், சோம்பு ஆகியவற்றை ஊற வைக்கவும். இரவு முழுவதும் அப்படியே விடவும். அப்போது நீர் இவற்றின் அனைத்து குணங்களையும் உறிஞ்சி, மறுநாள் அருந்தினால் சிறந்த பலன் கிடைக்கும்.

மஞ்சள் பால்

மஞ்சள் பால் சளி, இருமல் மற்றும் பிற நோய்களை குணப்படுத்துகிறது. இது எடை குறைக்க உதவுகிறது மற்றும் செரிமானத்தை மேம்படுத்துகிறது. மஞ்சளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளதால், உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை நீக்குகிறது. இதில் கால்சியம் மற்றும் புரதம் உள்ளது. இது சிறந்த தூக்கம் மற்றும் எடை இழப்புக்கு உதவுகிறது.

பீட்ரூட் மற்றும் வேப்பம்பூ சாறு

பீட்ரூட் மற்றும் வேப்பம்பூ சாறு மூலம் தயாரிக்கப்படும் இந்த பானம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது உங்களுக்கு உடல் நச்சு பானமாக செயல்படுகிறது. இந்த பானத்தை குடிப்பதால் உடலில் உள்ள நீரிழப்பு நீங்கும். அதோடு, நமக்கு ஏதேனும் மன அழுத்தம் ஏற்பட்டால், அது உடனே மறைந்து, மனம் அமைதியாக இருக்கும்.

இதையும் படிங்க: பிராணயாமாவின் நன்மைகளைப் பெற 6 உதவிக்குறிப்புகள் இங்கே…

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டை ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது ஆக்ஸிஜனேற்ற மற்றும் ஆண்டிபயாடிக் பண்புகளைக் கொண்டுள்ளது. இது ஒரு முழுமையான டிடாக்ஸ் பானமாக செயல்படுகிறது. இது கொழுப்பை எரிக்க உதவுகிறது. சுவை பிடிக்கவில்லை என்றால் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்துக் கொள்ளலாம். எடை இழப்புக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

வெந்தய விதைகள்

ஊறவைத்த வெந்தய விதைகள் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது பொதுவாக காலையில் உண்ணப்படுகிறது. ஆனால் இரவு நேரத்திலும் சாப்பிடலாம். விதைகள் உடலில் வெப்பத்தை உண்டாக்கி எடையைக் குறைக்க உதவுகின்றன. இது அஜீரணத்திற்கு சிறந்த மருந்தாகும்.

Image Source: Freepik

Read Next

→ Weight Loss Tips: பால் பொருட்களை பயன்படுத்தி எடையை குறைப்பது எப்படி?

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.