உடல் எடை குறைப்பு பயணம் என்பது எப்போதும் கடினமான விஷயமாகும். சரி, அப்படியே விட்டுவிடலாம் என்றால் அதுவும் முடியாது. உடல் எடையை குறைப்பது என்பது ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மிகவும் முக்கியமானது.
சரி, உடல் எடையை குறைப்பது என்பது மட்டும் ஏன் அவ்வளவு கடினமான விஷயமாக இருக்கிறது என்பது குறித்து அறிய ஆராய்ச்சியாளர்கள் முயற்சித்து வருகிறது. இதற்கான ஒரு பதிலை கண்டுபிடித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதில், "கொழுப்பு செல்கள் குறிப்பிடத்தக்க எடை இழப்புக்கு பிறகும் உடல் பருமனின் நினைவகத்தை எடுத்துச் செல்வதாக" கண்டறிந்துள்ளனர்.
அதிகம் படித்தவை: Side effects of Tea: காலை வெறும் வயிற்றில் ஏன் பால் டீ குடிக்கக் கூடாது தெரியுமா?
புரியும்படி சொன்னால் நீங்கள் எடையை குறைத்தாலும், கொழுப்பு செல்கள் நினைவகத்தின் காரணமாக அதை மிக விரைவாக திரும்பப் பெறுவதற்கான அதிக வாய்ப்புகள் உண்டு. இதன்மூலம் குறைந்த எடை மீண்டும் அதிகரித்துவிடும். இதனால் எடை இழப்பை பராமரிப்பது கடினமானதாக இருக்கிறது.
மரபணுக்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை கட்டுப்படுத்தும் இரசாயன குறிப்பான்களின் தொகுப்பான எபிஜெனோமை உடலை பருமன் மாற்றுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாற்றங்களானது கொழுப்பு செல்கள் சாதாரணமாக செயல்படும் திறனை மாற்றும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால் எடை இழப்புக்கு பிறகும், இந்த மரபணு செயல்பாடானது உடல் பருமனுடன் இணைக்கப்பட்டே இருக்கிறது, இது அந்த நபரின் இழந்த எடையை மீண்டும் பெறுவதை மிக எளிதாக்குகிறது.
ETH சூரிச்சின் உயிரியலாளரும் ஆய்வின் இணை ஆசிரியருமான டாக்டர். லாரா ஹிண்டேவின் அறிக்கையில் இதுகுறித்து குறிப்பிடுகையில், இது உங்கள் தவறு அல்ல. உடல் பருமன் பற்றிய நினைவாற்றலானது எடையைக் குறைப்பதைச் சவாலாக மாற்றுகிறது, மேலும் இதற்கு நீண்ட கால கவனிப்பு தேவைப்படுகிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆராய்ச்சி ரீதியாக சொல்லும் உண்மை
கடுமையான உடல் பருமன் உள்ளவர்கள் மற்றும் ஒருபோதும் பருமனாக இல்லாதவர்களிடமிருந்து கொழுப்பு திசுக்களை எடுத்து ஆராய்ச்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. குழு மரபணு செயல்பாட்டில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளைக் கண்டறியப்பட்டுள்ளது. உடல் வீக்கத்துடன் தொடர்புடைய சில மரபணுக்கள் பருமனான நபர்களில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சை உட்பட பல முயற்சிகள் மேற்கொண்டு அதிக அளவு எடை இழந்த பிறகும் இந்த முறைகள் மாறவில்லை. எலிகள் மீதான சோதனைகளில் கண்டுபிடிப்புகள் பிரதிபலித்தன, அங்கு எலிகள் மெலிந்த பிறகும் கொழுப்பு செல்களில் எபிஜெனெடிக் மாற்றங்கள் தொடர்ந்தன என்பது உறுதி செய்யப்பட்டுள்ளன.
முதலில் உடல் பருமனை தடுப்பதன் முக்கியத்துவத்தை இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது. எடை இழப்புக்குப் பிறகு மக்கள் மெலிதாக இருக்க முடியும் என்றாலும், அதற்கு நிலையான முயற்சி மற்றும் நிரந்தரமான நம்பிக்கை தேவைப்படுகிறது.
இதையும் படிங்க: Healthy Lungs: உங்கள் நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த எளிய வழிமுறைகள்!
கொழுப்பு செல்கள் உடல் பருமனை எவ்வாறு நினைவில் கொள்கின்றன என்பது குறித்த கண்டுபிடிப்பு தகவல்கள் விரைவில் வெளியாகும் என நம்பப்படுகிறது.
image source: freepik