மழைக்காலத்தில் பொதுவாக மக்களுக்கு சூடான பொருளை சாப்பிடவும் குடிக்கவும் பிடிக்கும். மழைக்காலத்தில் சந்தையில் கிடைக்கும் காரமான பொருட்கள் உங்களை அதிகம் ஈர்க்கும். ஆனால் இந்த பருவத்தில் ஒருவர் தனது உணவுப் பழக்கவழக்கங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
ஏனெனில் இந்த பருவம் பல நோய்களையும் கொண்டு வருகிறது. மழைக்காலத்தில் சாப்பிடுவதில் கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தால், உணவு விஷம், வயிற்றில் தொற்று மற்றும் காலரா, வயிற்றுப்போக்கு போன்ற நோய்களுக்கு நீங்கள் பலியாகலாம். மழைக்கால டயட் முறை அதாவது மழைக்காலத்தில் என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக்கூடாது என்ன சாப்பிடக்கூடாது என்பது குறித்து பார்க்கலாம்.
அதிகம் படித்தவை: Ice Cream in Monsoon: மழைக்காலத்தில் ஐஸ் சாப்பிடுவது நல்லதா? விஷயமே வேற..
மழைக்கால டயட் டிப்ஸ்
இந்த பருவத்தில் பருப்பு வகைகள், காய்கறிகள் மற்றும் குறைந்த கொழுப்புள்ள உணவுகளை உண்ணுங்கள்.
மழையின் போது உடலில் வட்டா அதாவது காற்று அதிகரிக்கிறது, எனவே லேசான மற்றும் எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவுகளை மட்டுமே சாப்பிடுங்கள்.
நீங்கள் உணவில் விருப்பமுள்ளவராக இருந்தால், வீட்டில் சுத்தமாகத் தயாரித்த பொருட்களைச் சாப்பிடுங்கள்.
மழைக்காலத்தில் வளிமண்டலத்தில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். இதனால் தாகம் குறைகிறது. ஆனாலும் தண்ணீர் குடியுங்கள். உடலை நீரேற்றமாக வைத்திருக்க வேண்டியது முக்கியம்.
மழையில் எலுமிச்சை சாறு போன்றவற்றை குடிக்கவும்.
பழங்களை முழுவதுமாக சாப்பிடுவதற்கு பதிலாக, சாலட் வடிவில் எடுத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இந்த சீசனில் பழங்களில் பூச்சிகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால் அவற்றை வெட்டி சாலட் வடிவில் சாப்பிட்டால் பழங்கள் உள்ளே இருந்து கெட்டுப் போயிருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள முடியும்.
காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு எப்படி இருக்க வேண்டும்?
காலை உணவாக ப்ளாக் டீயுடன் போஹா, உப்மா, இட்லி, தோசை போன்றவற்றை சாப்பிடலாம்.
மதிய உணவில் வறுத்த உணவை சாப்பிடுவதற்கு பதிலாக, பருப்பு மற்றும் காய்கறிகளுடன் சாலட் மற்றும் ரொட்டி சாப்பிடுங்கள்.
இரவு உணவிற்கு காய்கறிகள், சப்பாத்தி போன்றவற்றை சாப்பிடலாம்.
இந்த பருவத்தில் சூடான சூப் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தினமும் இரவில் மஞ்சள் கலந்த பாலைக் குடிப்பதால் வயிறு மற்றும் சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.
தர்பூசணி, முலாம்பழம் போன்ற பருவகால பழங்களில் இருந்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை நீங்கள் பெறலாம்.
மழைக்காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்
மழைக்காலத்தில் சூடான பக்கோடா, சமோசா போன்றவற்றைச் சாப்பிட ஆசைப்படுவது வழக்கம். ஆனால் உடல் நலம் சார்ந்த ஏதாவது பிரச்சனை இருந்தால் அவற்றில் இருந்து விலகி இருப்பது நல்லது.
கனமான உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு, எண்ணெய் உணவுகள், தெருவோர உணவுகளை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.
இந்த சீசனில் தயிரில் செய்யப்பட்ட பொருட்களை உட்கொள்வதை குறைத்தால் நல்லது.
இந்த பருவத்தில் பழச்சாறுகளை உட்கொள்ளுங்கள். மழையின் போது பழங்கள் தண்ணீரில் நனைந்து இருக்கும், எனவே வெட்டி ஆரோக்கியமான முறையில் ஜூஸ் ஆக குடிப்பது நல்லது.
மழைக்காலத்தில் சுற்றிலும் பசுமையாக காட்சியளிக்கும் காய்கறிகளில் பூச்சிகள் அதிகமாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், இலை காய்கறிகள் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
மாவு பொருட்கள், ஐஸ்கிரீம், இனிப்புகள், வாழைப்பழம், முளைத்த தானியங்கள் போன்றவற்றை குறைவாக சாப்பிடுங்கள்.
மழைக்காலத்தில் தின்பண்டங்கள் மற்றும் குளிர்பானங்களை உட்கொள்வதும் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்.
இந்த சீசனில் ரோடுகளில் சேறு, தண்ணீர் தேங்கியிருக்கும். அத்தகைய சூழ்நிலையில், சாலையோரங்களில் கிடைக்கும் உணவு மற்றும் பானங்களைத் தவிர்க்கவும்.
மழைக்காலத்தில் ஆரோக்கியமான உணவு முறையை கடைபிடிக்க வேண்டியது மிக முக்கியம்.
image source: freepik