Cheapest Diet Plan: நடிகர் சரத்குமார் மாதிரி கட்டுமஸ்தா இருக்க இதை சாப்பிடுங்க!

  • SHARE
  • FOLLOW
Cheapest Diet Plan: நடிகர் சரத்குமார் மாதிரி கட்டுமஸ்தா இருக்க இதை சாப்பிடுங்க!


Cheapest Diet Plan: இன்றைய காலக்கட்டத்தில் ஏராளமான நடிகர்கள் சிக்ஸ் பேக் வைத்திருந்தாலும் சில காலக்கட்டம் மட்டுமே அதை ஃபிட்டாக வைத்திருப்பார்கள். சிக்ஸ் பேக் உடல் நிரந்தரமாக வைப்பது சிரமம் என்றாலும் கட்டுக்கோப்பாக உடலை நிலையாக வைத்திருக்கலாம்.

அப்படி அன்றிலிருந்து இன்றுவரை அதாவது 90ஸ் காலக்கட்டத்தை தொடங்கி இன்றைய காலக்கட்டம் வரை ஒரே மாதிரியாக கட்டுக்கோப்பாக உடலை வைத்திருப்பதில் வல்லவர் நடிகர் சரத்குமார். உடலை கட்டுக்கோப்பாகவும் ஆரோக்கியமாகவும் ஒரேமாதிரியாகவும் இன்றளவும் சரத்குமார் வைத்திருக்கிறார்.

பெரிய பெரிய ஹீரோவுக்கெல்லாம் மேக்-அப் போட்டப் பிறகுதான் வயதே தெரியவில்லை என்று கூற தோன்றும். ஆனால் இவரை சாதாரணமாக பார்த்தாலே அப்படிதான் தோன்றும்.

சரத்குமார் எப்படி உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார் தெரியுமா?

இவ்வளவு கூறுகிறோமே, சரத்குமார் வயதையும் கூறிதானே ஆக வேண்டும். ஆம், சரத்குமார் வயது 70 ஆகும். ஆம் 1954ம் ஆண்டு பிறந்த சரத்குமார் தற்போது 70 வயதிலும் உடலை ஃபிட்டாக வைத்திருக்கிறார். இது எப்படி என்ற கேள்வி பலருக்கும் இருக்கும்.

இதுகுறித்த கேள்வியை தனியார் நிறுவன நேர்காணலில் தொகுப்பாளர் சரத்குமாரிடமே கேட்டுள்ளார். அதற்கு அவரும் தனது தினசரி உணவுமுறை குறித்து பதிலளித்துள்ளார். சரத்குமார் என்னப்பா நிறைய சம்பாதிக்கிறார், அவர் டயட் இருப்பார் என்றால் அதுதான் இல்லை. அவர் இருக்கும் டயட் முறைக்கான செலவு என்பது மிகக் குறைவுதான்.

மனிதருக்கு உணவு கட்டுப்பாடு மிக முக்கியம்

சரி, இப்படி யோசித்து பார்க்கலாம், அவரிடம் தான் நிறைய பணம் இருக்கிறதே, அவர் நினைத்தால் நிறைய சாப்பிடலாமே. அவ்வளவு பணம் வைத்திருக்கும் அவரே உணவுமுறையில் மிக துல்லியமாக கவனம் செலுத்துகிறார் என்றார்.

நாம் ருசியில் கவனம் செலுத்தாமல் உடல் ஆரோக்கியத்தில் எவ்வளவு நுணுக்கமாக கவனம் செலுத்த வேண்டும் என புரிந்துக் கொள்ளுங்கள். சரி, சரத்குமார் தினசரி டயட் முறை குறித்து பார்க்கலாம்.

சரத்குமார் டயட் முறை

காலையில் எழுந்ததும் பிளாக் காபியில் நெய் ஊற்றி சாப்பிடுவாராம்.

பிறகு காலை 10 மணிக்கு 4 முட்டைகளின் வெள்ளைக்கரு மட்டும் மறக்காமல் சாப்பிட வேண்டும்.

அதன்பின் காலை 11 மணிக்கு ABC ஜூஸ் எனப்படும் ஆப்பிள், பீட்ரூட், கேரட் கலந்த ஜூஸ் குடிப்பாராம்.

மதிய உணவாக சிக்கன் 2 பீஸ் சற்று பெரியதாக, அதனுடன் வேகவைத்த காய்கறிகள் சாப்பிடுவாராம்.

பின் மாலை 4 மணிக்கு அவல் உடன் வேர்க்கடலை உள்ளிட்ட பொருட்கள் கலந்து சாப்பிடுவாராம்.

அதன்பின், கடைசியாக இரவு 7 மணிக்கு மட்டன் அல்லது சிக்கன் சூப் குடிப்பாராம். அவ்வளவுதான்

உடற்பயிற்சியும் இருந்தால் நல்லது

இவை அனைத்தும் உணவுமுறை என்றாலும் உடற்பயிற்சி என்பதும் மிக அவசியம். என்னதான் உணவுமுறையை பின்பற்றினாலும் தினசரி உடற்பயிற்சி என்பதும் உடல் ஆரோக்கியத்திற்கும், மன ஆரோக்கியத்திற்கும் மிக நல்லது.

Image Source: FreePik

Read Next

Fruit Vs Fruit Juice: பழத்தை சாப்பிடுவது நல்லதா.? ஜூஸ் குடிப்பது நல்லதா.? தெரிஞ்சுக்கலாம் வாங்க..

Disclaimer

குறிச்சொற்கள்