காந்தாரா படத்தில் நடித்த ரிஷப் ஷெட்டி, தனது நடிப்பால் மட்டுமல்லாமல், கட்டுமஸ்தான உடலாலும் ரசிகர்களை கவர்ந்தார். திரையில் பார்க்கும் அந்த வலிமையான உடலை உருவாக்குவதற்கு அவர் மேற்கொள்வது சாதாரண முயற்சி அல்ல. தினசரி உணவுமுறை முதல் யோகா வரை அவர் கடைபிடிக்கும் ஃபிட்னஸ் சீக்ரெட்ஸ் இங்கே.
காலை எழுந்ததும் என்ன செய்கிறார்?
ரிஷப் ஷெட்டி தினம் காலை எழுந்ததும் முதலில் ஒரு பெரிய கப் சூடான தண்ணீர் குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். இது உடலின் மெட்டபாலிசத்தை சீராக வைத்தும், கொழுப்பை எரிக்கவும் உதவுகிறது.
காலை உணவில் பாரம்பரியம்
பெரும்பாலான நடிகர்கள் போல ஹோட்டல் ஸ்டைல் உணவுகளை விரும்பாமல், ரிஷப் வீட்டிலேயே சமைக்கும் பாரம்பரிய உணவுகளை சாப்பிடுவார்.
* இட்லி
* பொங்கல்
* சாம்பார்
* சட்னி
இவையே அவரது காலை உணவில் அதிகம் இடம்பெறும்.
ரகசிய சூப்பர் ஃபுட்
அவருடைய டயட்டில் அதிகமாக இடம் பெறுவது பீன்ஸ். எப்போதும் காய்கறிகளும், கீரைகளும் நிறைந்த உணவுகளை விரும்புகிறார். பீன்ஸ் அவரது உடல் கட்டமைப்புக்கான ‘சீக்ரெட் வெப்பன்’ எனலாம்.
5 முறை உணவு
ரிஷப் ஒரே நேரத்தில் அதிகமாக சாப்பிடுவதில்லை. காலை, மதியம், இரவு என 3 வேளை சாப்பிடுவதற்குப் பதிலாக, அதை 5 முறை பிரித்து சிறுசிறு அளவில் எடுத்துக் கொள்வார். ஒவ்வொரு முறையும் பசுமையான காய்கறிகள் இடம்பெறும்.
இரவு உணவில் கடுமையான கட்டுப்பாடு
ரிஷப் இரவு உணவை மிக சீக்கிரமே முடித்துக் கொள்வார். பெரும்பாலும் 7.30 மணிக்குள் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். எப்போதாவது பிஸியாக இருந்தால் கூட அதிகபட்சம் 8.30 மணிக்குள் உணவை முடித்துவிடுவார். சூட்டிங் இடைவெளியில் அவர் சாப்பிடுவது எதுவும் இல்லை. பசி வந்தாலும் வெறும் இளநீர் குடித்துவிடுவார்.
வொர்க்அவுட் – களரிப்பயிற்சி முதல் யோகா வரை
ரிஷப்பின் வொர்க்அவுட் வழக்கம் சாதாரண ஜிம்மில் மட்டுமே அல்ல.
* களரிப்பயிற்சி (Martial Arts)
* சண்டைப் பயிற்சி
* ஸ்டிரெங்க்த் டிரெயினிங்
* யோகாசனம்
இவைகளை எல்லாம் அவர் தினசரி அட்டவணையில் இணைத்துள்ளார். குறிப்பாக யோகாசனம் மற்றும் சூர்ய நமஸ்காரம் அவருக்கு மிகப் பிடித்தவை.
ஜங்க் உணவுகளுக்கு ‘NO’
பர்கர், பீட்சா, பிரெஞ்ச் பிரைஸ் போன்ற ஜங்க் உணவுகளுக்குத் தான் ஒரு வித விருப்பமும் இல்லை. இயற்கையான வீட்டுச் சமைப்புகளையே விரும்புகிறார்.
மன அமைதிக்கான யோகாசனம்
உடலை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக மட்டுமல்ல, மன அமைதிக்காகவும் அவர் தினமும் காலை, இரவு என இரண்டு வேளைகளில் யோகா செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
இறுதியாக..
ரிஷப் ஷெட்டியின் உடலைப் பார்த்து ரசிகர்கள் வியப்பது சாதாரணம். ஆனால் அதன் பின்னால் இருக்கும் ரகசியம் – கட்டுப்பாடான உணவுமுறை, பாரம்பரிய காய்கறிகள், சீரான உடற்பயிற்சி மற்றும் யோகா.
பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனையாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.