Expert

Virat Kohli diet plan: விராட் கோலி எப்படி இவ்வளவு ஃபிட்டாக இருக்கிறார் தெரியுமா? இதோ அவரின் ஃபிட்னஸ் ரகசியம்!!

  • SHARE
  • FOLLOW
Virat Kohli diet plan: விராட் கோலி எப்படி இவ்வளவு ஃபிட்டாக இருக்கிறார் தெரியுமா? இதோ அவரின் ஃபிட்னஸ் ரகசியம்!!


Virat Kohli diet plan in Tamil: இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தனது உணவுத் தேர்வுகள் குறித்து மிகவும் வெளிப்படையாகவே கூறியுள்ளார். அவர் தனது கிரிக்கெட் திறமைக்காக மட்டுமல்ல, உடற்தகுதிக்கான அர்ப்பணிப்பிற்காகவும் கொண்டாடப்படுகிறார். அவர் ஆட்டத்தில் உச்சத்தில் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

குறிப்பாக அவரின் ஃபிட்னஸை கண்டு பிரம்மிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இத்தனை வயது கடந்து இளமையான , ஃபிட்டான தோற்றத்தை கொண்டிருக்கிறார் எனில் அது அவருடைய டயட் முறையும், ஒர்க்அவுட் முறையும்தான் காரணம். அப்படி என்னவெல்லாம் செய்கிறார் தெரியுமா..?

கோஹ்லி பல ஆண்டுகளாக தனது மாறிவரும் உணவுப் பழக்கவழக்கங்களைப் பற்றி வெளிப்படையாக இருப்பதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுக்க பலரை ஊக்கப்படுத்தியுள்ளார்.

இந்த பதிவும் உதவலாம் : Nayanthara Diet Plan: 39 வயதிலும் சிக்குனு ஃபிட்டான உடல்.! சீக்ரெட் உடைத்த நயன்தாரா..

தனியார் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கோஹ்லி தனது கடுமையான உணவு முறை பற்றி கூறியுள்ளார். இவர் சமீபத்தில் சைவ உணவுக்கு மாறியுள்ளதாக கூறியுள்ளார். தனது உணவில் வைட்டமின்கள், கூடுதல் நீரேற்றம், புரதம் இருப்பதை உறுதியுடன் இருப்பாராம்.

விராட் கோலி ஃபிட்னஸ் ரகசியம் என்ன?

விராட் கோலி எப்போதும் ஒரே மாதிரியான உணவையே ஆறு மாதங்களுக்கு மூன்று வேலையும் சாப்பிடுவாராம். அது மட்டும் அல்ல, அவர் பெரும்பாலும் அவித்த அல்லது வேகவைத்த உணவுகளையே சாப்பிடுவராம். மேலும், அவர் சாப்பிடும் உணவுகளில் மசாலா சேர்ப்பதில்லையாம்.

உப்பு, மிளகு தூள் மற்றும் எலும்பிச்சை சாறு மட்டுமே தனது உணவில் சேர்த்துக்கொள்வாராம். பெரும்பாலும் வெளியில் சாப்பிடுவதை தவிர்த்துவிடுவாராம். தனது உணவில் பெரும்பாலும் சாலட்களை மட்டுமே சேர்ப்பார்களாம். சாலட்டில் 4 சொட்டு ஆலீவ் ஆயிலை சேர்ப்பராம்.

இந்த பதிவும் உதவலாம் : Belly Fat Loss Drink: ஒரே வாரத்தில் 5 கிலோ உடல் எடையைக் குறைக்கும் சூப்பர் ட்ரிங் இதோ!

விராட் கோலிக்கு பிடித்த சாலட் செய்முறை

  • இதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி, அதில் நறுக்கிய புரோக்கோலி மற்றும் சுவீட் கார்ன் உப்பு 5 நிமிடம் சேர்த்து வேகவைக்கவும்.
  • இப்போது, ஒரு கடாயில் 1 ஸ்பூன் ஆலீவ் ஆயில் சேர்த்து நறுக்கிய பனீர் சேர்த்து வறுத்து எடுக்கவும்.
  • இதையடுத்து, ஒரு கிண்ணத்தில் கால் கப் முட்டைகோஸ், கால் கப் வெள்ளரிக்காய், கால் கப் பச்சை குடை மிளகாய், சுகினி, கால் கப் மஞ்சள் குடை மிளகாய், கால் கப் சிவப்பு குடைமிளகாய், சிறிது நறுக்கிய வெங்காயம், சிறிதாக நறுக்கிய தக்காளி, உப்பு, மிளகு தூள், வறுத்த பன்னீர், வேகவைத்த புரோக்கோலி மற்றும் சுவீட் கார்ன் சேர்த்து நன்றாக கலக்கவும்.

இந்த பதிவும் உதவலாம் : Weight Loss Journey: எடை இழப்பு பயணத்தில் உள்ளீர்களா.? இதை நினைவில் கொள்ளுங்கள்..!

  • பின் கடைசியாக அரை லெமன் ஜூஸ் சேர்த்து மிக்ஸ் செய்யவும். இது உங்களை நிறைவாக வைப்பதுடன், உடல் எடையை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.

Pic Courtesy: Freepik

Read Next

Belly Fat Loss Drink: ஒரே வாரத்தில் 5 கிலோ உடல் எடையைக் குறைக்கும் சூப்பர் ட்ரிங் இதோ!

Disclaimer