Thalapathy Vijay Fitness Secret: தமிழ் திரையுலகில் முன்னணி மற்றும் பிரபல நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் விஜய். இவரை இளைய தளபதி என்றும் ரசிகர்கள் செல்லமாக அழைப்பதுண்டு. நடிப்பது மட்டும் இன்றி பாடகராகவும் வலம் வருகிறார். இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் இவரும் ஒருவர். என்னதான் இவர் தமிழ் பிரபலமாக இருந்தாலும், தனது அட்டகாசமான கதாபாத்திரம் மற்றும் நடிப்பால், கேரளா, கர்நாடகா, ஆந்திரா என இந்தியா முழுவதும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.
குறிப்பாக அவரது நடனத்திற்கு என்றே தனி ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் லோகேஸ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'லியோ' மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் இவர் எப்படி இப்பவும் இவ்வளவு இளமையாக இருக்கிறார் என நம்மில் பலர் சிந்திரத்திருப்போம். 49 வயதாகியும் இவர் இன்னும் ஃபிட்டாக இருப்பதைக் கண்டு பலரும் ஆச்சரியப்படுகிறார்கள்.
இந்த பதிவும் உதவலாம் : PM Modi Health Secrets: 70 வயதிலும் ஃபிட்டாக இருக்க மோடி இதை தான் செய்கிறார்.!
இத்தனைக்கும் இவர் அதிகமாக உடற்பயிற்சியில் ஈடுபடக்கூடியவர் அல்ல. இருப்பினும் இந்த வயதிலும் ஃபிட்டாக எப்படி இருக்கிறார் என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. நடிகர் விஜய் இன்னும் இளமையாக இருக்க, அவரது வாழ்க்கைமுறை மற்றும் உணவு பழக்கம் தான் என சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் இயக்குனர் லோகேஸ் கனகராஜ் நடிகர் விஜய்யின் ஃபிட்னஸ் ரகசியம் குறித்த சில விஷயங்களை வெளியிட்டுள்ளார். அவற்றை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஆரோக்கியமான உணவு
லியோ படத்தில் நடிகர் விஜய்யின் ஒவ்வொரு சண்டை காட்சியையும் நீங்கள் கண்ணிமைக்காமல் பார்த்து ரசித்திருப்பீர்கள். இதற்க்கு காரணம், உடற்தகுதி மீதான விஜய்யின் அர்ப்பணிப்பு, சண்டைக்காட்சிகளுக்கான அவரது அர்ப்பணிப்பு தான். அதே போல டீ மற்றும் காஃபி உட்கொள்வது இல்லை.
க்ராஷ் டயட் மற்றும் ஃபேட் டிரெண்டுகளை அவர் கடைபிடிப்பதில்லை. விஜய்யின் ஃபிட்னஸ் ரகசியம், சமச்சீரான மற்றும் ஆரோக்கியமான உணவுமுறை தான். இது அவரது உடலுக்கு ஊட்டமளிப்பதற்கும் அவரது ஆற்றலைத் தூண்டுவதற்கும் துல்லியமாக திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பதிவும் உதவலாம் : Weight Loss Drinks: இந்த ஜூஸ் எல்லாம் குடிங்க! மெட்டபாலிசம் அதிகரிக்கும், உடல் எடையும் குறையும்
லேசான உணவு
நடிகர் விஜய் நாள் முழுவதும் சிறிய, லேசான உணவுகளுக்கு முன்னுரிமை அளித்து, உடல் எடையைக் குறைக்காமல், உடலுக்குத் தேவையான சத்துக்களைப் பெறுவதை உறுதிசெய்கிறார். இதனால், உடல் எடை அதிகரிக்காமல் அவருக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும் மற்றும் எளிதில் ஜீரணமாகும்.
தினசரி கார்டியோ

நடிகர் விஜய் தினமும் 30 முதல் 40 நிமிடங்கள் கார்டியோ உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். இது கலோரிகளை எரிப்பது மட்டுமல்ல; இந்த நடைமுறை அவரை உற்சாகப்படுத்துகிறது மற்றும் இளமையின் உயிர்ச்சக்தியை வெளிப்படுத்துகிறது. கார்டியோ உடற்பயிற்சி இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது மற்றும் உடலை கட்டுக்கோப்பாக வைக்கவும் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம் : Weight Loss Tips: வாரத்திற்கு 7 நாட்கள் காலை முதல் இரவு வரை இதை சாப்பிடுங்க!
காலை உணவில் கவனம்
விஜய் தனது நாளை காலை 9 மணிக்கு காலை உணவுடன் துவங்குவார். காலை உணவாக புரோட்டீன் நிறைந்த இட்லிகள், முட்டைகள், பீனட் பட்டர், புத்துணர்ச்சியூட்டும் பழங்கள் மற்றும் தேங்காய்த் தண்ணீர் ஆகிவற்றை எடுத்துக்கொள்வார். இவை அன்றைய நாளுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது.
சத்தான மதிய உணவு
விஜய்க்கு மதிய உணவு என்பது அவரது உடலையும் ஆன்மாவையும் ஆரோக்கியமாக வைக்கும் வீட்டில் சமைத்த உணவு மட்டுமே. இதில், பச்சை காய்கறிகள், சாதம், ரொட்டி, பொரியல், முட்டை போன்றவை இருக்கும்.
சீக்கிரமாக இரவு உணவு

கனமான இரவு உணவை மறந்து விடுங்கள்! இரவு 7-7.30 மணியளவில் விஜய் தனது இரவு உணவை இலகுவாகவும் சீக்கிரமாகவும் எடுத்துக்கொள்வார். இந்த புத்திசாலித்தனமான பயிற்சி அவரது மெலிந்த உடலமைப்பைப் பராமரிக்க உதவுகிறது மற்றும் ஒரு நல்ல இரவு தூக்கத்தை உறுதி செய்கிறது.
இந்த பதிவும் உதவலாம் : Water weight loss: உடல் எடையை ஈஸியா குறைக்க தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?
ஸ்மார்ட் ஸ்நாக்கிங்
உணவுக்கு இடையில் பசி எடுத்தால் கவலை இல்லை! விஜய் புத்துயிர் அளிக்கும் ஃப்ரூட் சாலட்களை சாப்பிடுவார். இது ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான வழியாக அவரது ஆற்றல் மட்டங்களை உயர்த்தி அவரது சுவை மொட்டுகளை திருப்திப்படுத்துகிறது.
Pic Courtesy: Freepik