How to make chicken 65 with bone: ஒருவர் ஆரோக்கியமாக இருக்க உணவு மிகவும் முக்கியம். ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொண்டால் பல ஆரோக்கிய பிரச்சினைகளை தவிர்க்கலாம் என்பது உண்மை. ஏனென்றால், ஆரோக்கியத்திற்கும் உணவுக்கும் அவ்வளவு தொடர்பு உள்ளது. நீங்கள் அறியாமல் செய்யும் உணவு தொடர்பான தவறால், பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். எனவே, ஆரோக்கியத்திற்கு நாம் சாப்பிடும் உணவு மிகவும் முக்கியம்.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ஒரு நிகழ்ச்சி. தற்போது, குக் வித் கோமாளி சீசன் 5 தொடங்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நம்மில் பலர் குக் வித் கோமாளியில் பிரபலங்கள் செய்யும் பல ரெசிபிக்களை வீட்டில் செய்து பார்ப்போம். கடந்த வாரம் குக் வித் கோமாளியில் நடிகர் விஜய் சேதுபதி மகாராஜா திரைப்படத்தின் பிரமோஷனுக்காக கலந்து கொண்டார்.
இந்த பதிவும் உதவலாம்: Mangalore Chicken Curry: CWC-யில் சுஜிதா செய்து அசத்திய மங்களூர் ஸ்டைல் கோரி காஸ்ஸி (ம) அக்கி ரொட்டி!
அப்போது, தனது மனைவிக்கு தான் புதிய சிக்கன் ரெசிபி கற்றுக்கொடுத்தாக கூறியிருந்தார். அதே ரெசிபியை சுஜிதாவுக்கும் கற்றுக்கொடுத்தார். நடிகர் விஜய் சேதுபதியின் ஸ்பெஷல் ரெசிபியான சிக்கன் 56 எப்படி செய்வது என உங்களுக்கு நாங்கள் கூறுகிறோம். இந்த வாரம் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இப்படி சிக்கன் செய்து கொடுத்து அசத்துங்கள்.
தேவையான பொருட்கள்:
- சிக்கன் - ½ கிலோ.
- புதினா - 1 கப்.
- கொத்தமல்லி இலை - 1 கப்.
- பச்சை மிளகாய் - 3.
- சீரகம் - 1 ஸ்பூன்.
- இஞ்சி - 1 துண்டு.
- பூண்டு - 4 பல்.
- மல்லித்தூள் - ⅓ ஸ்பூன்.
- கரம் மசாலா - ⅓ ஸ்பூன்.
- தயிர் - 3 ஸ்பூன்.
- மஞ்சள் தூள் - ⅓ ஸ்பூன்.
- மிளகு தூள் - ½ ஸ்பூன்.
- உப்பு - தேவையான அளவு.
- அரிசி மாவு - 2 ஸ்பூன்.
- எலுமிச்சை ஜூஸ் - 2 ஸ்பூன்.
- கறிவேப்பிலை - 1 கொத்து.
- எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:

- சிக்கன் 65 செய்ய முதலில் எடுத்து வைத்துள்ள சிக்கனை உப்பு மாற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு சுத்தம் செய்து எடுத்து வைக்கவும்.
- இப்போது ஒரு மிக்சி ஜாரில், பச்சை மிளகாய், சீரகம், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி இலை, புதினா சேர்த்து மை போல நன்கு அரைக்கவும்.
இந்த பதிவும் உதவலாம்: Mangalore Chicken Curry: CWC-யில் சுஜிதா செய்து அசத்திய மங்களூர் ஸ்டைல் கோரி காஸ்ஸி (ம) அக்கி ரொட்டி!
- இதையடுத்து, அரைத்த மசாலாவை சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனில் சேர்க்கவும். மேலும் அதில் மல்லித்தூள், கரம் மசாலா, தயிர், மஞ்சள் தூள், மிளகு தூள், அரிசி மாவு மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
- கடைசியாக அதில் எலும்பிச்சை சாறு சேர்த்து பிசைந்து 20 நிமிடம் ஊறவைக்கவும்.
- இப்போது, ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடேற்றவும். பின் அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.
- எண்ணெய் சூடானதும் ஊறவைத்த சிக்கனை கறிவேப்பிலை சேர்த்து ஒவ்வொன்றாக பொறித்து எடுக்க விஜய் சேதுபதியின் ஸ்பெஷல் சிக்கன் 65 தயார். இந்த வாரம் இப்படி சிக்கன் செய்து உங்கள் குடும்பத்தினரை அசத்துங்கள்.
Pic Courtesy: Freepik