How to make Ennai Kathirikai Kulambu: பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ஒரு நிகழ்ச்சி. தற்போது, குக் வித் கோமாளி சீசன் 5 தொடங்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
நம்மில் பலர் குக் வித் கோமாளியில் பிரபலங்கள் செய்யும் பல ரெசிபிக்களை வீட்டில் செய்து பார்ப்போம். கடந்த வாரம் குக் வித் கோமாளியில் நடிகர் விஜய் சேதுபதி மகாராஜா திரைப்படத்தின் பிரமோஷனுக்காக கலந்து கொண்டார்.
அப்போது, தனக்கு எண்ணெய் கத்திரிக்காய் கார குழம்பு மிகவும் பிடிக்கும் என கூறியிருந்தார். இதை தொகுப்பாளினி பிரியங்காவும் செய்து அசத்தி அவருக்கு பரிமாறினார். நடிகர் விஜய் சேதுபதிக்கு பிடித்தமான எண்ணெய் கத்திரிக்காய் கார குழம்பு எப்படி செய்வது என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Mangalore Chicken Curry: CWC-யில் சுஜிதா செய்து அசத்திய மங்களூர் ஸ்டைல் கோரி காஸ்ஸி (ம) அக்கி ரொட்டி!
தேவையான பொருட்கள்:
- கத்தரிக்காய் - ½ கிலோ.
- எண்ணெய் - 5 டீஸ்பூன்.
- உப்பு - தேவையான அளவு.
- சின்ன வெங்காயம் - ஒரு கையளவு.
- நறுக்கிய வெங்காயம் - 1/2 கப்.
- நறுக்கிய தக்காளி - 1.
- பூண்டு - ஒரு கைப்பிடி.
- பூண்டு - 10 பல்.
- கடுகு - ¼ ஸ்பூன்.
- வெந்தயம் - ¼ ஸ்பூன்.
- கறிவேப்பிலை - 1 கொத்து.
- மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்.
- கொத்தமல்லி தூள் - 1 டீஸ்பூன்.
- மஞ்சள் தூள் - ½ டீஸ்பூன்.
- புளி சிறிய நெல்லிக்காய் அளவு.
- பெருங்காயம் - 2 சிட்டிகை.
- தேங்காய் - 3 துண்டுகள்.
எண்ணெய் கத்திரிக்காய் கார குழம்பு செய்முறை:

- முதலில் கத்தரிக்காயை சுத்தம் செய்து, நான்காக கீறி வைக்கவும். கத்தரிக்காயை தனி தனி துண்டுகளாக வெட்டாமல், காம்பு பாக்கியத்தி ஒட்டியபடியும், கீழ் பகுதியை நான்காக வெட்டவும்.
- பின்னர், ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடேற்றவும். கடாய் சூடானவுடன் நல்லெண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் நன்றாக சூடானதும் அதில் கத்தரிக்காயை சேர்க்கவும். கத்தரிக்காய் நன்கு வதங்கும் வரை வதக்கவும். கத்தரிக்காய் முக்கால் வாசி வெந்தவுடன் தனியே. எடுத்து வைக்கவும்.
இந்த பதிவும் உதவலாம் :
- இப்போது, அதே காடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். பின் பூண்டு சேர்க்கவும். இதையடுத்து, ஒரு துண்டு இஞ்சி, தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
- இப்போது அதில் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். அதில், 3 துண்டு தேங்காய் சேர்த்து நன்கு வதக்கவும். இவை அனைத்தும் நன்கு வதங்கியது அதை நன்கு ஆறவைக்கவும்.
- வதக்கிய பொருட்கள் நன்கு ஆறியவுடன் மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு அரைக்கவும். அரைத்த விழுதை தனியே எடுத்து வைக்கவும்.
இந்த பதிவும் உதவலாம் : Chicken 65 Recipe: நடிகர் விஜய் சேதுபதியின் ஸ்பெஷல் ரெசிபியான சிக்கன் 56 செய்வது எப்படி?
- கடாயில் 3 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடேற்றவும். எண்ணெய் சூடானதும் கடுகு சேர்க்கவும். கடுகு நன்கு பொரிந்தவுடன், வெந்தயம், கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், 4 பல் பூண்டு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் அடுப்பை குறைவான தீயில் வைத்து, பெருங்காயத்தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். பின், அதில் சீரகம் மற்றும் மிளகு தூள் சேர்த்து வதக்கவும்.
- மசாலாவில் பச்சை வாசனை நீங்கியதும் அரைத்து வைத்த மசாலாவை அதில் சேர்த்து கலக்கவும். 3 நிமிடம் மசாலா பொருட்கள் வதங்கியதும் அதில் புளி கரைசல் சேர்க்கவும். பின் குழம்பு கொதிக்கையில் 2 சிறிய துண்டு வெள்ளம் சேர்க்கவும்.
இந்த பதிவும் உதவலாம் : Chicken Satti Curry: குக் வித் கோமாளியில் இர்பான் செய்த கேரளா சிக்கன் சட்டிக்கறி எப்படி செய்யணும் தெரியுமா?
- குழம்பு கொதிக்கும் நிலையில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவைக்கவும். குழம்பு கொதித்ததும் அதில் வதக்கி வைத்துள்ள கத்தரிக்காயை சேர்க்கவும். பின் குழம்பை 10 நிமிடம் நன்கு கொதிக்க வைக்கவும்.
- கத்தரிக்காய் நன்கு வெந்து குழம்பில் எண்ணெய் பிரிந்து வெந்ததும் அடுப்பை அணைக்கவும். இப்போது, இதை சூடான சாதத்துடன் சேர்த்து பரிமாறவும்.
Pic Courtesy: Freepik