$
Cook With Comali Irfan Meen Kulambu Recipe: இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மறக்குமா நெஞ்சம் என்ற தலைப்பில் போட்டி நடைபெற்றது. அதாவது தங்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத அளவுக்கு இருக்கும் ஒரு உணவை போட்டியாளர்கள் செய்ய வேண்டும் என்பது தான் இந்த தலைப்பின் கருப்பொருள்.
எதிலும் தங்களை அசைக்க முடியாது என்று, போட்டி போட்டு தங்களின் சமையல் கலையை வெளிப்படுத்தி வரும் போட்டியாளர்கள், இந்த வாரமும் அசத்துயுள்ளனர். அந்த வகையில் போட்டியாளர் இர்ஃபான் தனது சிறுவயதில், வருமையாக இருந்த நேரத்தில், இர்ஃபானுக்காக செய்து கொடுத்த மீன் குழம்பை இன்று செய்து அசத்தினார். இதனை சாப்பிட்டு தாமு பாராட்டினார். இந்த மீன் குழம்பை எப்படி செய்வது என்று இங்கே காண்போம்.

மீன் குழம்பு ரெசிபி (Meen Kulambu Recipe)
மசாலாவுக்கு தேவையான பொருட்கள்
- எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
- சின்ன வெங்காயம் - 15
- தக்காளி - 2
- வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
- மல்லி விதை - 2 டேபிள் ஸ்பூன்
- காய்ந்த மிளகாய் - 8
- இஞ்சி - சிறிய துண்டு
- பூண்டு - 8
- கறிவேப்பிலை - 1 கொத்து
- மிளகு - 1/4 டீஸ்பூன்
- சீரகம் - 1/2 டீஸ்பூன்
குழம்பு செய்வதற்கு தேவையான பொருட்கள்
- நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
- கடுகு - 1/2 டீஸ்பூன்
- சின்ன வெங்காயம் - 15
- கறிவேப்பிலை - 1 கொத்து
- அரைத்த மசாலா
- மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- புளி - லெமன் அளவு
- தண்ணீர் - தேவையான அளவு
- உங்களுக்கு பிடித்த மீன்
மீன் குழம்பு செய்முறை
- முதலில் கடாயில் எண்ணெய் சேர்த்து, எண்ணெய் சூடானதும், 15 சின்ன வெங்காயம், 2 தக்காளி, 1/4 டீஸ்பூன் வெந்தயம், 2 டேபிள் ஸ்பூன் மல்லி விதை, 8 காய்ந்த மிளகாய், சிறிய துண்டு இஞ்சி, 8 பல் பூண்டு, 1 கொத்து கறிவேப்பிலை, 1/4 டீஸ்பூன் மிளகு, 1/2 டீஸ்பூன் சீரகம் சேர்த்து வதக்கி, அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
- தற்போது கடாயில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேத்து, எண்ணெய் சூடானதும் கடுகு சேர்த்துக்கொள்ளவும்.
- கடுகு வெடிக்கும் போது, 15 நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் 1 கொத்து கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
- வெங்காயம் வதங்கிய உடன், அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து வதக்கவும்.
- இதனுடன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
- இதில் லெமன் அளவு புளியை கரைத்து, புளி தண்ணீரை சேர்த்துக்கொள்ளவும்.
- மேலும் இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- குழம்பு ரெடியானதும் இதில் மீன் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
- அவ்வளவு தான் தற்போது அடுப்பை அணைக்கவும். அற்புதமான மீன் குழம்பு ரெடி. இதனை சாத்துடன் சாப்பிடவும். அல்லது இட்லியுடன் சாப்பிடவும்.

மீன் குழம்பின் நன்மைகள்
- மீன் இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது. ஏனெனில் இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
- மீன் ஹார்மோன் ஏற்றத்தாழ்வை குணப்படுத்துகிறது மற்றும் பெண்களின் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
- மீன் மற்றும் அரிசி ஆரோக்கியமான தசை வெகுஜனத்திற்கு நம் உடலுக்குத் தேவையான புரதங்களின் நல்ல மூலமாகும்.
- இந்த புரதங்கள் நம் தோல் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கும் நல்லது.