$
Cook With Comali Irfan Chicken Muttom Mixed Fried Rice Recipe: விஜய் டிவில் குக் வித் கோமாளி சீசன் 5 அசத்தலாம நடந்து வருகிறது. இதில் உள்ள போட்டியாளர்கள் வார வாரம் விதவிதமான ரெசிபிகளை செய்து அசத்தி வருகின்றனர்.
அந்த வகையில் எல்லா வாரங்களிலும் இர்ஃபான் பாரட்டப்பட்டு வருகிறார். அவர் செய்யும் டிஸ் அவ்வளவு அற்புதமாக இருப்பதாக, போட்டியில் நடுவர்களான தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் பாரட்டுகின்றனர். இந்த வாரமும் அவர் செய்த டிப்ஸ் பாராட்டுப்பெற்றது.
MSG சேர்க்காமல் சிக்கம் மட்டன் மிக்ஸ் ஃப்ரைடு ரைஸ் செய்து இர்ஃபான் பாராட்டுப்பெற்றார். MSG என்றால் என்ன? இந்த ஃப்ரைடு ரைஸ் எப்படி செய்வது ? என்று இங்கே விரிவாக காண்போம்.

சிக்கன் மட்டன் மிக்ஸ் ஃப்ரைடு ரைஸ்
சிக்கன் மற்றும் மட்டனை பொரிக்க தேவையான பொருட்கள்
சிக்கன் - 150 கிராம்
மட்டன் - 150 கிராம்
சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1/2 டீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
முட்டை வெள்ளை கரு - 1
லெமன் - பாதி மூடி
எண்ணெய் - தேவையான அளவு
ஃப்ரைடு ரைஸ் செய்ய தேவையான பொருட்கள்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
துருவிய பூண்டு - 1 டீஸ்பூன்
வெங்காயம் - பாதி
வெங்காயத்தாள் - ஒரு கைப்பிடி
முட்டைகோஸ் - 1 கப்
பீன்ஸ் - 7
கேரட் - 1
கொடை மிளகாய் - பாதி
உப்பு - தேவையான அளவு
முட்டை - 2
90 சதவீதம் வெந்த சாதம் - 200 கிராம்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சிக்கன் மசாலா - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
பெப்பர் - 3/4 டீஸ்பூன்
மல்லி இலை - ஒரு கைப்பிடி
இதையும் படிங்க: CWC Irfan Recipe: இர்ஃபான் செய்து அசத்திய கோழி மிளகு வறுவல் ரெசிபி.!
செய்முறை
- முதலில் ஒரு பாத்திரத்தி, சிக்கன் மற்றும் மட்டன் இரண்டையும் சின்ன சின்ன துண்டுகளான வெட்டி கழுவி எடுத்துக்கொள்ளவும்.
- இதில், சோள மாவு, சோள மாவு, இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள், மல்லி தூள், காஷ்மீரி மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு, முட்டை வெள்ளை கரு, லெமன் சேர்த்து நன்கு கலந்துக்கொள்ளவும்.
- இதனை எண்ணெயில் பொரித்து எடுத்துக்கொள்ளவும்.
- தற்போது அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றவும்.
- எண்ணெய் சூடானதும், பூண்டு மற்றும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
- இதில் முட்டைகோஸ், பீன்ஸ், கேரட், கொடை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
- பின்னர் இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி, தேவையன அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
- தற்போது இதில் சாதம், மிளகாய் தூள், சிக்கன் மசாலா, கரம் மசாலா, மல்லி தூள், காஷ்மீரி மிளகாய் தூள் சேர்து கலந்து விடவும்.
- பின்னர் பொரித்த மட்டன் மற்றும் சிக்கன் சேர்த்து, இதனுடன் பெப்பர் மற்றும் சோயா சாஸ் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- கடைசியாக வெங்காயதாள் மற்றும் மல்லி இலை சேர்த்து கலக்கவும்.
- அவ்வளவு தான் ஹெல்தியான ரோட்டு கடை ஸ்டைல் ஃப்ரைடு ரைஸ் ரெடி. இதில் MSG இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மோனோசோடியம் குளுட்டமேட் MSG என்றால் என்ன?
மோனோசோடியம் குளுட்டமேட் (MSG) என்பது உணவக உணவுகள், பதிவு செய்யப்பட்ட காய்கறிகள், சூப்கள், இறைச்சிகள் மற்றும் பிற உணவுகளில் சேர்க்கப்படும் சுவையை அதிகரிக்கும் பொருள் ஆகும். ஆனால் இதனால் பல பக்க விளைவுகள் ஏற்படும். குறிப்பாக தலைவலி, இறுக்கம், கூச்ச உணர்வு, படபடப்பு, நெஞ்சு வலி, குமட்டல் பலவீனம் போன்றவை ஏற்படும். இதனால் இந்தியாவில் இதனை தடை செய்துள்ளனர்.