இன்று ஞாயிற்று கிழமை… இவறு இல்லாம எப்படி.?

  • SHARE
  • FOLLOW
இன்று ஞாயிற்று கிழமை… இவறு இல்லாம எப்படி.?

குக் வித் கோமாளி சீசன் 5 இப்போது பரவலாக பேசப்படுகிறது. ஏனென்றால் இதற்கு போட்டியாக, சன் டீவியில் டாப் குக்கு டூப் குக்கு நடந்துட்டு இருக்கு. அதுவும் குக் வித் கோமாளியில் நடவராக இருந்த வெங்கடேஷ் பட், டாப் குக்கு டூப் குக்கு நிகழ்சியை நடத்தி வருகிறார். இது கடுமையான போட்டியாக இருக்கிறது.

அந்த வகையில் குக் வித் கோமாளியில் கலந்துகொண்டுள்ள பிரபல யூட்யூபர் இர்ஃபான், டஃப் ஃபைட் கொடுக்கும் வகையில் மட்டன் தால்சா செய்து அசத்தினார். தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோர், இர்ஃபான் செய்த தால்சாவை பாராட்டி தள்ளினர். அப்படி என்ன தான் இதில் இருந்தது. இர்ஃபான் இந்த மட்டன் தால்சாவை எப்படி செய்தார் என்று இங்கே காண்போம்.

மட்டன் தால்சா செய்முறை (Mutton Dalcha Recipe)

தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு - 1/2 கப்

கடலை பருப்பு - 1/4 கப்

மட்டன் - 250 கிராம்

தக்காளி - 1

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

தண்ணீர் - 1 கிளாஸ்

மஞ்சள் - 1/4 டீஸ்பூன்

எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

பிரிஞ்சி இலை - 1

அண்ணாசி பூ - 1

பட்டை - சிறிய துண்டு

சோம்பு - 1 டீஸ்பூன்

வெங்காயம் - 1 கப்

கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி

பச்சை மிளகாய் - 2

சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்

மல்லி தூள் - 2 டீஸ்பூன்

கத்திரிக்காய் - 3

மாங்காய் - 1

புளி - நெல்லிக்காய் அளவு

கொத்தமல்லி - ஒரு கைப்பிடி

இதையும் படிங்க: Ulunthu Soru Recipe: திருநெல்வேலி ஸ்பெஷல் உளுந்து சோறு.! எப்படி செய்யணும் தெரியுமா.?

செய்முறை

  • முதலில் அடுப்பில் குக்கரை வைத்து, அதில் துவரம் பருப்பு, கடலை பருப்பு, மட்டன், தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, மஞ்சள் தூள், தண்ணீர் சேர்க்கவும்.
  • 5 விசில் வரும் வரை குக்கரை அப்படியே வைக்கவும்.
  • மறு பக்கம், கடாயில், எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும்.
  • இதில் பிரிஞ்சி இலை, அண்ணாசி பூ, சோம்பு, பட்டை போன்றவற்றை சேர்த்து வதக்கவும்.
  • இதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • இதையடுத்து சாம்பார் தூள், மல்லி தூள், கத்திரிக்காய் சேர்த்து வதக்கவும்.
  • தற்போது குக்கரில் உள்ள கலவையை இதில் சேர்த்து, இதனுடன் மாங்காய் துண்டையும் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
  • இறுதியாக புளி தண்ணீர் மற்றும் கொத்தமல்லி சேத்து 2 நிமிடம் கொதிக்க விட்டு, அடுப்பை அணைக்கவும்.
  • அவ்வளவு தான் வீடே மணக்கும் மட்டன் தால்சா ரெடி. இதனை நெய் சாதம், பிரியாணி போன்றவற்றுடன் இணைந்து சாப்பிடவும். ருசி அப்படி இருக்கும்.

Image Source: Freepik

Read Next

Ulunthu Soru Recipe: திருநெல்வேலி ஸ்பெஷல் உளுந்து சோறு.! எப்படி செய்யணும் தெரியுமா.?

Disclaimer

குறிச்சொற்கள்