Cook With Comali Chef Damu Style Chettinadu Chikken Masala Recipe: குக் வித் கோமாளி சீசன் 5 நடந்து வருகிறது. இதில் நடுவராக உள்ள செஃப் தாமு, செட்டிநாடு சிக்கன் மசாலா செய்து காட்டினார். செஃப் தாமு ஸ்டைல் செட்டிநாடு சிக்கம் மசாலா செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்த ரெசிபி தேடுகிறீர்களா.? அப்போ இது உங்களுக்கான இடம். இங்கே செஃப் தாமு ஸ்டைல் செட்டிநாடு சிக்கம் மசாலா செய்வது எப்படி? என்பதை விளக்கமாக கொடுத்துள்ளோம். இதனை படித்து பயன் பெறவும்.
செஃப் தாமு ஸ்டைல் செட்டிநாடு சிக்கம் மசாலா ரெசிபி (Chef Damu Style Chettinadu Chikken Masala Recipe)

மசாலா பொடி செய்வதற்கு தேவையான பொருட்கள்
மல்லி விதை - 2 டேபிள் ஸ்பூன்
சோம்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
மிளகு - 1/4 டேபிள் ஸ்பூன்
கடலை பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
கிராம்பு - 6
அண்ணாசி பூ - பாதி
ஏலக்காய் - 3
பட்டை - 1 துண்டு
பிரிஞ்சி இலை - 2
கல்பாசி - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 8
ஜாவத்ரி - சிறிதளவு
மராட்டி மொக்கு - 1 துண்டு
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
கிரேவி செய்ய தேவையான பொருட்கள்
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
பட்டை - 1/2 துண்டு
கிராம்பு - 3
ஏலக்காய் - 2
சோம்பு - 1/4 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
தக்காளி - 2
சிக்கன் - 500 கிராம்
மஞ்சள் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
அரைத்த மசாலா பொடி
மல்லி இலை - சிறிதளவு
செட்டிநாடு சிக்கம் மசாலா செய்முறை
- முதலில் மசாலா பொடிக்கு தேவையன பொருட்களை வெருத்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
- ஒரு கடாயில் மல்லி விதை, சோம்பு, மிளகு, கடலை பருப்பு, கிராம்பு, அண்ணாசி பூ, ஏலக்காய், பட்டை, பிரிஞ்சி இலை, கல்பாசி, காய்ந்த மிளகாய், ஜாவத்ரி, மராட்டி மொக்கு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
- பின்னர் இதனை உலர விட்டு, பின் மிக்ஸியில் சேர்த்து பொடி போல் அரைத்து எடுத்துக்கொள்ளவும். அவ்வளவு தான், செட்டிநாடு சிக்கன் மசாலாவிற்கு தேவையான மசாலா பொடி ரெடி.
- தற்போது அடுப்பில் கடாய் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானது, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு சேர்த்து வதக்கவும்.
- இதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் இதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- இதையடுத்து தக்காளியை கைகளால் நசுக்கி சேர்க்கவும். தக்காளி வதங்கிய உடன், இதனுடன் சிக்கன், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து விடவும்.
- இதில் 1 கப் தண்ணீர் சேர்த்து, கலந்து விட்டு, கடாயை 2 நிமிடங்களுக்கு மூடி வைக்கவும்.
- பின்னர் இதனுடன் அரைத்த மசாலா பொடியை சேர்த்து 5 நிமிடங்களுக்கு வதக்கவும்.
- தற்போது சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு, மூடி வைக்கவும்.
- சிக்கன் வெந்த உடன், அடுப்பை அணைக்கவும். இதனுடன் மல்லி இலைகளை சேர்த்து கலக்கவும்.
- அவ்வளவு தான். செஃப் தாமு ஸ்டைல் செட்டிநாடு செக்கம் மசாலா ரெடி. இதனை சுவைத்து மகிழவும்.