$
How to make Kerala Style Chicken Satti Curry: ஒருவர் ஆரோக்கியமாக இருக்க உணவு மிகவும் முக்கியம். ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொண்டால் பல ஆரோக்கிய பிரச்சினைகளை தவிர்க்கலாம் என்பது உண்மை. ஏனென்றால், ஆரோக்கியத்திற்கும் உணவுக்கும் அவ்வளவு தொடர்பு உள்ளது. நீங்கள் அறியாமல் செய்யும் உணவு தொடர்பான தவறால், பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். எனவே, ஆரோக்கியத்திற்கு நாம் சாப்பிடும் உணவு மிகவும் முக்கியம்.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ஒரு நிகழ்ச்சி. தற்போது, குக் வித் கோமாளி சீசன் 5 தொடங்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நம்மில் பலர் குக் வித் கோமாளியில் பிரபலங்கள் செய்யும் பல ரெசிபிக்களை வீட்டில் செய்து பார்ப்போம். அந்தவகையில், யூடியூபர் இர்பான் செய்து அசத்திய கேரளா சிக்கன் சட்டிக்கறி மற்றும் நெய் சோறு வீட்டிலேயே எளிமையாக எப்படி செய்வது என பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : CWC Priyanka Special: குக் வித் கோமாளியில் பிரியங்கா செய்து அசத்திய மட்டன் நல்லி நிஹாரி செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
கோழி - 1 கிலோ.
இஞ்சி (நறுக்கியது) - 1½ டீஸ்பூன்.
பூண்டு (நறுக்கியது) - 1½ டீஸ்பூன்.
வெங்காயம் (நறுக்கியது) - 3.
பச்சை மிளகாய் - 3.
தக்காளி (நறுக்கியது) - 2.
உப்பு - தேவையான அளவு.
மஞ்சள்தூள் - ¾ தேக்கரண்டி.
கொத்தமல்லி தூள் - 1 ½ ஸ்பூன்.
காஷ்மீரி மிளகாய் தூள் - 2 ஸ்பூன்.
மிளகு தூள் - ¾ தேக்கரண்டி.
கரம் மசாலா - ¾ தேக்கரண்டி.
பெருஞ்சீரகம் தூள் - ½ தேக்கரண்டி.
கறிவேப்பிலை - 1 கொத்து.
கொத்துமல்லி தழை - 1 கொத்து.
எண்ணெய் - 3 டீஸ்பூன்.
செய்முறை:
- முதலில் எடுத்து வைத்துள்ள சிக்கனை உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு சுத்தம் செய்து வைக்கவும்.
- இப்போது, ஒரு மண் சட்டியை அடுப்பில் வைத்து சூடேற்றவும். சட்டி சூடானதும், அதில் எண்ணெய் ஊற்றவும்.
- எண்ணெய் காய்ந்ததும் நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும். இதையடுத்து பச்சை மிளகாய் சேர்க்கவும்.
- பின்னர், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். இப்போது அதில் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்க சிறிது உப்பு சேர்க்கவும்.
இந்த பதிவும் உதவலாம் : Mutton Cutlet Recipe: பக்ரீத் ஸ்பெஷல் சுவையான மற்றும் மொறுமொறுப்பான மட்டன் கட்லெட்!
- வெங்காயம் நன்கு வதங்கியதும், நறுக்கி வைத்துள்ள தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
- தக்காளி நன்றாக மசிந்ததும் சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு வதக்கவும். இப்போது சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 10 நிமிடம் நன்கு வேக வைக்கவும்.
- சிக்கன் 90% வெந்ததும் அதில் மஞ்சள் தூள், மல்லித்தூள், மிளகு தூள், பெருஞ்சீரகம் தூள் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். பின், கரம் மசாலா மற்றும் சீராக தூள் சேர்த்து நன்றாக கிண்டவும்.
- கடைசியாக, சிறிது கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கினால் கேரளா சிக்கன் சட்டிக்கறி தயார்.
இந்த பதிவும் உதவலாம் : Mangalore Chicken Curry: CWC-யில் சுஜிதா செய்து அசத்திய மங்களூர் ஸ்டைல் கோரி காஸ்ஸி (ம) அக்கி ரொட்டி!
நெய் சோறு செய்ய தேவையான பொருட்கள்:
நெய் - 2 டீஸ்பூன்.
பாசுமதி அரிசி - 1 கப் (250 மிலி).
இலவங்கப்பட்டை
நட்சத்திர சோம்பு
ஏலக்காய்
பிரியாணி இலை
கிராம்பு
சாதிபத்திரி
வெங்காயம் - 2 மெல்லியதாக நறுக்கியது.
பச்சை மிளகாய் - 2 துண்டுகள்.
இஞ்சி & பூண்டு விழுது - 2 ஸ்பூன்.
உப்பு - 1 டீஸ்பூன்.
தண்ணீர் - 1 3/4 கப்.
முந்திரி பருப்பு - 5.
திராட்சை - 5.
செய்முறை:
- நெய் சாதம் செய்ய முதலில், பாஸ்மதி அரிசியைக் கழுவி 30 நிமிடம் ஊற வைக்கவும். இதற்கிடையில், இஞ்சி மற்றும் பூண்டை அரைக்கவும்.
- இப்போது ஒரு பிரஷர் குக்கரில் நெய் சேர்க்கவும். அதைத் தொடர்ந்து இலவங்கப்பட்டை, நட்சத்திர சோம்பு, ஏலக்காய், வளைகுடா இலை, கிராம்பு, சாதிபத்திரி மற்றும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
- இதையடுத்து, பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்கவும்.
- இப்போது இஞ்சி மற்றும் பூண்டை வெங்காயத்தில் சேர்த்து வதக்கவும். பின், குக்கரில் 1 3/4 கப் தண்ணீர் ஊற்றவும். தண்ணீருக்குப் பதிலாக தேங்காய்ப்பால் சேர்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Nandu Rasam Recipe: உடம்புக்கு தெம்பை சேர்க்கும் நண்டு ரசம்.. இப்படி செஞ்சி பாருங்க…
- இப்போது ஊறவைத்த அரிசியைச் சேர்த்து ஒருமுறை கலக்கவும். இப்போது 1/2 டீஸ்பூன் நெய் சேர்க்கவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன், குக்கரை மூடி 1 விசில் விடவும்.
- இப்போது ஒரு தாளிப்பு கரண்டியில் சிறிது நெய் சேர்த்து முந்திரி மற்றும் திராட்சை வறுக்கவும். பிரஷர் வெளியான பிறகு, குக்கரைத் திறந்து வறுத்த கொட்டைகள் மற்றும் திராட்சை சேர்த்தால், சுவையான நெய் சோறு தயார்.
Pic Courtesy: Freepik