$
What Happens If We Eat Dates Seed: நீண்ட காலமாகவே பரந்த அளவிலான ஆரோக்கிய நன்மைகள் கொண்டவற்றில் பேரீச்சம்பழமும் ஒன்று. இது இனிப்பு சதைப்பற்றுள்ளதாக இருப்பதால், அனைவரும் விரும்பி உட்கொள்ளும் சிறந்த பழமாகக் கருதப்படுகிறது. பேரீச்சம்பழங்களை உட்கொண்டு பேரீச்சம்பழம் விதை அல்லது கொட்டையைத் தூக்கி எறிவது வழக்கமான ஒன்று தான். ஆனால் இந்த பேரீச்சம்பழம் கொட்டையில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது குறித்து உங்களுக்குத் தெரியுமா?
ஆம். “பாரம்பரிய உணவுகளின் செயல்பாட்டு பண்புகள்” புத்தகத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு ஒன்றில், பேரீச்சம்பழ விதைகளில் டயட்டரி ஃபைபர், பாலிபினால்கள் மற்றும் ஒலிக் அமிலம் போன்றவை நிறைந்துள்ளது என பல ஆய்வுகள் காட்டுகின்றன. இவை இதய நோய்களைக் குறைப்பதுடன் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் மேம்படுத்துகிறது. இதில் பேரீச்சம்பழ விதைகளை உட்கொள்வதற்கான காரணங்கள் சிலவற்றைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Salt Reducing Tips: உணவில் உப்பு சேர்ப்பதைக் குறைக்க நீங்க செய்ய வேண்டியவை
பேரீச்சம்பழ விதை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
அழற்சி எதிர்ப்புப் பண்புகள்
சவூதி பார்மாசூட்டிகல் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றில் பேரீச்சம்பழ விதைகளில் உள்ள சேர்மங்கள் அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த பண்புகள் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும் இந்த கலவைகள் அழற்சி நிலைகளின் குறைந்த அபாயத்திற்கும், மேம்பட்ட மூட்டு ஆரோக்கியத்திலும் பங்களிக்கிறது.

செரிமான ஆரோக்கியத்திற்கு பேரீச்சம்பழ விதைகள்
பேரீச்சம்பழ விதைகள் நார்ச்சத்துக்கள் நிறைந்த ஆதாரமாகும். இதன் மூலம் இவை செரிமான ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். மேலும் இந்த நார்ச்சத்துக்கள் வழக்கமான குடல் இயக்கங்களுக்கு உதவுகிறது. ஆரோக்கியமான குடல் நுண்ணுயிரியை ஆதரிக்கவும், மலச்சிக்கல்லைத் தடுக்கவும் உதவுகிறது. எனவே உணவில் பேரீச்சம்பழ விதைகள் சேர்த்துக்கொள்வது செரிமான அமைப்பை மேம்படுத்த உதவும்.
ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த பேரீச்சம்பழ விதைகள்
வேதியியல் மற்றும் பல்லுயிர் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றில், ஆக்ஸிஜனேற்றிகள் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உடலில் ஏற்படும் வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைத் தடுக்க உதவுகிறது. மேலும் பேரீச்சம்பழ விதைகளில் உள்ள இந்த சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றங்கள் ஆரோக்கியமான நோயெதிர்ப்பு மண்டலத்தை உருவாக்கவும், நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுவதாகக் கூறப்படுகிறது.
இதய ஆரோக்கியத்திற்கு பேரீச்சம்பழ விதைகள்
பேரீச்சம்பழ விதைகளில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் இதய ஆரோக்கியத்திற்கு சாத்தியமான நன்மைகளைத் தருவதாகக் கூறப்படுகிறது. இவை உடலில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்கவும் பெரிதும் உதவுகிறது. அதன் படி, உணவில் பேரீச்சம்பழ விதைகளைச் சேர்ப்பது இதய ஆரோக்கியத்தில் பங்களிப்பதாக ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
இந்த பதிவும் உதவலாம்: Dates In Winter: குளிர்காலத்தில் பேரிச்சம்பழம் எவ்வளவு நல்லது தெரியுமா?
இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டிற்கு பேரீச்சம்பழ விதைகள்
IOP மாநாட்டுத் தொடர்: பூமி மற்றும் சுற்றுச்சூழல் அறிவியலில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றில் பேரீச்சம்பழ விதைகள் உட்கொள்ளல் இரத்த சர்க்கரை அளவுகளில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என கூறப்பட்டுள்ளது. இந்த விதைகளில் உள்ள கூறுகள் குளுக்கோஸ் வளர்ச்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதன் மூலம் நீரிழிவு நோயாளிகளுக்கும், நீரிழிவு நோய் அபாயம் உருவாகும் நிலைமையில் உள்ளவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

உணவில் எவ்வாறு பேரீச்சம்பழ விதைகளை சேர்ப்பது?
பேரீச்சம்பழ விதைகளை உணவில் சேர்ப்பது அசாதாரணமான ஒன்றாகும். ஏனெனில், பெரும்பாலான மக்கள் பேரீச்சம்பழங்கள் உட்கொள்வதிலேயே கவனம் செலுத்துவர். எனினும், விரும்புபவர்கள் பேரீச்சம்பழ விதைகளை பொடியாக அரைத்து, அதை சமையல் அல்லது ஸ்மூத்திகளில் சேர்க்கலாம்.
பேரீச்சம்பழ விதைகளை தயார் செய்யும் முறை
- இதற்கு முதலில் 15-20 பேரீச்சம்பழ விதைகளை எடுத்துக் கொண்டு, அதை முழுவதுமாக சுத்தம் செய்து வெயிலில் ஒரு நாள் முழுவதும் உலர வைக்க வேண்டும்.
- அதன் பிறகு இந்த விதைகளை கடாய் ஒன்றில் சேர்த்து மிதமான சூட்டில் வறுத்துக் கொள்ளலாம். இவை மிருதுவாக மாறும் வரை, கையால் நசுக்க வேண்டும். அதே சமயம், விதைகள் எரிக்கப்படாமல் அல்லது கருகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
- பின், இவ்வாறு விதைகளை வறுத்த பிறகு, அவற்றைக் கைகளால் நசுக்கி பிறகு மிக்ஸியில் அரைக்கலாம்.
- இப்போது ஆரோக்கியமிக்க மற்றும் சத்தான பேரீச்சம்பழ விதைத் தூள் தயாராக உள்ளது.
- இந்தப் பொடியை ஒரு ஸ்பூன் வெதுவெதுப்பான பாலில் கலந்து தினந்தோறும் காலை நேரத்தில் குடிக்கலாம்.
இந்த ஆரோக்கியமிக்க நன்மைகளைத் தெரிந்து கொள்வதன் மூலம் பேரீச்சம்பழ விதைகளை உடல் ஆரோக்கியத்திற்கு எடுத்துக் கொள்ளலாம். இதன் சுவையை விரும்புவதற்கும், உடல் அதற்கு சாதகமான விளைவுகளைத் தருவதற்கும் சிறிய அளவிலான பேரீச்சம்பழத் தூளுடன் நாளைத் தொடங்குவதை உறுதிபடுத்திக் கொள்ளலாம். எனினும், உணவுக் கட்டுப்பாடுகள் அல்லது வேறு ஏதேனும் உடல்நலப் பிரச்சனைகள் இருப்பின், உணவில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்யும் முன்பாக ஊட்டச்சத்து அல்லது சுகாதார நிபுணரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Dates With Milk Benefits: இரவில் பாலுடன் பேரீச்சம்பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் பல்வேறு நன்மைகள்!
Image Source: Freepik