Dates With Milk Benefits: இரவில் பாலுடன் பேரீச்சம்பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் பல்வேறு நன்மைகள்!

  • SHARE
  • FOLLOW
Dates With Milk Benefits: இரவில் பாலுடன் பேரீச்சம்பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் பல்வேறு நன்மைகள்!

பேரிச்சம்பழத்தை பாலுடன் சேர்த்து சாப்பிடக் கிடைக்கும் நன்மைகள்

பால் மற்றும் பேரீச்சம்பழத்தைச் சேர்த்து அருந்துவது, உணவின் வழக்கமான சில மாற்றங்களை ஏற்படுத்தும். அவற்றைப் பற்றி இங்குக் காணலாம்.

சரும பிரச்சனைகளுக்குத் தீர்வு

இந்த பேரிச்சம்பழம் மற்றும் பால் இரண்டும் வயதாகும் போது ஏற்படக்கூடிய தோல் பிரச்சனைகளைத் தடுக்கின்றன. இவற்றின் இயற்கை முறை சிகிச்சைகளாக, தோலில் ஏற்படக்கூடிய எரிச்சலை சமாளிக்க உதவுகிறது. மேலும், முகத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. மேலும், முகப்பரு சார்ந்த பிரச்சனைகளை விரைவில் நீக்கும். இந்த இயற்கை முறையில் பளபளப்பாக வைத்திருக்கக் கூடிய சருமமானது நீண்ட கால பயனைத் தரும்.

இந்த பதிவும் உதவலாம்: உடல் எடை சீக்கிரம் குறைய இந்த உடற்பயிற்சி செய்யுங்க!

வலிமையான தசை

பாலில் உள்ள கால்சியம் சத்துக்கள் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இந்த பேரிச்சம்பழம் மற்றும் பால் இரண்டுமே குறிப்பிடத்தக்க அளவிலான புரதத்தை உள்ளடக்கியுள்ளது. இவை இரண்டையும் தனித்தனியே உண்பதன் மூலமே அதிக அளவிலான ஆரோக்கியத்தைப் பெற முடியும். அதன் படி, பால் மற்றும் பேரிச்சம்பழம் இரண்டையும் ஒன்றாக சாப்பிடும் போது எலும்பு வலிமையாவதுடன், தசை ஆரோக்கியமும் அதிகரிக்கிறது.

எளிதில் செரிமானம் அடைதல்

பெரும்பாலும், செரிமானப் பிரச்சனையால் முதியவர்கள் அதிகம் பாதிக்கப்படுவர். பேரிச்சம்பழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமானத்திற்கு உதவுகிறது. மேலும், இது குடலின் ஆரோக்கியமான இயக்கங்களுக்கும் காரணமாக அமைகிறது.

இந்த பதிவும் உதவலாம்: மூளை சக்தியை அதிகரிக்க உதவும் 5 தியான வகைகள்!

ஆற்றலை ஊக்குவித்தல்

குளுக்கோஸ், பிரக்டோஸ் போன்ற சத்துக்கள் பேரிச்சம்பழத்தில் நிறைந்து காணப்படுகின்றன. இந்த பால் மற்றும் பேரிச்சம்பழம் இணைப்பு மிகவும் திருப்திகரமான மற்றும் ஆரோக்கியமான உணவாக அமைகிறது. காலை உணவை தவிர்ப்பவர்கள், பாலுடன் பேரிச்சம்பழத்தை சாப்பிட்டால், நல்ல சத்தான உணவுமுறையாக அமைகிறது. மேலும், இவை பசியின்மையைத் தூண்டுவதில்லை. இருப்பினும் உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருகிறது.

மூட்டுவலியில் இருந்து விடுபடுதல்

பாலில் உள்ள கால்சியம் சத்துக்கள் எலும்பு சம்பந்தமான நோய்களிலிருந்து விடுபட வைக்கிறது. பாலில் பேரிச்சம்பழம் சேர்க்கப்படும் போது அது இடண்டு மடங்கு நன்மைகளைத் தருகிறது. இது எலும்பின் வலிமையை அதிகரித்து, மூட்டு வலி போன்ற நோய்களைக் குறைக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: உடல் ஆரோக்கியத்திற்கு தினமும் செய்ய வேண்டிய 5 யோகாசனங்கள்

நினைவாற்றல் மேம்பாடு

ஞாபக சக்தி மேம்படுத்த உதவுவதில் பேரிச்சம்பழம் மற்றும் பால் இவை இரண்டுமே அடங்கும். இவற்றில் உள்ள வைட்டமின் பி6, மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. குழந்தைகளுக்கு இதனைக் கொடுப்பதன் மூலம் நினைவாற்றல் அதிகரிக்கும்.

Image Source: Freepik

Read Next

WHO Dietary Guidelines: கொழுப்பு மற்றும் கார்ப்ஸ் பற்றிய வழிகாட்டு நெறிமுறைகள்…

Disclaimer

குறிச்சொற்கள்