அன்றாட உணவில் ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள், காய்கறிகள், பழங்கள், நட்ஸ் மற்றும் விதைகளை எடுத்துக் கொள்வது அவசியமாகும். இந்த வரிசையில் பேரீச்சம்பழம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் நார்ச்சத்துக்கள், பொட்டாசியம், இரும்பு மற்றும் இன்னும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. இவை ஆற்றலை அதிகரிக்க, செரிமானத்தை மேம்படுத்த, இதய ஆரோக்கியத்தை ஆதரிக்க மற்றும் இன்னும் பிற உடல்நலன்களை வழங்க உதவுகிறது. இதைத் தினமும் சாப்பிடுவது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும்.
பேரீச்சம்பழத்தை அன்றாட உணவில் பல்வேறு வழிகளில் சேர்க்கலாம். இதை நேரடியாக அப்படியே எடுத்துக் கொள்வது நன்மை தரும். சிலர் இதை பாலில் சேர்த்து இரவில் குடிப்பர். இதை பேக்கிங் செய்யாமல் பேரீச்சம்பழ பார்கள் தயார் செய்யலாம். அது எப்படி என்பது உங்களுக்குத் தெரியுமா? இவ்வாறு பேக்கிங் செய்யாமல் சாப்பிடுவது குடல் மற்றும் கல்லீரலுக்கு ஏற்றவையாகும். பேரீச்சம்பழம் குடல் பாக்டீரியாவை எரிபொருளாகக் கொள்ள ப்ரீபயாடிக் நார்ச்சத்தை வழங்குகிறது.
மேலும் இந்த Dates bars பாதாம், பிஸ்தா மற்றும் டார்க் சாக்லேட் போன்றவை கொண்டு தயார் செய்யப்படுகிறது. இவை ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் கல்லீரல் செயல்பாட்டை ஆதரிக்கும் ஆரோக்கியமான கொழுப்புகளை வழங்குகிறது. இந்த இனிப்பான பேரீச்சம்பழம் ரெசிபியை எளிமையான முறையில் தயார் செய்யலாம். இது குறித்து மருத்துவர் ஜோசப் சல்ஹாப் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அது பற்றி இதில் காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: Dates in Summer: வெயில் காலத்தில் பேரீச்சம்பழம் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டால் என்னவாகும் தெரியுமா?
பேரீச்சம்பழ பார் தயாரிக்கும் முறை
தேவையானவை
- மெட்ஜூல் பேரீச்சம்பழங்கள் - 14
- உங்களுக்குப் பிடித்த நட் வெண்ணெய் - ¼ கப்
- பாதாம் - 2 கைப்பிடி அளவு
- பிஸ்தா - 1 கைப்பிடி அளவு (அல்லது உங்களுக்குப் பிடித்த மரக் கொட்டைகள்)
- வேகன் சாக்லேட் - 250 கிராம் (அதிக ஆரோக்கிய நன்மைகளுக்கு 70%+ டார்க் சாக்லேட் விரும்பத்தக்கது)
பேரீச்சம்பழ பார் ரெசிபி தயார் செய்யும் முறை
- முதலில் பேரீச்சம்பழங்களிலிருந்து கொட்டைகளை அகற்ற வேண்டும்.
- பின் ஒரு பேக்கிங் டின்னில் காகிதத்தோல் கொண்டு வரிசைப்படுத்தி, பேரீச்சம்பழங்களை ஒரு தட்டையான அடித்தளத்தில் அழுத்தலாம்.
- பிறகு பேரீச்சம்பழங்களின் மீது நீங்கள் எடுத்துக் கொண்ட நட் வெண்ணெயை சமமாகப் பரப்ப வேண்டும்.
- அதன் பிறகு, பாதாம் மற்றும் பிஸ்தா (அல்லது பிற கொட்டைகள்) போன்றவற்றை மேலே சேர்க்க வேண்டும்.
- பின்னர், சாக்லேட்டை உருக்கி மேலே ஊற்றி, அதை சீராக பரப்பலாம்.
- இது தயார் ஆன பிறகு 40 நிமிடங்கள் அல்லது செட் ஆகும் வரை குளிர்சாதன பெட்டியில் வைத்துக் கொள்ளலாம்.
- இறுதியாக, இதை துண்டுகளாக நறுக்கி பரிமாறலாம்.
- இதை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, சாப்பிடும் போது மட்டும் எடுத்து சாப்பிடலாம்.
பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
- பேரீச்சம்பழங்கள் ஏராளமான மருத்துவ நன்மைகளைக் கொண்டுள்ளது. இதில் மிகவும் முக்கிய ஊட்டச்சத்துக்களான காப்பர், மாங்கனீஸ், வைட்டமின் பி6, பொட்டாசியம் போன்ற சில முக்கிய வைட்டமின்களும் மற்றும் மினரல்களும் அதிகம் காணப்படுகின்றன.
- மேலும் இதில் ஃபிளவனாய்டுகள், கரோட்டினாய்டுகள் மற்றும் ஃபீனாலிக் ஆசிட் போன்ற சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்டுகள் உள்ளன. இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் செல் சிதைவிலிருந்து செல்களைப் பாதுகாக்க உதவுகின்றன.
- டயட்டில் வழக்கமான அடிப்படையில் பேரிச்சம்பழங்களை சேர்த்து கொள்வது நம் மூளை செயல்பாட்டை மேம்படுத்த உதவுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த பதிவும் உதவலாம்: பேரீச்சம்பழம் OK.. அதோட கொட்டை.? பேரீச்சம்பழ கொட்டை பொடி – உங்கள் உடலுக்கு தெரியாத அற்புத மருந்து!
பாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
- பாதாமில் வைட்டமின் ஈ, மக்னீசியம் மற்றும் நார்ச்சத்துக்கள் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
- இவை இதய ஆரோக்கியம், கெட்ட கொழுப்பைக் குறைக்க, எடை மேலாண்மை மற்றும் நினைவாற்றலை மேம்படுத்த உதவுகிறது.
- சிறந்த நன்மைகளைப் பெற, பாதாமின் தோலை நீக்கி, இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.
பிஸ்தாவின் நன்மைகள்
பிஸ்தாவில் புரதம், நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
இவை கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கவும், எடை மேலாண்மைக்கும் உதவுகிறது.
மேலும் இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து, புற்றுநோய் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களைத் தடுக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: நைட் தூங்கும் முன் டேட்ஸ் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? இது தெரிஞ்சா நீங்களும் சாப்பிடுவீங்க
Image Source: Freepik