$
Dates Seed Powder Benefits In Diabetes: இன்றைய காலகட்டத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக பலரும் பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். அதில் ஒன்றாகவே இந்த நீரிழிவு நோய் அமைகிறது. உலகளவில் உள்ள மக்களைப் பாதிக்கும் ஒரு பொதுவான நோயாகவே நீரிழிவு நோய் இருந்து வருகிறது. இந்த வகை நீரிழிவு நோயைத் தவிர்க்க சில ஆரோக்கியமான உணவுமுறைகள் மற்றும் பழக்க வழக்கங்களைக் கையாள்வது அவசியமாகும்.
அந்த வகையில் நீரிழிவு நோயைத் திறம்பட கட்டுப்படுத்துவதில் பேரீச்சம்பழ விதை பவுடர் பெரிதும் உதவுகிறது. அதென்ன பேரீச்சம்பழ விதை? இன்று பெரும்பாலானோர் பேரீச்சம்பழத்தை சாப்பிட்டு விட்டு, பேரீச்சம்பழ கொட்டையைத் தூக்கி எறிகின்றனர். ஆனால், பேரீச்சம்பழம் மட்டுமல்லாமல் அதன் விதைகள் உடல் ஆரோக்கியத்தில் பல்வேறு வழிகளில் நன்மை பயக்கிறது. இதில் நீரிழிவு நோயாளிகளுக்கு பேரீச்சம்பழ விதை பவுடர் தரும் நன்மைகளைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Lassi for Diabetes: சர்க்கரை நோயாளிகள் லஸ்ஸி சாப்பிட போறீங்களா? அப்ப இத முதல்ல பாருங்க
பேரீச்சம்பழ விதைகள்
பேரீச்சம்பழம் அவற்றின் ஆற்றல் அதிகரிக்கும் பண்புகளுக்காக மிகவும் பெயர் பெற்றதாகும். ஆனால், இதன் விதைகளை நம்மில் பெரும்பாலானோர் நிராகரித்து விடுகிறோம். ஆனால், இந்த பேரீச்சம்பழ விதைகள் சத்தானதா என்று எப்போதாவது நீங்கள் யோசித்ததுண்டா? அதிலும் குறிப்பாக இதை தூளாக அரைத்து உட்கொள்வது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. அதில் ஒன்றே இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதாகும்.

இரத்த சர்க்கரையை நிர்வகிப்பதில் பேரீச்சம்பழ விதைகளில் பங்கு
பேரீச்சம்பழத்தினைப் போலவே, பேரீச்சம்பழ விதைகளும் ஊட்டச்சத்து மிகுந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த பேரீச்சம்பழ விதைகள் டயட்டரி ஃபைபர், பாலிபினால்கள் மற்றும் ஒலிக் அமிலம், அழற்சி எதிர்ப்புப் பண்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் போன்றவை நிறைந்துள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் இரத்த சர்க்கரை அளவுகளில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும், இந்த விதைகளில் உள்ள கூறுகள் குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தை சீராக்க உதவுகிறது. எனவே, இவை நீரிழிவு நோயாள் அல்லது நீரிழிவு நோய் அபாயத்தில் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது.
நீரிழிவு நோயாளிகளுக்கு பேரீச்சம்பழ விதை எவ்வாறு உதவுகிறது?
பேரீச்சம்பழ விதைகள் நீரிழிவு நோயாளிகளுக்கு எவ்வாறு உதவுகிறது என்பதற்கான சில காரணிகளைக் காணலாம்.
- பேரீச்சம்பழ விதைகளில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை குடல் ஆரோக்கியத்திற்கு உதவுவதுடன், சீரான தன்மையை ஊக்குவிக்கிறது. மேலும், இந்த நார்ச்சத்துக்கள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இந்த பேரீச்சம்பழ விதை உட்கொள்வது நிறைவான உணர்வைத் தந்து, எடை மேலாண்மைக்கு உதவுகிறது. இது உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவுவதுடன், நீரிழிவு நோய் அபாயத்தையும் தவிர்க்கிறது.
- இந்த விதைகளில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. மேலும், இவை செல்களின் சேதத்திலிருந்து பாதுகாப்பு அளிப்பதுடன், இதய நோய் அபாயத்தைக் குறைப்பதாகக் கூறப்படுகிறது.
- பேரீச்சம்பழத் தூளில் ஹைப்பர் கிளைசெமிக் நோயாளிகளின் இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்கும் திறன் நிறைந்துள்ளது. இது சாதாரண மக்களின் கிளைசெமிக் குறியீட்டை மாற்றாது. நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் வகையில் அமைகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Flax Seeds For Diabetes: சர்க்கரை அளவு குறைய இந்த ஒரு விதையை எடுத்துக்கோங்க போதும்
பேரீச்சம்பழ விதை பவுடரை தயார் செய்யும் முறை
- முதலில் குறிப்பிட்ட அளவிலான பேரீச்சம்பழ விதைகளை எடுத்துக் கொண்டு, நன்கு சுத்தம் செய்து, வெயிலில் ஒரு நாள் முழுவதும் உலர வைக்கலாம்.
- பின், விதைகளை கடாய் ஒன்றில் சேர்த்து, மிதமான சூட்டில் வறுத்துக் கொள்ள வேண்டும். இதில் விதைகள் எரிக்கப்படாமல் அல்லது கருகாமல் பார்த்துக் கொள்வது அவசியமாகும். மேலும், இந்த விதைகள் மிருதுவாகும் வரை கையால் நசுக்க வேண்டும்.
- இவ்வாறு வறுத்த விதைகளை கைகளால் நசுக்கி பிறகு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளலாம். இப்போது சுவையான மற்றும் ஆரோக்கியமிக்க பேரீச்சம்பழ விதைத் தூள் தயாராகி விட்டது.
- இந்தப் பொடியை ஒரு ஸ்பூன் வெதுவெதுப்பான பாலில் கலந்து தினந்தோறும் காலை நேரத்தில் குடிக்கலாம்.

கவனிக்க வேண்டியவை
பேரீச்சம்பழ விதைகள் சாத்தியமான பலன்களைத் தருவதாக இருப்பினும், இதை மிதமாக உட்கொள்வது அவசியமாகும். எப்போது மெதுவாகத் தொடங்கி, உடல் எவ்வாறு பதிலளிக்கிறது என்பதைக் கண்காணிக்க வேண்டும். குறிப்பாக, இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் திறனில் பேரீச்சம்பழ விதை எவ்வாரு செயல்படுகிறது என்பதைக் கவனிக்க வேண்டும். குறிப்பாக வேறு ஏதாவது உடல்நல பிரச்சனைகள் இருப்பின், எந்தவொரு பொருளையும் எடுத்துக் கொள்ளும் முன் நிபுணர் அல்லது மருத்துவரின் ஆலோசனை பெற்று எடுத்துக் கொள்வது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Jamun Juice For Diabetes: எகிறும் சுகர் லெவலை அசால்ட்டாகக் குறைக்கும் மந்திர பானம்!
Image Source: Freepik