What Are The Skin Symptoms Of Diabetes: இன்று மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை காரணமாக நீரிழிவு நோய் ஏற்படலாம். உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பது பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். சர்க்கரைஅளவு அதிகரிப்பு உடல் மற்றும் சருமத்திற்கும் தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாவது இரத்த ஓட்டத்தைப் பாதிக்கிறது. இதனால் உடல் உறுப்புகளுக்கு ஊட்டச்சத்துக்கள் சரியாக வழங்கப்படுவதில்லை.
இதனால், உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதுடன், சருமத்திலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நீரிழிவு நோயில், சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தவில்லை எனில், தோல் முன்கூட்டியே வாடிவிடும் அபாயம் ஏற்படலாம். இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது, சருமத்தில் சில அறிகுறிகள் தென்படுகிறது. இதில் அதிகளவு இரத்த சர்க்கரையால் சருமத்தில் தோன்றும் அறிகுறிகளையும், அதனைத் தடுக்கு முறைகளையும் குறித்து லக்னோவில் உள்ள கேர் இன்ஸ்டிடியூட் ஆப் லைஃப் சயின்ஸின் மருத்துவர் டாக்டர் சீமா யாதவ், எம்.டி அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: Jamun Juice For Diabetes: எகிறும் சுகர் லெவலை அசால்ட்டாகக் குறைக்கும் மந்திர பானம்!
நீரிழிவு நோயால் சருமத்தில் தோன்றும் அறிகுறிகள்
தோலில் கொப்புளங்கள் உருவாகுதல்
உடலில் அதிகளவு இரத்த சர்க்கரை அல்லது நீரிழிவு நோயால், சருமத்தில் கொப்புளங்கள் தோன்றலாம். நீரிழிவு நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குக் கொப்புளங்கள் ஏற்படும் மிகவும் பொதுவான பிரச்சனையாகக் கருதப்படுகிறது. இரத்த சர்க்கரையின் அளவு அதிகரிப்பால் கைகள், கால்கள், விரல்கள் போன்றவற்றில் கொப்புளங்கள் ஏற்படும். எனவே உடலில் கொப்புளங்கள் அதிகரித்தால், வீட்டு வைத்தியம் முயற்சி செய்வதற்குப் பதிலாக உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.
தோலில் அரிப்பு
உடலில் அதிகரிக்கும் இரத்த சர்க்கரையால், சருமத்தில் அரிப்பு பிரச்சனைகள் ஏற்படலாம். இந்த அரிப்பு பிரச்சனைகளின் காரணமாக கொப்புளங்கள் உருவாகும் அபாயம் அதிகமாகலாம். மேலும், நீரிழிவு நோய் அதிகரிக்கும் போது, கை கால்களில் வீக்கம் ஏற்படலாம். எனவே சருமத்தில் தோன்றும் இந்த அறிகுறிகளைப் புறக்கணிக்காமல் சரியான நேரத்தில் சிகிச்சை மேற்கொள்வது அவசியமாகும்.
கண்களுக்குக் கீழ் வீக்கம் ஏற்படுவது
நீரிழிவு நோயால் கண்களுக்குக் கீழே கருமை, வீக்கம் மற்றும் சருமம் தளர்வான தோற்றம் போன்ற அறிகுறிகள் தோன்றத் தொடங்குகிறது. சில சமயங்களில் இந்த அறிகுறிகள் வானிலை மாற்றம் ஏற்படும் போது கூட தோன்றலாம். ஆனால், இவை நீண்ட நேரம் நீடித்தால், அது நீரிழிவு நோயின் அறிகுறியாக இருக்கலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த சூழ்நிலையில் நீரிழிவு நோய் மருத்துவரை பரிசோதிக்க வேண்டும்.
குணமடைய அதிக நேரம் எடுப்பது
அதிகரித்து வரும் நீரிழிவு நோய், உடலில் உள்ள காயங்கள் குணமாக அதிக நேரம் எடுக்க வைக்கும். இந்தப் பிரச்சனை தீவிரமடைந்தால் அது நீரிழிவு அல்சர் எனப்படுகிறது. இவ்வாறு அதிகரிக்கக் கூடிய இரத்தச் சர்க்கரை அளவின் காரணமாக இரத்த ஓட்டம் குறைகிறது. இதனால் காயங்கள் அல்லது தோல் உரிதல் ஏற்படும். இது காயங்கள் குணமாக அதிக நேரம் எடுக்க வைக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: Lassi for Diabetes: சர்க்கரை நோயாளிகள் லஸ்ஸி சாப்பிட போறீங்களா? அப்ப இத முதல்ல பாருங்க
கருமையான கழுத்து தோல்
இந்த அதிகரித்த சர்க்கரை அளவு கழுத்து தோலை கருமையாக மாற்றுகிறது. இது கழுத்தைத் தவிர, உடலின் மற்ற பகுதிகளிலும் கருமையான திட்டுகளை ஏற்படுத்தலாம். மேலும் சருமத்தில் வறட்சி தெரியுமாயின், அது நீரிழிவு நோயை அதிகரிப்பதற்கான காரணங்களாக அமைகிறது. இது தவிர, நீரிழிவு நோயில், அக்குள்களில் கருமையும் காணப்படலாம். இதற்கு தோல் நோய் நிபுணரிடம் சிகிச்சை பெறுவது மிகவும் நல்லது.
நீரிழிவு நோயில் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது எப்படி?
- நீரிழிவு நோயாளிகள் சருமத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதே சமயம், அதிகப்படியான ஒப்பனையைத் தவிர்க்க வேண்டும்.
- சருமம் ஈரப்பதமாக இருக்க லோஷன் அல்லது கிரீம் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.
- சருமத்தை வறட்சியிலிருந்து தவிர்க்க, போதுமான அளவு தண்ணீர் அருந்துவது அவசியமாகும்.
- முதுமை அறிகுறிகளிலிருந்து விடுபட வாரம் ஒரு முறை ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்தலாம்.
மேலே கூறப்பட்ட அறிகுறிகள் அனைத்தும் நீரிழிவு நோயால் சருமத்தில் தோன்றக்கூடிய அறிகுறிகளாகும். இதைத் தவிர்க்கவும், சருமத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் ஆரோக்கியமான வழிமுறைகளைக் கையாளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Pulses For Diabetes: சர்க்கரை நோயாளிகள் எந்த பருப்பு உட்கொள்வது நல்லது தெரியுமா?
Image Source: Freepik