Expert

High Cortisol Symptoms: உங்களுக்கு இந்த அறிகுறிகள் எல்லாம் இருந்தா ஸ்ட்ரெஸ் அதிகமா இருக்குனு அர்த்தம்!

  • SHARE
  • FOLLOW
High Cortisol Symptoms: உங்களுக்கு இந்த அறிகுறிகள் எல்லாம் இருந்தா ஸ்ட்ரெஸ் அதிகமா இருக்குனு அர்த்தம்!

அதாவது உடலில் கார்டிசோல் அளவை சமநிலையில் வைத்திருப்பது மிகவும் அவசியமாகிறது. அவ்வாறு இல்லையெனில், இது மற்ற வேறு சில உடல்நலப் பிரச்சனைகளையும் ஏற்படுத்தலாம். இவ்வாறு கார்டிசோல் அதிகமாக இருக்கும் போது, சில சாதாரண அறிகுறிகளும் உடலில் தோன்றலாம். இந்த சூழ்நிலையில், உடலில் கார்டிசோல் அளவு அதிகமாக இருப்பதற்கான அறிகுறிகள் குறித்து ஹார்மோன் சுகாதார நிபுணர் ஊர்வசி அகர்வால் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். இதில் உடலில் கார்டிசோல் அளவு அதிகமாக இருப்பதை உணர்த்தும் அறிகுறிகளைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Hormonal Imbalance: உடலில் ஹார்மோன் சமநிலையில் இல்லாதபோது தோன்றும் முக்கிய அறிகுறிகள்!

உடலில் அதிகப்படியான கார்டிசோல் இருப்பதற்கான அறிகுறிகள்

முக கொழுப்பு

அதிகளவு மன அழுத்தத்தில் இருக்கும் போது, முகத்தில் மட்டும் கொழுப்பு அதிகரிக்கத் தொடங்குகிறது. பிறகு, இது உயர் கார்டிசோலை நோக்கிச் செல்கிறது. ஆனால், உடல் எடை முழுவதும் ஒன்றாக அதிகரித்தால் அது சாதாரணமான நிலையாகும்.

உடல் எடை அதிகரிப்பு

எடை திடீரென அதிகரிக்க ஆரம்பித்திருந்தாலும், அது அதிக கார்டிசோல் இருப்பதற்கான அறிகுறியைக் குறிக்கிறது. இந்த சூழ்நிலையில், உணவைக் கட்டுப்படுத்தினாலும், உடல் எடை அதிகரித்துக் காணப்படும்.

வீங்கிய கண்கள்

சிலருக்குப் போதுமான தூக்கத்திற்குப் பிறகும், கண்கள் வீங்கி காணப்படலாம். இது உயர் கார்டிசோலின் அடையாளத்தைக் குறிக்கிறது. இந்த சூழ்நிலையில், மன அழுத்த நிலைக்கு உடனடியாகக் கவனம் செலுத்துவது அவசியமாகும்.

நெக் ஹம்ப்

உடல் எடை அதிகரிப்பு மற்றும் மோசமான தோரணை காரணமாக இந்த பிரச்சனை ஏற்படலாம். ஆனால், சில காலமாக இந்த பிரச்சனை இருப்பின், அது மன அழுத்தம் அதிகமாக இருப்பதற்கான அறிகுறியைச் சுட்டிக் காட்டுகிறது. இந்த நிலையில், யோகா மற்றும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் இந்த பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Migraine: ஒற்றைத் தலைவலி பிரச்சனை உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துமா? நிபுணர்கள் கூறுவது இங்கே!

மெல்லிய முடி

முடி மிகவும் மெல்லியதாக இருப்பின், அந்த சமயத்தில் ஹார்மோன் அளவு சரிபார்க்கப்பட ஏண்டியது அவசியமாகும். இந்த அதிகப்படியான கார்டிசோல் காரணமாக முடி ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. இதில் முடியின் வேர்கல் வலுவிழக்கப்படுவதுடன், முடி மெல்லியதாக மாறத் தொடங்குகிறது.

முகப்பருக்கள்

அதிகப்படியான எண்ணெய் உற்பத்தி மற்றும் தவறான உணவுப்பழக்கத்தால் முகத்தில் பருக்கள் அடிக்கடி ஏற்படுகின்றன. ஆனால், மன அழுத்த ஹார்மோன்கள் சருமத்தையும் அதிகளவில் பாதிக்கலாம். மேலும் மன அழுத்த ஹார்மோன்கள் அதிகமாக இருக்கும்போது, முகத்தில் பருக்கள் தோன்ற ஆரம்பிக்கிறது. இந்த சூழ்நிலையில், தோல் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது.

அதிக வியர்வை

அதிக வெப்பநிலை காரணமாக வியர்வை ஏற்படுவது பொதுவானதாகும். ஆனால், சாதாரண வெப்பநிலையில் வியர்வை ஏற்பட்டால் அது மன அழுத்த ஹார்மோன்களின் அறிகுறியாகக் கருதப்படுகிறது. இந்த சூழ்நிலையில், மன அழுத்தத்தை நிர்வகிப்பது அவசியமாகிறது.

வீங்கிய கண்கள்

போதுமான தூக்கத்திற்குப் பிறகும், கண்கள் வீங்கி காணப்படுவது உயர் கார்டிசோல் அளவைக் குறிக்கிறது. இந்த சூழ்நிலையில், மன அழுத்த நிலைக்கு உடனடியாகக் கவனம் செலுத்துவது அவசியமாகும்.

இந்த அறிகுறிகள் அனைத்துமே மன அழுத்தம் அதிகமாக இருந்தால், உடலில் தோன்றும் அறிகுறிகளாகும். இந்த சூழ்நிலையில், மன அழுத்தத்தை நிர்வகிக்கவும், உடலில் கார்டிசோல் அளவைக் கட்டுப்படுத்தவும் சில ஆரோக்கியமான வழிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Stomach Pain Symptoms: வயிறு எப்படி வலித்தால் சாதாரணமாக எடுக்க கூடாது?

Image Source: Freepik

Read Next

Fungal Infection Prevention: மழைக்காலத்தில் பாடாய்படுத்தும் பூஞ்சை தொற்று… தப்பிக்க சூப்பர் டிப்ஸ் இங்கே..

Disclaimer