இன்றைய நவீன காலத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக பலரும் பல பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் நவீன வாழ்க்கையின் தவிர்க்க முடியாத ஒன்றாக மன அழுத்தம் அமைகிறது. மேலும் குறுகிய கால மன அழுத்தம் உண்மையில் கவலைக்குரியது அல்ல. எனினும், நாள்பட்ட மன அழுத்தம் குறிப்பிடத்தக்க சில உடல்நல அபாயங்களை ஏற்படுத்தலாம்.
எனவே தான் சில நேரங்களில், அதிகப்படியான மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறோம் என்பது மிகவும் தாமதமாகும் வரை நமக்குத் தெரியாமல் போய்விடுகிறது. ஆனால் நமது மன அழுத்தம் நமது ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கையைப் பாதிக்கிறது என்பதை எப்படி நாம் அறியலாம்? இதில் அதிகரித்த மன அழுத்தம் காரணமாக உடலில் தோன்றும் அறிகுறிகள் மற்றும் அதை எப்படி சமாளிப்பது என்பதைக் காண்போம்.
அதிக மன அழுத்தத்தின் உடலில் தோன்றும் அறிகுறிகள்
தொடர்ந்து வயிற்று எடை அதிகரிப்பு
சீரான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சி இருந்த போதிலும், தொப்பை கொழுப்பைக் குறைப்பதில் சிரமம் ஏற்படலாம். இது மன அழுத்தத்தின் போது வெளியாகும் அதிக கார்டிசோல் அளவுகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம். அதிகரித்த கார்டிசோல் காரணமாக வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேர வழிவகுக்குகிறது.
இந்த பதிவும் உதவலாம்: டென்ஷன் ஆகாதீங்க மக்களே; இந்த நோய் எல்லாம் விரட்டிக்கிட்டு பின்னாலேயே வரும்!
நாள்பட்ட சோர்வு
போதுமான ஓய்வுக்குப் பிறகும் தொடர்ந்து சோர்வடைவது நீடித்த மன அழுத்தத்தின் அறிகுறியாக தோன்றலாம். மன அழுத்தம் ஏற்படுவது தூக்க முறைகளை சீர்குலைத்து, ஆற்றல் இருப்புகளைக் குறைத்து, தொடர்ச்சியான சோர்வுக்கு வழிவகுக்கலாம்.
முகத்தில் வீக்கம்
மன அழுத்தத்தால் ஏற்படக்கூடிய ஹார்மோன் மாற்றங்கள் உடலில் தண்ணீரைத் தக்கவைக்கிறது. குறிப்பாக, இது முகத்தில் வீக்கம் அல்லது வீங்கிய தோற்றத்திற்கு வழிவகுக்குகிறது.
சர்க்கரை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள்
அதிக மன அழுத்தம் காரணமாக, சர்க்கரை மற்றும் கொழுப்பு நிறைந்த ஆறுதல் உணவுகளுக்கான ஏக்கத்தைத் தூண்டலாம். இந்த எதிர்வினையானது மன அழுத்தத்தை எதிர்கொள்ள விரைவான ஆற்றல் மூலங்களையும் மகிழ்ச்சிகரமான உணர்வுகளையும் தேடும் உடலின் முயற்சியாகும்.
விவரிக்கப்படாத எரிச்சல்
தெளிவான காரணமின்றி மனநிலை ஊசலாடுவது அல்லது அசாதாரணமாக எரிச்சல் ஏற்படுவது போன்றவை மன அழுத்தம் உணர்ச்சி ஒழுங்குமுறையைப் பாதிக்கிறது. இது அதீத மன அழுத்தத்திற்கான அறிகுறியாகும்.
அதிகாலை நேரங்களில் அடிக்கடி விழித்தெழுதல்
தொடர்ந்து அதிகாலை 2-3 மணிக்கு எழுந்திருப்பதும் கூட அதிகரித்த மன அழுத்தத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம். ஏனெனில், அதிகளவு மன அழுத்தமானது உடலின் இயற்கையான தூக்க-விழிப்பு சுழற்சியை சீர்குலைக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: மன அழுத்தம் ஆண்களில் மலட்டுத்தன்மையை ஏற்படுத்துமா.? மருத்துவரிடமிருந்து பதிலைத் தெரிந்து கொள்ளுங்கள்..
கழுத்து தசைகளில் பதற்றம்
நாள்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக பெரும்பாலும் உடல் ரீதியாக தசை இறுக்கமாக வெளிப்படுகிறது. குறிப்பாக, கழுத்து மற்றும் தோள்களில் அசௌகரியம் மற்றும் விறைப்புக்கு வழிவகுக்கலாம்.
முடி மெலிதல்
அதிகளவு மன அழுத்தமானது மயிர்க்கால்களை ஓய்வு நிலைக்குத் தள்ளும். இதனால், முடி உதிர்தல் அதிகரித்து, காலப்போக்கில் குறிப்பிடத்தக்க அளவில் மெலிந்து போகும் அபாயம் ஏற்படலாம்.
மன அழுத்தத்தை நிர்வகிக்க உதவும் உணவு முறைகள்
மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு சில ஆரோக்கியமான உணவுப்பழக்கங்களை ஏற்றுக்கொள்வது அவசியமாகக் கருதப்படுகிறது.
- முழு தானியங்கள், மெலிந்த புரதங்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் பல்வேறு பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைந்த உணவை உட்கொள்வது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. மேலும், இவை கார்டிசோல் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
- சீரான உணவுமுறைகளைக் கையாள்வதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை நிலையானதாக பராமரிக்கலாம். இதன் மூலம் மன அழுத்தத்துடன் தொடர்புடைய மனநிலை மாற்றங்கள் மற்றும் ஆற்றல் வீழ்ச்சிகளைத் தடுக்கலாம்.
- நீரிழப்பு காரணமாக மன அழுத்தம் அதிகரிக்கலாம். எனவே போதுமான அளவு நீர் உட்கொள்வது அவசியமானதாகக் கருதப்படுகிறது.
- இது தவிர, வால்நட்ஸ், சால்மன் மற்றும் ஆளி விதைகள் போன்ற ஒமேகா-3கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன.
- பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சர்க்கரை நிறைந்த சிற்றுண்டிகளைக் குறைப்பதன் மூலம் இரத்த சர்க்கரை அதிகரிப்பு மற்றும் சரிவைத் தடுக்கலாம். ஏனெனில் இது பதட்டம், மன அழுத்த உணர்வுகளுக்கு பங்களிக்கக் கூடியதாகும்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: Cortisol reducing tips: உங்க கவலைக்கு கார்டிசோல் அதிகரிப்பு தான் காரணமா? விரைவில் குறைக்க உதவும் டிப்ஸ் இதோ
Image Source: Freepik