Yoga poses for stress and anxiety: இன்றைய காலத்தில் மோசமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமான உணவுமுறை காரணமாக பலரும் பலதரப்பட்ட பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். குறிப்பாக, நீண்ட நேர உட்கார்ந்த வாழ்க்கை முறையானது உடல் ஆரோக்கியத்தைத் தவிர, மன ஆரோக்கியத்தையும் பாதிக்கும். நாள்பட்ட மன அழுத்தம், பதட்டம் போன்ற பல்வேறு அசௌகரியங்களுக்கு வழிவகுக்கிறது. ஆனால், இந்த மன அழுத்தம் சரும ஆரோக்கியத்தையும் பாதிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஆம். மன அழுத்தத்திற்கான அபாயங்களில் ஒன்றாக சரும ஆரோக்கியத்தையும் பாதிக்கக் கூடிய பருக்கள் தோன்றுவதும் அமைகிறது. இதனைத் தவிர்க்க பலரும் பல்வேறு முயற்சிகளைக் கையாள்கின்றனர். அதன் படி, மன அழுத்தத்தைக் குறைப்பது மிகவும் அவசியமாகக் கருதப்படுகிறது. மன அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம் முகத்தில் பருக்கள் தோன்றுவதைக் குறைக்கலாம். அவ்வாறு இயற்கையான தீர்வாக மன அழுத்தத்தைக் குறைத்து, பருக்களைக் குறைக்க சில யோகாசனங்களை மேற்கொள்ளலாம். இதில் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் யோகாசனங்களைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Yoga for Skin: சருமம் இயற்கையான பொலிவைப் பெற இந்த யோகாசனங்களை செய்யுங்க!
மன அழுத்தத்தைக் குறைக்கும் யோகாசனங்கள்
அதோ முக ஸ்வனாசனா (Downward-facing dog pose)
அதோ முக ஸ்வனாசனம் கீழ்நோக்கி எதிர்கொள்ளும் நாய் போஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆசனம் செய்வது கை, கால்கள் வலுப்பெற உதவுவதுடன், உடலில் இரத்த ஓட்டம் சீராக அமைக்க உதவுகிறது. இந்த ஆசனத்தை செய்வதற்கு முதலில் நேராக நிமிர்ந்து, ஆழ்ந்து மூச்சை இழுத்து விட்ட பிறகு, கால் மற்ரும் முட்டிகளை வளைக்காமல் குனிந்து கொள்ள வேண்டும். நேராக குனியாமல் சற்று முன்னோக்கி உள்ளவாறு குனிந்து உள்ளங்கைகளால் தரையைத் தொட வேண்டும். இதில் கைகள் காதுகளை மூடியவாறு வைக்க வேண்டும். மேலும், கண்கள் வயிறைப் பார்த்தவாறு வைத்து நன்றாக ஆழ்ந்து மூச்சை இழுத்து விட வேண்டும். பிறகு இயல்பு நிலைக்கு வந்து விடலாம்.
பாலாசனா (Child’s Pose)
குழந்தை போஸ் என்றழைக்கப்படும் பாலாசனா செய்வது மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் யோகாசனம் ஆகும். இந்த ஆசனத்தில் தோல்களின் கீழ் உள்ளங்கைகள் மற்றும் இடுப்புக்குக் கீழ் முழங்கால்களுடன் நான்கு கால்களிலும் தொடங்க வேண்டும். பின் முழங்கால்களை முடிந்தவரை பிரித்து இரண்டு கால் விரல்களையும் ஒன்றையொன்று தொடும்படி வைத்துக் கொள்ளலாம். முடிந்தவரை கைகளை நீட்டி, மேல் உடலை கீழே கொண்டு வரலாம். இவ்வாறு செய்யும் போது வயிறு, தொடைகளுக்கு இடையில் இருக்கும். இந்நிலையில் நெற்றியைத் தரையில் கொண்டு வந்து, சுவாசத்தில் கவனத்தைச் செலுத்தலாம்.
மார்ஜரியாசனம் - பிட்டிலாசனம் (Cat-Cow pose)
மார்ஜரியாசனம் - பிட்டிலாசனம் ஆசனம் இரண்டு போஸ்களின் கலவையைக் குறிக்கிறது. அதாவது பூனை-மாடு போஸ் நிலையாகும். இந்த ஆசனம் செய்ய முதலில் கைகள் மற்றும் முழங்கால்களில் தொடங்க வேண்டும். இதில் உள்ளங்கைகளை முடிந்த வரை அகலமாக விரித்துக் கொள்ள வேண்டும். பிறகு, கைகள் மற்றும் கால்கள் வழியாக எடையை சமமாக வைக்கத் தொடங்க வேண்டும். பிறகு மூச்சை உள்ளிழுக்கும் போது, மெதுவாக மார்பைத் திறந்து, தலையை மேலே உயர்த்திக் கொள்ளலாம். இதில் தோள்கள் பின்வாங்கி காதுகளிலிருந்து விலகிச் செல்லும். அதன் பிறகு, மூச்சை வெளியேற்றும்போது, முதுகுத்தண்டு வரை பயணித்து தொப்புளை முதுகெலும்பை நோக்கி உள்ளிழுத்து தலையை கீழ்நோக்கிக் கொண்டு செல்லலாம். இந்த ஆசனம் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Yoga for Anxiety: மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வை போக்க இந்த யோகா ஆசனங்களை செய்யுங்கள்!!
பச்சிமோத்தாசனம் (Seated forward bend pose)
உட்கார்ந்து முன்னோக்கி வளைந்து என்றழைக்கப்படும் இந்த ஆசனம் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் சிறந்த ஆசனமாகும். இந்த ஆசனத்தை செய்ய முதலில் கால்களை நீட்டி அமர்ந்து கொள்ள வேண்டும். இதில் முதுகை நேராக வைத்து, மூச்சை உள்ளிழுத்துக் கொண்டு கைகளை மேல் நோக்கி உயர்த்த வேண்டும். பின், மூச்சை வெளியேற்றிக் கொண்டே கைகளை முன்னால் நீட்டியவாறு முன் நோக்கி குனிய வேண்டும். பிறகு கைகளால் கால் பாதங்கள் அல்லது கால் கட்டை விரல்களைப் பிடித்துக் கொள்ளலாம். இதில் கால் முட்டியை வளைக்கக் கூடாது. மேலும் நெற்றியை காலில் வைக்க வேண்டும். இந்நிலையில் சில வினாடிகள் வைத்து, பிறகு பழைய நிலைக்குத் திரும்பலாம்.
சவாசனம் (Corpse pose)
இது எளிதாக செய்யக்கூடிய யோகாசனங்களில் ஒன்றாகும். இதை படுத்துக் கொண்டு செய்வதால் உடல் முழுவதும் தளர்வடையச் செய்கிறது. இந்த ஆசனம் செய்ய, முதலில் தரையில் மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும். பிறகு பக்கவாட்டில் கைகளை உடலோடு ஒட்டியோ அல்லது சிறிது இடைவெளியிலோ வைத்துக் கொள்ளலாம். ஆனால், உள்ளங்கைகள் மேலே பார்த்து இருக்குமாறு வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், இந்த ஆசனத்தின் போது மூச்சை மட்டும் சீராக இழுத்து விட்டுக் கொண்டிருக்க வேண்டும். இது உடல் தளர்வு மட்டுமல்லாமல், மனதைத் தளர்வடையச் செய்யவும் உதவுகிறது.
இந்த வகை யோகாசனங்களை மேற்கொள்வது மன அழுத்தத்தைக் குறைக்க உதவுவதுடன், பருக்கள் ஏற்படுவதைத் தோன்றக் குறைக்கிறது.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: Yoga for Cortisol: மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலைக் குறைக்க உதவும் யோகாசனங்கள்
Image Source: Freepik