Stress reducing yoga: மாணவர்களே! எக்ஸாம் டைம்ல பதட்டத்தைக் குறைக்க இந்த யோகாசனங்கள் செய்யுங்க

Which yoga is best for exam stress: தேர்வின் போது மன அழுத்தம், பதட்டம் ஏற்படுவது சாதாரணமான இருக்கலாம். ஆனால் இது தேர்வில் பின்தங்கிய நிலையை ஏற்படுத்த வாய்ப்புண்டு. இதில் தேர்வின் போது ஏற்படக்கூடிய மன அழுத்தத்தைக் குறைக்க செய்ய வேண்டிய யோகாசனங்களைக் காணலாம்
  • SHARE
  • FOLLOW
Stress reducing yoga: மாணவர்களே! எக்ஸாம் டைம்ல பதட்டத்தைக் குறைக்க இந்த யோகாசனங்கள் செய்யுங்க

Which yoga is best for reduce stress: தேர்வு என்றாலே ஒருவிதமன மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை பெரும்பாலனோர் அனுபவிப்பர். ஆனால், இது போன்ற அசௌகரியத்தால் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற முடியாமல் போக வாய்ப்பு ஏற்படலாம். குறிப்பாக, தேர்வு நேரத்தில் ஏற்படும் மன அழுத்தம், பதட்டம் போன்றவை தேர்வில் தெரிந்த கேள்விகளுக்குக் கூட விடை எழுத முடியாமல் போகலாம். இந்நிலையில், தேர்வின் போது ஏற்படும் மன அழுத்தத்தை நிர்வகிக்கவும், உணர்ச்சி நிலைத்தன்மையை பராமரிக்கவும், கவனத்தை அதிகரிக்கவும் ஒரு சிறந்த வழியாக யோகா அமைகிறது.

யோகா என்பது உடல் ஆரோக்கியத்துடன் மன ஆரோக்கியத்திற்கும் தொடர்புடையதாகும். அன்றாட வாழ்வில் சில யோகாசனங்களுடன் நாளைத் தொடங்குவது மன அழுத்தம், பதட்டத்தைக் குறைக்க ஏதுவாக அமைகிறது. அவ்வாறு, மாணவர்களும் சில யோகாசனங்களைச் செய்வதன் மூலம் தேர்வின் போது ஏற்படக்கூடிய மன அழுத்தத்தைக் குறைக்கலாம். மேலும் தேர்வுக்குத் தயாராகும் போது ஒரு கட்டமைக்கப்பட்ட வழக்கத்தைப் பின்பற்றுவது, சத்தான உணவுகளை உட்கொள்வது மற்றும் மன அழுத்தம், பதட்டத்தைக் குறைக்க பயனுள்ள முறைகளைக் கையாள்வது அவசியமாகும்.

இந்த பதிவும் உதவலாம்: மன அழுத்தத்தால் தோன்றும் முகப்பரு.. இரண்டையும் குறைக்க இந்த யோகாசனங்கள் செய்யுங்க

தேர்வு மன அழுத்தத்தைக் குறைக்க செய்ய வேண்டிய யோகாசனங்கள்

தடாசனம் (Mountain pose)

தடாசனம் அடிப்படையாக நிற்கும் ஆசனம் ஆகும். இந்த ஆசனம், தன்னம்பிக்கையை வளர்த்தவும், தோரணையை மேம்படுத்தவும் உதவுகிறது. தடாசனம் செய்யும் போது மனதை ஒருநிலைப்படுத்தி, சீரான சுவாசத்தில் கவனம் செலுத்துவதன் மூலம் பதட்டத்தைக் குறைத்து மனத்தெளிவை மேம்படுத்தலாம்.

செய்யும் முறை

முதலில் இரு கால்களையும் தோள்பட்டை அகலத்தில் விரித்து நிற்க வேண்டும். பின் எடையை இரு கால்களிலும் சமமாகப் பகிர்ந்தளிக்குமாறு வைத்துக் கொள்ள வேண்டும். இந்நிலையில், ஆழமாக மூச்சை உள்ளிழுத்து, மூச்சை வெளிவிடும் போது மையப்பகுதியை ஈடுபடுத்த வேண்டும். இதில் மார்பைத் திறக்க தோள்களை பின்னால் வளைக்கலாம். பிறகு இரு கைகளையும் கூரையை நோக்கி உயர்த்தி, ஒன்றுக்கொன்று இணையாகவும், காதுகளுக்கு நெருக்கமாக வைத்துக் கொள்ளலாம். பின் கண்களை ஒரே ஒரு புள்ளியில் மையப்படுத்தி, 60 விநாடிகள் வரை இந்த நிலையில் வைத்து, பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பலாம்.

மர்ஜரியாசனம்- பிட்டிலாசனம் (Cat-cow pose)

மர்ஜரியாசனம், பிட்டிலாசனம் என்ற இரண்டு ஆசனங்களுக்கு இடையிலான இந்த மென்மையான ஓட்டம், முதுகுத்தண்டின் பதற்றத்தை விடுவிக்கவும், தளர்வை ஊக்குவிக்கவும் உதவுகிறது. இந்த இயக்கத்தை சுவாசத்துடன் ஒத்திசைப்பதன் மூலம், மாணவர்கள் தங்கள் மனதை அமைதிப்படுத்தவும், மன அழுத்தம் தொடர்பான உடல் அசௌகரியத்தைக் குறைக்கவும் முடியும்.

செய்யும் முறை

இதில் முதலில் கைகள் மற்றும் முழங்கால்களில் தாங்கி, மணிக்கட்டுகள் தோள்களுக்குக் கீழும், முழங்கால்கள் இடுப்புக்குக் கீழ் நேரடியாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இதில் தலையை மேல்நோக்கி கொண்டு வரும்போது, இடுப்பை பசு போல சாய்த்து, ஆழமாக மூச்சை இழுக்க வேண்டும். பிறகு, ஆழமாக மூச்சை இழுத்து வயிற்றை உள்ளே கொண்டு வரலாம். இதில் முதுகெலும்பை வளைத்து, தலை மற்றும் இடுப்பை "பூனை" போல கீழே கொண்டு வர வேண்டும். இதை பல முறை செய்யலாம். சுமார் 10-15 சுவாச சுழற்சிகளுக்கு அல்லது உங்கள் வசதிக்கேற்ப வரிசையை மீண்டும் செய்யலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Yoga for Cortisol: மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலைக் குறைக்க உதவும் யோகாசனங்கள்

பாலாசனம் (Child Pose)

பாலாசனம் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி உடனடி மன அழுத்த நிவாரணத்தை அளிக்கும் ஒரு புத்துணர்ச்சியூட்டும் ஆசனம் ஆகும். இது உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி மன அழுத்தத்தைக் குறைக்கிறது.

செய்யும் முறை

பாலாசனம் செய்ய முதலில் தரையில் இரண்டு கால்களையும் மடக்கி பிட்டத்தின் மீது உட்கார வேண்டும். இப்போது கால்விரல்கள் இரண்டும் ஒன்றின் மீது ஒன்று இணைந்து இருக்க வேண்டும். பிறகு மூச்சை உள்ளிழுக்குமாறு இரண்டு கைகளையும் தலைக்கு மேல் தூக்கலாம். அதன் பின், மூச்சை வெளிவிட்டுக் கொண்டே முன்னோக்கி குனிய வேண்டும். இப்போது நெற்றியானது தரையைத் தொடும். இந்நிலையில் பிட்டத்தைத் தூக்கக் கூடாது. இதில் சாதாரணமாக சுவாசித்துக் கொண்டே 2-3 நிமிடங்கள் இருந்து, பிறகு பழைய நிலைக்குத் திரும்பலாம். இவ்வாறு 5-10 முறை செய்யலாம்.

பச்சிமோத்தாசனம்

இந்த ஆசனம் உட்கார்ந்த நிலையில் முன்னோக்கி வளைந்து செய்யப்படும் ஒரு யோகாசனமாகும். இது முதுகுத்தண்டை சிறப்பாக இயக்க உதவுகிறது. பச்சிமோத்தாசனம் செய்வது மூளை செல்களை அமைதிப்படுத்தி, மன அழுத்தம், பதட்டம், மனச்சோர்வு ஆகியவற்றைக் குறைக்க உதவுகிறது. 

செய்யும் முறை

பச்சிமோத்தாசனம் செய்வதற்கு முதலில் தரையில் அமர்ந்து கொள்ள வேண்டும். பிறகு இரண்டு கால்களையும் நேராக வைக்க வேண்டும். இப்போது மெதுவாக உடலை முன்னோக்கி வளைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு முன்னோக்கி வளையும் போது மூச்சை வெளியே விட வேண்டும். பிறகு கால் விரல்களைப் பிடிக்க முயற்சிக்கலாம்.

மாணவர்கள் இந்த வகை யோகாசனங்களைச் செய்வதன் மூலம் தேர்வு நேரத்தில் சந்திக்கக் கூடிய மன அழுத்தம், பதட்டத்தை எதிர்த்துப் போராடலாம்.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil FacebookOnlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: Yoga for Anxiety: மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வை போக்க இந்த யோகா ஆசனங்களை செய்யுங்கள்!!

Image Source: Freepik

Read Next

எவ்ளோ பெரிய தொப்பையையும் அசால்ட்டாகக் குறைக்க தினமும் தூங்கும் முன் நீங்க செய்ய வேண்டிய யோகாசனங்கள்

Disclaimer