How To Reduce Stress: இன்றைய வாழ்க்கை முறை, இளைஞர்களிடையே அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இது வேலையின் காரணமாக இருக்கலாம், அல்லது குடிம்ப சூழல், சமூக சூழல் ஆகியவையும் இதற்கு காரணமாக இருக்கலாம்.
மன அழுத்தத்திற்கு உடலில் உள்ள ஹார்மோன் ஏற்றத்தாழ்வும் ஒரு வகை காரணமாக இருக்கலாம். இது இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்க்கு வழிவகுக்கும். இதனால் நீங்கள் மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவது அவசியம். இதற்காக நீங்கள் செய்ய வேண்டியவை இங்கே.
முக்கிய கட்டுரைகள்

உடற்பயிற்சி செய்யவும்
உங்கள் உடல் மற்றும் மனதை ஒருங்கிணைப்பதில் உடற்பயிற்சி முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் குறைந்தது 30 நிமிடம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இது உங்கள் உடலில் எண்டோர்பின் ஹார்மோனை அதிகரிக்க உதவுகிறது. இந்த ஹார்மோன் உங்கள் மன அழுத்தத்தை குறைக்கும்.
இதையும் படிங்க: Stress Relieving Tips: மன அழுத்தம் அதிகமாக இருக்க? இத பாளோ பண்ணுங்க!
திட்டமிட்டு செயல்படவும்
நீங்கள் எந்த வேலை செய்தாலும் அதனை திட்டமிட்டு செய்யவும். இதற்கென நீங்கள் ஒரு தனி அட்டவணையை உருவாக்கிக்கொள்ளவும். இவ்வாறு செய்தால் நீங்கள் பதட்டம் இல்லாமல் வேலை செய்வீர்கள். இது உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தாது.
சுவாசப் பயிற்சி செய்யவும்
மன அழுத்தம் உங்கள் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம். மேலும் இது மூச்சு விடுவதில் சிரமத்தை ஏற்படுத்தலாம். இந்த நேரத்தில் ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. இது உங்கள் மனநிலையை அமைதியாக்கவும், சுவாசப் பிரச்னைகளை நீக்கவும் உதவும்.
நேரம் ஒதுக்கவும்

உங்கள் அன்றாட வாழ்க்கையில் நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும், உங்களுக்கென்று நேரம் ஒதுக்குவது அவசியம். புத்தகம் படிப்பது, பாடல்கள் கேட்பது, நடனம் ஆடுவது, சமையல் செய்வது என உங்கள் கவனத்தை மாற்றும் சில செயல்களில் ஈடுபடவும். இது உங்கள் மனநிலையை அமைதியாக வைத்திருக்க உதவும். மேலும் இது மன அழுத்தத்தை குறைக்கும்.
Image Source: Freepik