Stress Reduce Foods: மன அழுத்தத்தை குறைக்க உதவும் டாப் உணவுகள்..

  • SHARE
  • FOLLOW
Stress Reduce Foods: மன அழுத்தத்தை குறைக்க உதவும் டாப் உணவுகள்..


Stress Reduce Foods: மோசமான வாழ்க்கை முறையால் மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்ற பிரச்சனைகள் மக்களிடையே வேகமாக அதிகரித்து வருகிறது. உடல் நலத்திற்கு மிகவும் கேடு விளைவிக்கும் மன அழுத்த பிரச்சனையால் பலர் போராடி வருகின்றனர்.

மன அழுத்த பிரச்சனை நீண்ட நாட்களாக நீடித்தால், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. பெரும்பாலான மக்கள் ஒரு செயலற்ற வாழ்க்கை முறையை வாழ்கிறார்கள், அதாவது வீட்டிலேயே அமர்ந்தபடி வேலை பார்ப்பது, அனைத்து பணிக்கும் இயந்திரம் என காலநிலை மாறிவிட்டது.

பலர் தங்கள் உணவில் கவனம் செலுத்துவதில்லை, உடற்பயிற்சி எதுவும் செய்வதில்லை இதன்காரணமாக மன அழுத்தம் மற்றும் பதற்றம் அதிகரித்து வருகிறது. மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்க உதவும் உணவு வகைகளை இப்போது பார்க்கலாம்.

மன அழுத்தத்தை குறைக்க என்ன சாப்பிடலாம்?

உணவியல் நிபுணர் ஷிவாலி குப்தா இதுகுறித்து கூறுகையில், சில உணவுகளை உங்கள் உணவு முறையில் சேர்த்துக் கொள்வதால் உங்கள் மன அழுத்தம் மற்றும் பதற்றம் குறைய வாய்ப்புள்ளது. இந்த உணவுகளை உட்கொண்டால் ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை மேற்கொள்ளலாம்.

இதனுடன் போதிய தூக்கத்தை பெற வேண்டியது அவசியம். முறையாக தினசரி தூங்கி காலை எழுந்திருக்க வேண்டும். அதேபோல் தினசரி யோகா மற்றும் உடற்பயிற்சி செய்யுங்கள்.

மன அழுத்தம் குறைக்க உதவும் உணவுகள்

ப்ரோபயோடிக் நிறைந்த உணவுகள் நம் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இந்த உணவுப் பொருட்களை உணவில் சேர்ப்பதன் மூலம் மன அழுத்த பிரச்சனையை குறைக்கலாம். உணவில் ப்ரோபயோடிக் சேர்ப்பது வயிற்றில் ஆரோக்கியமான பாக்டீரியாக்களை வளர்க்க உதவும். இது மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

தயிர், மோர், பாலாடைக் கட்டி போன்ற உணவுகளில் ப்ரோபயோடிக்குகள் நிறைந்துள்ளன. இது உங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மன ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.

வைட்டமின் பி12

உடலில் வைட்டமின் பி12 குறைபாடு இருந்தாலும் மன அழுத்தம், எரிச்சல் மற்றும் பதற்றம் அதிகரிக்கும். இதன் குறைபாடு மக்களின் மன ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. மன அழுத்தத்துடன் போராடுபவர்கள் உணவில் வைட்டமின் பி12ஐ சேர்க்க வேண்டியது நல்லது.

உணவில் வைட்டமின் பி 12 நிறைந்த உணவுகளைச் சேர்ப்பது உடலுக்கு ஆற்றலை வழங்குகிறது, இதற்காக நீங்கள் சூரை, சால்மன் போன்ற மீன்களை உட்கொள்ளலாம், இது தவிர, பால் மற்றும் அதன் தயாரிப்புகள், முட்டை மற்றும் சில காய்கறிகளிலும் வைட்டமின் பி 12 உள்ளது.

வைட்டமின் சி நிறைந்த உணவுகள்

வைட்டமின் சி நிறைந்த உணவுகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், அதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மன அழுத்த அளவைக் குறைக்கவும் உதவியாக இருக்கும். நெல்லிக்காய், எலுமிச்சை, ஆரஞ்சு, பப்பாளி, தக்காளி, திராட்சை, ஸ்ட்ராபெர்ரி மற்றும் கிவி போன்ற வைட்டமின் சி நிறைந்த உணவுகளும் உடலின் ஆற்றலை அதிகரிக்க உதவுகின்றன.

Image Source: FreePik

Read Next

Keto Diet Benefits: கீட்டோ டயட் இருந்தா ஸ்ட்ரெஸ் குறையுமாம்! ஆராய்ச்சியாளர்கள் தரும் விளக்கம்

Disclaimer

குறிச்சொற்கள்