Is Keto Good For Mental Health: உடல் எடை மேலாண்மைக்கு பலரும் பல வகையான டயட் முறைகளை பின்பற்றுகின்றனர். இதில் கெட்டோஜெனிக் உணவு, பேலியோ டயட், இடைப்பட்ட விரதம், வேகன் டயட், மெடிட்டெரேனின் டயட் போன்ற பல்வேறு வகையான டயட் வகைகள் அடங்கும். அந்த வகையில் கெட்டோஜெனிக் டயட் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதுடன், மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது.
கெட்டோஜெனிக் டயட்
இது எடை இழப்பு நன்மைகளுக்காக முதன்மையாகக் கருதப்படுகிறது. இந்த கெட்டோஜெனிக் டயட் ஆனது மனநலம் மற்றும் மன அழுத்த நிலைகளை கணிசமாக பாதிப்பதாக சமீபத்திய ஆராய்ச்சி ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த கெட்டோஜெனிக் டயட் குறித்து பலருக்கும் தெரிவதில்லை. இதில் கெட்டோஜெனிக் உணவு என்பது அதிக கொழுப்பு, மிதமான புரதம் மற்றும் மிகக் குறைந்த கார்போஹைட்ரேட் விதிமுறைகளை உள்ளடக்கியதாகும்.
இது உடலின் முதன்மை ஆற்றல் மூலத்தை குளுக்கோஸிலிருந்து கீட்டோன்களுக்கு மாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆற்றல் மூலம் கொழுப்புகளிலிருந்து பெறப்படுகிறது. இந்த கெட்டோசிஸ் என்ற வளர்ச்சிதை மாற்ர நிலை, எடையிழப்புக்கு உதவுவதுடன், பல்வேறு நரம்பியல் நன்மைகளையும் தருகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Workplace Stress: பணி இடத்தில் மன அழுத்தம் ஏற்பட இது தான் காரணம்?
கெட்டோ டயட் மன ஆரோக்கியத்துடன் எவ்வாறு தொடர்புடையது?
மூளையின் அளவு சிறியதாக இருப்பினும், தினசரி ஆற்றலில் கணிசமான பகுதியைப் பயன்படுத்துகிறது. சாதாரண சூழ்நிலைகளில் இது குளுக்கோஸை அடிப்படையாகக் கொண்டுள்ளது. எனினும், கெட்டோஸின் போது மூளை கீட்டோன்களைப் பயன்படுத்துவதற்குத் தழுவுகிறது.
மனநிலை மேம்பாடு மற்றும் பதற்றத்தைக் குறைப்பது
கெட்டோசிஸ் ஆனது GABA என்ற காமா-அமினோபியூட்ரிக் அமிலம் உற்பத்தியாவதை ஊக்குவிக்கிறது. இது மூளையில் ஒரு அடக்கும் விளைவைக் கொண்ட ஒரு நரம்பியல்கடத்தியாகும். இதன் மூலம் பதட்டத்தைக் குறைத்து, மனநிலையை மேம்படுத்த முடியும்.
மேலும் இரத்த சர்க்கரையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் மனநிலை மாற்றங்கள் மற்றும் மன அழுத்தத்திற்கு வழிவகுக்கலாம். இந்த சமயத்தில் கெட்டோஜெனிக் உணவை எடுத்துக் கொள்வது இரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்துகிறது. மேலும் இதன் மூலம் ஒரு நிலையான மனநிலையை பராமரிக்க முடியும்.
இந்த பதிவும் உதவலாம்: Mental Stress Symptoms: மன அழுத்தம் உடல் வலியை ஏற்படுத்துமா? உண்மை இதோ!
நரம்பியல் பாதுகாப்பு மற்றும் மூளை செயல்பாட்டிற்கு
கீட்டோன்கள் மைட்டோகாண்ட்ரியல் செயல்பாட்டை மேம்படுத்தவும், மூளையில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இதில் மைட்டோகாண்ட்ரியல் ஆனது நமது உயிரணுக்களின் ஆற்றல் மற்றும் அதன் உகந்த செயல்பாடு மூளை ஆரோக்கியத்திற்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
கூடுதலாக, உடலில் ஏற்படும் நாள்பட்ட வீக்கம் தொடர்பாக மனச்சோர்வு மற்றும் பதட்டம் உள்ளிட்ட பல மனநலக் கோளாறுகள் ஏற்படலாம். இதற்கு கீட்டோஜெனிக் டயட் சிறந்த தேர்வாகும். கீட்டோஜெனிக் உணவுகள் அழற்சி எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டுள்ளதால், மனநல ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது
மேம்படுத்தப்பட்ட அறிவாற்றல் செயல்பாடு
கெட்டோஜெனிக் உணவுமுறை கவனம் மற்றும் நினைவாற்றலை மேம்படுத்த உதவுகிறது என ஆய்வுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை அதிக மன அழுத்தத்தின் போது பெரும்பாலும் பலவீனமடையலாம். கீட்டோஜெனிக் டயட்டில் உள்ள நபர்கள் பெரும்பாலானோர் மனத் தெளிவு மற்றும் விழிப்புணர்வுடன் செயல்படுவதாகவும், மன அழுத்தம் மற்றும் பதற்றத்தால் வரும் அறிவாற்றல் மூடுபனியைக் குறைப்பதாகவும் கூறப்படுகிறது.
ஹார்மோன் சமநிலை
நாள்பட்ட மன அழுத்தம் கார்டிசோலை உயர்த்தலாம். இது முதன்மையான மன அழுத்த ஹார்மோன் ஆகும். இந்த மன அழுத்த ஹார்மோன் உயர்வால் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படலாம். கெட்டோஜெனிக் உணவு உடலில் கார்டிசோலின் அளவைக் கட்டுப்படுத்துவதுடன், உடலின் ஒட்டுமொத்த மன அழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது.
இதன் மூலம் கெட்டோஜெனிக் டயட் உடல் ஆரோக்கியத்துடன், மன ஆரோக்கியத்திற்கும் உதவுவதை எடுத்துரைக்கிறது. இது இரத்த சர்க்கரையை நிலைநிறுத்தவும், வீக்கத்தைக் குறைக்கவும், நரம்பியல் பாதுகாப்பு வழிமுறைகளை ஊக்குவிக்கவும், மன அழுத்தத்தை எதிர்த்துப் போராடுவதுடன், மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Yoga For Mental Health: மன ஆரோக்கியத்திற்கு யோகா ஏன் முக்கியம் தெரியுமா?
Image Source: Freepik