$
Keto Diet Plan for Weight Loss: தற்போது மக்கள் வேகமாக உடல் எடையை குறைக்க கீட்டோ டயட்யை கடைபிடிக்க துவங்கியுள்ளனர். இந்த டயட்டில் அதிக கார்போஹைட்ரேட் உள்ளடக்கம் இருப்பதால், இது விரைவான எடை இழப்புக்கு வழிவகுக்கிறது. எனவே தான், கீட்டோ டயட் மக்கள் மத்தியில் பிரபலமாகவும், நம்பிக்கையாவும் உள்ளது.
ஆனால், நம்மில் பலருக்கு உடல் எடையை குறைக்கும் கீட்டோ டயட் பற்றி முழுமையாக தெரியாது. கீட்டோ டயட் என்பது என்ன? இதன் உணவு முறைகள் பற்றி எய்ம்ஸ் டாக்டர் பிரியங்கா ஷெராவத் நமக்கு வழங்கிய முழு தகவல் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Grapes for Weight Loss: ஒரே வாரத்தில் 5 கிலோ வரை எடை குறையணுமா? அப்போ கருப்பு திராட்சையை இப்படி சாப்பிடுங்க!
கீட்டோ டயட் என்பது என்ன?

கீட்டோ டயட் கார்போஹைட்ரேட் உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் அவற்றை கொழுப்புடன் மாற்றுகிறது. இது உடலை கெட்டோசிஸ் நிலைக்குத் தள்ளுகிறது. இதில் எரிபொருளுக்கு கார்போஹைட்ரேட்டுகளுக்குப் பதிலாக கொழுப்பைப் பயன்படுத்துகிறது. கீட்டோஜெனிக் உணவு முக்கியமாக எடை இழப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
கீட்டோ உணவில் முக்கியமாக இறைச்சி, மீன் மற்றும் குறைந்த கார்ப் காய்கறிகள் அடங்கும். அதாவது, கடல் உணவு, கோழி, இறைச்சி, மீன், முட்டை, கோஸ் வகைகள், காலிஃபிளவர், ப்ரோக்கோலி, கேப்சிகம், தக்காளி போன்றவற்றை உண்ணலாம். மாவுச்சத்து, கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் இல்லாத காய்கறிகளை சாப்பிடுங்கள்.
இந்த பதிவும் உதவலாம் : Weight Loss Tips: தூங்கும் போது கூட உடல் எடை குறைய… இத செஞ்சா மட்டும் போதும்!
கீட்டோ டயட்யின் போது, ஒருவர் ஒவ்வொரு நாளும் 50 கிராம் கார்போஹைட்ரேட்டுகளை உட்கொள்ள வேண்டும். அதே போல உணவில் தினமும் 40-50 கிராம் புரதத்தை உட்கொள்ள வேண்டும். இது டயட்டின் வழக்கமான உட்கொள்ளல் ஆகும், ஆனால் ஒவ்வொரு உணவும் வெவ்வேறு அளவு புரதம், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை கொண்டது.
எனவே, உணவு உண்ணும் போதெல்லாம், அதில் கார்போஹைட்ரேட் குறைவாக இருப்பதை உறுதிசெய்யவும். கார்போஹைட்ரேட்டுகளை உடல் சர்க்கரையாக மாற்றுகிறது, இது ஆற்றலுக்கு உதவுகிறது. கீட்டோ டயட்யில் இருக்கும் போது கார்போஹைட்ரேட்டுகளை உட்கொள்வதைக் குறைப்பதன் மூலம், உடல் ஆற்றலுக்காக கார்போஹைட்ரேட்டுகளுக்குப் பதிலாக கொழுப்பைப் பயன்படுத்தத் தொடங்குகிறது.
இந்த பதிவும் உதவலாம் : Low Calorie Snacks: வெறும் 100 கலோரிகளை கொண்ட வெயிட் லாஸ் ஸ்னாக்ஸ்!!
இதன் காரணமாக குளுக்கோஸ் அளவு குறைகிறது. உடலில் குளுக்கோஸ் அளவு குறைவதால், அது கீட்டோன்களை உற்பத்தி செய்ய உடல் தூண்டப்பகிறது. இதனால், இரத்தத்தில் உள்ள கழிவுகள் வெளியேருவதுடன், கொழுப்பும் முழுமையாக எரிக்கப்படும். இது கெட்டோசிஸ் என்று அழைக்கப்படுகிறது.
கீட்டோ டயட் நன்மைகள்

கீட்டோ டயட் மூலம் பசியை முழுமையாக கட்டுப்படுத்தலாம். இதனால், உடல் எடை விரைவாக குறையும்.
கீட்டோ உணவு குளுக்கோஸ் அளவைக் குறைக்கிறது, இதன் காரணமாக இது வகை 2 நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
Pic Courtesy: Freepik