$
தூக்க நிலைகள் (Sleeping Position) எடை இழப்பை எவ்வாறு பாதிக்கலாம், ஒரு நபர் தூங்கும்போது கொழுப்பை எரிக்க முடியுமா மற்றும் பாதுகாப்பான எடை இழப்புக்கான உதவிக்குறிப்புகளை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்…
தூக்கம் எடையை குறைக்க உதவுமா?
மனிதர்களின் உறக்க நிலை மற்றும் அதன் தரம் எடை அதிகரிக்கவோ, குறையவோ காரணமாக அமையலாம் என ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
2022 ஆம் ஆண்டு, இரவில் 7 மணி நேரத்திற்கும் குறைவாக உறங்கக்ககூடிய குண்டான நபர்களை வைத்து மருத்துவ ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் டிரஸ்டெட் சோர்ஸ் நடத்திய இந்த ஆய்வில், நன்றாக உறங்குபவர்கள் உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி, டயட் போன்ற திட்டங்களை பின்பற்றினால், அது கணிசமான அளவு கொழுப்பை குறைக்க உதவும் என்பது கண்டறியப்பட்டது.

அதேசமயம் போதுமான தரமான தூக்கத்தைப் பெறுபவர்களைக் காட்டிலும் சரியாக உறங்காதவர்கள் குறைந்த அளவிலான கொழுப்பை மட்டுமே எரிக்க முடியும். மேலும் உறக்கமின்மை மன அழுத்தம், ஸ்ட்ரேஸ் ஈட்டிங் போன்ற பிரச்சனைகளையும் கொண்டு வரும் என்பதால், உடல் எடை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
எது தவறான உறக்க நிலை?
நீங்கள் காலையில் எழுந்ததும், கைகள் மற்றும் கழுத்து பகுதியில் வலியை உணர்த்தால் தவறான பொஷிசனில் படுத்து உறங்கியிருக்கிறீர்கள் என அர்த்தம். ஏனெனில் தரமான தூக்கம் என்பது உடலில் எவ்வித மூட்டுகளிலும் அழுத்தத்தைக் கொடுக்காத வகையில் இருக்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: Belly Fat: தொங்கும் தொப்பையை சட்டென குறைக்க… இந்த 3 விஷயங்கள பின்பற்றுங்க!
நீங்கள் கழுத்து மற்றும் முதுகுவலியால் அவதிப்பட்டால், உங்கள் தலையின் கீழ் தலையணையை வைக்க வேண்டாம். தேவைப்பட்டால், ஒரு டவலை மடித்து வைத்துக் கொள்ளலாம்.
நமது கழுத்தின் அமைப்பு முற்றிலும் நேராக இல்லாமல் சற்று முன்னோக்கி சாய்ந்துள்ளது. எனவே மிகவும் மெல்லிய அல்லது கனமான தலையணையை பயன்படுத்தக்கூடாது. இது முதுகு மற்றும் தசைகளில் வலியை ஏற்படுத்தும்.
எப்படி தூங்குவது நல்லது?
குப்புற படுத்தப்படி உறங்குவது வயிற்றில் அதிக அழுத்தத்தை மட்டுமல்ல கழுத்து மற்றும் உடலின் பின்புறத்திலும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில் படுத்தால் தான் ஆழமான உறக்கத்தை அனுபவிப்பீர்கள் என்றால், வயிற்று பகுதியில் தலையணை வைத்துக்கொள்ள நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
பக்கவாட்டில் உறங்கும் போது, தோள்பட்டை படுக்கையைத் தொட வேண்டும். அதாவது, உடலின் மற்ற பகுதிகள் ஒரே வரிசையில் இருக்க வேண்டும். முழங்காலின் நடுவில் ஒரு தலையணையை வைக்கவும். இடுப்புக்கும் படுக்கைக்கும் இடையில் பெரிய இடைவெளி இருந்தால், அதை நிரப்பவும் தலையணையை பயன்படுத்தலாம்.

இடது பக்கமாக படுத்து உறங்குவது சிறந்த தோரணையாக கருதப்படுகிறது. குறட்டை பிரச்சனையில் இருந்தும் விடுபடலாம். ஆனால், தொடர்ந்து ஒரு பக்கம் தூங்குவது நல்லதல்ல. இந்த ஆசனத்தில் இடுப்பு வளைந்து முழங்கால்கள் ஒன்றோடொன்று உராய்வதால், இது முழங்கால்கள் மற்றும் இடுப்பில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. இது மூட்டு வலியையும் அதிகரிக்கும். நீங்கள் இந்த பொஷிசனில் படுத்து உறங்க முடிவெடுத்தால், முழங்கால்களுக்கு இடையில் ஒரு தலையணையை வைத்து தூங்குங்கள், இது ஒரு கால்கள் மீதான அழுத்தத்தை குறைக்கும்.
நிபுணர்களின் கூற்றுப்படி, முதுகுப்புறமாக உறங்குவது நல்லது என்கின்றனர். ஏனெனில் இதனால் உடலில் எந்த பகுதியிலும் அழுத்தம் ஏற்படுவது கிடையாது. ஆனால், தொடர்ந்து முதுகில் தூங்குவது உடலின் பின்புறத்தில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. அத்தகைய நிலையில், உங்கள் முழங்கால்களுக்கு கீழ் ஒரு தலையணையை வைத்து தூங்குங்கள். இது தோரணையுடன் இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்துகிறது.
Image Source: Freepik