Benefits of Papaya In Weight Loss: இன்றைய மோசமான வாழ்க்கை முறையால், உடல் பருமன் தவிர்க்க முடியாத ஒன்றாக திகழ்கிறது. செயலற்ற வாழ்க்கை முறை, மோசமான பழக்கங்கள், குப்பை உணவுகள் போன்றவை உடல் பருமனை ஏற்படுத்துகிறது. இதனை குறைக்க போராடி வருகின்றனர்.
பொதுவாக உடல் எடையை குறைக்க டையட் ஃபாளோ செய்வது, ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்வது, ஆன்லைனில் பயிற்சியாளர் உதவியுடன் உடற்பயிற்சியில் ஈடுபடுவது, யோகா செய்வது என பல முயற்சிகளில் ஈடுபடுவார்கள். ஆனால் செலவே இல்லாமல் உடல் எடையை குறைக்கலாம் என்றால் உங்களால் நம்ப முடிகிறது? ஆம், செலவு கம்மி தான். தினமும் ஒரு கப் பப்பாளி சாப்பிடுங்க. இதனுடன் கொஞ்சம் உடற்பயிற்சியும் செய்யுங்கள். உடம்பு சும்ப நச்சின்னு இருக்கும்.

எடையை குறைப்பதில் பப்பாளியின் பங்கு என்ன?
பப்பாளியில் மிக குறைவான கலோரிகளும், அதிகம் நார்ச்சத்துகளும், ஆன்டி - ஆக்சிடண்ட்டுகளும் நிறைந்துள்ளன. இது உடலுல் தேவையற்ற கொழுப்புகளை நீக்கி, எடையை குறைக்க உதவுகிறது. மேலும் இதில் வைட்டமின் சி, ஏ, ஈ போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இது சருமத்தையும் பாதுகாக்கிறது.
எடை குறைய பப்பாளியை எப்படி சாப்பிடனும்?

* பாலுடன் பப்பாளியை எடுத்துக்கொள்ளுங்கள். இது உங்களை நீண்ட நேரம் முழுமையாக வைத்திருக்கும். இதனால் உங்களுக்கு அடிக்கடி பசிக்காது. இது உங்கள் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
* பப்பாளியுடம் உலர் பழங்களை தயிரில் ஊற வைத்து சாப்பிடுங்கள். இது உங்களை நீண்ட நேரத்திற்கு முழுமையாக வைத்திருக்கும்.
* காலை உணவாக பப்பாளியில் மிளகு மற்றும் உப்பு சேர்த்து சாப்பிடுங்கள். இது உடல் எடையை குறைக்க உதவும்.
பப்பாளியில் நார்ச்சத்து உள்ளதால், உங்கள் செரிமான அமைப்பு மேம்படும். இதனால் மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் ஏற்படாது. இதனால் உங்கள் உடலில் கழிவுகள் தேங்காமல் வெளியேறும். இது உங்கள் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
Image Source: Freepik