Tulsi for weight loss: வயிற்றில் தொங்கிய தொப்பைக் கொழுப்பைக் குறைக்க துளசி இலை ஒன்னு போதும்!

Tulsi leaves benefits for weight loss: எடையைக் குறைப்பதற்கு அன்றாட உணவில் சில மூலிகைகளை எடுத்துக் கொள்ளலாம். அவ்வாறு எடையைக் குறைப்பதில் துளசி இலை முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் உடல் எடை குறைய துளசி இலையைப் பயன்படுத்தும் முறைகளைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
Tulsi for weight loss: வயிற்றில் தொங்கிய தொப்பைக் கொழுப்பைக் குறைக்க துளசி இலை ஒன்னு போதும்!

Tulsi benefits for weight loss in tamil: இன்றைய காலகட்டத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக பலரும் பல பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். அதில் ஒன்றாக உடல் பருமனும் அடங்கும். இதனால், எடையிழப்புக்கு பலரும் பல முயற்சிகளை மேற்கொள்கின்றனர். எனினும், இந்த எடையிழப்பு பயிற்சி மிகவும் கடினமானதாகும். உடல் எடை குறைப்பு முயற்சியில் ஈடுபடுபவர்கள் குறிப்பாக தங்கள் உணவைக் கண்காணிப்பது அவசியமாகும். இதனுடன், சீரான தூக்கமுறை, மன அழுத்தத்தை நிர்வகித்தல் போன்றவற்றின் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம். அவ்வாறு உடல் எடையைக் குறைக்க உதவும் சில மூலிகைகளில் துளசி முக்கிய பங்கு வகிக்கிறது.

துளசி பல்வேறு ஆரோக்கியமான பண்புகள் கொண்ட சிறந்த மூலிகையாகும். இது பொதுவாக இருமலுக்கு சிறந்த மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்ததாகும். எனவே இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இது செரிமானத்தை மேம்படுத்தவும், வாயு மற்றும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. ஆனால் துளசி உட்கொள்வது எடையிழப்புக்கு உதவும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். உண்மையில் உடல் எடையைக் குறைக்க துளசி மிகவும் முக்கிய பங்காற்றுகிறது. இதில் எடை குறைய துளசி எவ்வாறு எடுத்துக் கொள்ளலாம் என்பது குறித்து காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: தொப்பையை இருந்த இடம் தெரியாமல் மறையச் செய்யும் சியா விதைகள்! எப்படி சாப்பிடுவது

எடையிழப்புக்கு துளசி எவ்வாறு உதவுகிறது?

துளசியின் பல்வேறு மருத்துவம் நிறைந்த பண்புகள் உடல் எடை இழப்புக்கு உதவுகிறது. இதில் எடையிழப்புக்கு துளசி தரும் நன்மைகளைக் காணலாம்.

செரிமானத்தை மேம்படுத்த

புனித துளசி செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது வயிற்று உப்புசத்தைக் குறைக்க உதவுகிறது. செரிமான அமைப்பு உணவுகளை சரியாக உடைக்க இயலாமையால் அஜீரணம் ஏற்படுவதுடன் எடை அதிகரிக்க வழிவகுக்கலாம். இந்நிலையில் உடல் எடையிழப்புக்கு துளசி நன்மை பயக்கும். ஏனெனில், இது கொழுப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளின் செரிமானத்தை மேம்படுத்தி, அஜீரணத்தால் ஏற்படும் எடை அதிகரிப்பைத் தடுக்கிறது. அதே சமயம், இது ஊட்டச்சத்துக்களை உடைத்து உறிஞ்சுவதற்கு உதவுகிறது.

வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க

உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதற்கு புனித துளசி உதவுகிறது. இது கொழுப்பை மிகவும் திறமையான முறையில் எரிக்கிறது. இது வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிப்பதன் மூலம், உடல் உணவை பதப்படுத்தவும் கலோரிகளை வேகமாக எரிக்கவும் உதவுகிறது. இதன் மூலம் எடையிழப்பை விரைவாக ஆதரிக்கலாம்.

இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த

எடையிழப்புக்கு துளசி உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. ஏனெனில் இது எடை மேலாண்மையும் தொடர்புடையதாகும். ஆய்வில் இந்த மூலிகை இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையான இரத்த சர்க்கரை அளவுகள் பசி உணர்வுகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது. ஏனெனில் அதிகரித்த பசி உணர்வு அதிகம் சாப்பிடுவதற்கும், எடை அதிகரிப்புக்கும் பங்களிக்கலாம்.

பசியை கட்டுப்படுத்த

பசியை அடக்குவதன் மூலம் எடையிழப்பை ஊக்குவிக்க துளசியை எடுத்துக் கொள்ளலாம். இது பசியை அதிகரிக்கும் ஹார்மோனான கிரெலினை ஒழுங்குபடுத்துவதன் மூலம் எடையிழப்பை ஆதரிக்கலாம். இவ்வாறு பசியை அடக்குவதன் மூலம், அதிகம் சாப்பிடுவதைத் தவிர்ப்பதுடன், உணவுப் பசியைக் கட்டுப்படுத்துவதை எளிதாக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Seeds For Weight Loss: என்ன செய்தாலும் எடை குறையவில்லையா? ஃபிட் ஆக இந்த 10 விதைகளை சாப்பிடுங்க!

எடையிழப்புக்கு துளசி சாப்பிடும் முறை

ஆரோக்கியமான வாழ்க்கை முறையில் துளசியை உட்கொள்வது எடை இழப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

துளசி டீ

முதலில் 1 முதல் 2 கப் தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும். இதில் 8 முதல் 10 புதிய துளசி இலைகள் அல்லது 1 டீஸ்பூன் உலர்ந்த புனித துளசி இலைகளைச் சேர்க்கலாம். இதை சுமார் 10 நிமிடங்கள் ஊறவைத்து பிறகு வடிகட்டலாம். இந்த தேநீரை காலையில் வெறும் வயிற்றில் அல்லது உணவுக்கு முன் எடுத்துக் கொள்வது பசியைக் கட்டுப்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

துளசி மற்றும் தேன்

இந்த பானம் தயார் செய்ய, முதலில் 1 கப் தண்ணீரை கொதிக்க வைத்து, குறைந்தது 8 புதிய புனித துளசி இலைகளைச் சேர்க்க வேண்டும். இதை கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் ஊறவைத்து பிறகு அதை வடிகட்டி விடலாம். இந்த தேநீர் சூடாக இருக்கும் போது ஒரு டீஸ்பூன் தேன் சேர்க்க வேண்டும். பிறகு இந்த கலவையை ஒரு நாளைக்கு ஒரு முறை, காலையில் அல்லது படுக்கைக்கு முன் குடிக்கலாம். இதில் தேன் சேர்ப்பது பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

துளசி மற்றும் எலுமிச்சை நீர்

முதலில் ஒரு கப் அளவிலான தண்ணீரை கொதிக்க வைத்து, 5 முதல் 7 புதிய புனித துளசி இலைகளைச் சேர்க்க வேண்டும். இதைக் கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் ஊற வைக்கலாம். இந்த தண்ணீரில் பாதி எலுமிச்சையை பிழிந்து கொள்ள வேண்டும். சிறந்த நன்மைகளைப் பெற காலையில் இந்த தண்ணீரைக் குடிக்க வேண்டும். துளசியை எலுமிச்சையுடன் சேர்த்து எடுத்துக் கொள்வது உடல் எடையிழப்புக்கு உதவுகிறது. ஏனெனில், எலுமிச்சை செரிமானத்தை மேம்படுத்துவதற்கும், வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.

இது போன்ற பல்வேறு ஆரோக்கியமான வழிகளில் துளசியை எடுத்துக் கொள்வது உடல் எடையிழப்புக்கு ஒரு சிறந்த மற்றும் பயனுள்ள தேர்வாக அமைகிறது.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil FacebookOnlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: Basil Seeds For Weight Loss: உடல் எடை சீக்கிரம் குறையணுமா? துளசி விதையை இப்படி பயன்படுத்துங்க

Image Source: Freepik

Read Next

எடை அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்களைக் கண்டறியவும்!

Disclaimer