தொப்பையை இருந்த இடம் தெரியாமல் மறையச் செய்யும் சியா விதைகள்! எப்படி சாப்பிடுவது

ஆரோக்கியமற்ற பழக்க வழக்கங்களால் இன்று பலரும் உடல் எடை அதிகமாகி பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கின்றனர். உடல் எடையைக் குறைக்க உடற்பயிற்சியுடன், உணவுமுறைகளைக் கையாள்வது அவசியமாகும். அதன் படி, எடை குறைய சியா விதைகள் பெரிதும் உதவுகிறது. இதில் தொப்பைக் கொழுப்பைக் கரைக்க உதவும் சியா விதைகள் குறித்து காணலாம்.
  • SHARE
  • FOLLOW
தொப்பையை இருந்த இடம் தெரியாமல் மறையச் செய்யும் சியா விதைகள்! எப்படி சாப்பிடுவது

How do chia seeds burn belly fat: இன்றைய காலகட்டத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக பலரும் பல பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். அதில் ஒன்றாக உடல் பருமனும் அடங்கும். இதனால், எடையிழப்புக்கு பலரும் பல முயற்சிகளை மேற்கொள்கின்றனர். எனினும், இந்த எடையிழப்பு பயிற்சி மிகவும் கடினமானதாகும். உடல் எடை குறைப்பு முயற்சியில் ஈடுபடுபவர்கள் குறிப்பாக தங்கள் உணவைக் கண்காணிப்பது அவசியமாகும். இதனுடன், சீரான தூக்கமுறை, மன அழுத்தத்தை நிர்வகித்தல் போன்றவற்றின் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம்.

இந்நிலையில் உடல் எடையைக் குறைக்க சியா விதைகள் பெரிதும் உதவுகிறது. குறிப்பாக, தொப்பைக் கொழுப்பைக் குறைக்கவும், உடல்நிலையை மேம்படுத்த விரும்புபவர்களுக்கும் சியா விதைகள் மிகுந்த நன்மை பயக்கும். உண்மையில் வயிற்றில் உள்ள கொழுப்பைக் குறைப்பதில் சியா விதைகள் தனித்துச் செயல்பட முடியாது. எனினும், இவை முக்கியமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் பண்புகளை எடுத்துச் செல்ல உதவுகிறது. சியா விதைகளை எடுத்துக் கொள்வதுடன் சீரான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சியுடன் உடல் எடையிழப்பு முயற்சிகளைக் கையாளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Weight Loss: உடல் எடையை குறைக்க சியா விதையை எப்போது, எப்படி சாப்பிடணும் தெரியுமா?

சியா விதைகளின் ஊட்டச்சத்துக்கள்

சியா விதைகள் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவையாகும். இவை அனைத்து வகையான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களைக் கொண்டுள்ளது. இந்த பண்புகள் உடல் எடை மேலாண்மைக்கு உதவுகிறது. மேலும், இதில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து இரண்டுமே நிறைந்துள்ளது. இந்த நார்ச்சத்துக்கள் முழுமை உணர்வுகளை அளிப்பதுடன் செரிமானத்தை அதிகரிக்கிறது. இதன் மூலம் அதிகப்படியா உணவு உட்கொள்ளலைத் தவிர்க்கலாம். இதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம்.

இதில் உள்ள நல்ல அளவிலான புரதங்கள், ஆரோக்கியமான தசைகளைப் பாதுகாக்க உதவுகிறது. சியா விதைகள் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களின் வளமான தாவர அடிப்படையிலான ஆதாரங்களில் ஒன்றாகும். இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும், இதில் நிறைந்துள்ள கால்சியம், இரும்பு மக்னீசியம் போன்ற எலும்பு ஆரோக்கியம் மற்றும் வளர்சிதை மாற்ற செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.

தொப்பைக் கொழுப்பைக் குறைக்க சியா விதைகள் எவ்வாறு உதவுகிறது?

  • எடை இழப்புக்கு சியா விதைகள் உதவுவதற்கான முதன்மையான காரணங்களில் ஒன்றாக அமைவது, அதன் அதிகளவிலான நார்ச்சத்துக்கள் ஆகும். அதன் படி, 2 தேக்கரண்டி அளவிலான சியா விதைகளில் சுமார் 10 கிராம் நார்ச்சத்து உள்ளது. இவை நீண்ட நேரம் நம்மை முழுமையாக வைத்திருக்கவும், மனநிறைவை அதிகரிக்கவும் உதவுகிறது. இதன் மூலம் ஒட்டுமொத்த கலோரி உட்கொள்ளலைக் குறைக்கலாம்.
  • மேலும், சியா விதைகளில் நிறைந்திருக்கும் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் தண்ணீரை உறிஞ்சி ஜெல் போன்ற தன்மையை உருவாக்குகிறது. இவை செரிமானத்தை மெதுவாக்குகிறது. கூடுதலாக, தேவையற்ற சிற்றுண்டி அல்லது அதிகப்படியான உணவைத் தவிர்க்க உதவுகிறது.
  • சியா விதைகள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இதன் மூலம் தொப்பைக் கொழுப்பை எளிதில் குறைக்கலாம். ஏனெனில், இதன் நார்ச்சத்து வழக்கமான குடல் இயக்கத்தை ஊக்குவிக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இந்த ஆரோக்கியமான செரிமானம் உடலை செயலாக்க வைத்து, கழிவுகளை திறம்பட அகற்ற உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Chia Seeds For Weight Loss: இந்த ஒரு பானத்தை குடியுங்க வயிற்றில் உள்ள கொழுப்பை வழிச்சு எடுத்திடும்!

  • சியா விதைகள் புரதத்தின் சிறந்த மூலமாக விளங்குகிறது. எனவே இது உடல் எடையைக் குறைக்க விரும்புவோர்க்கு சிறந்த தேர்வாக அமைகிறது. இதன் அதிகளவிலான புரதச்சத்து நிறைந்த உணவுகள் முழுமை உணர்வை அளித்து, பசியைக் கட்டுப்படுத்தி, ஒட்டுமொத்த கலோரி உட்கொள்ளலைக் குறைக்க உதவுகிறது. இவ்வாறு இவை எடை இழப்புக்கு உதவுவதுடன், தசை பராமரிப்பையும் ஆதரிக்கிறது.
  • பொதுவாக, நாள்பட்ட வீக்கம் காரணமாக உடலில் கொழுப்பு சேகரிக்கப்படலாம். குறிப்பாக வயிற்றுப் பகுதியைச் சுற்றி கொழுப்பை அதிகரிக்கிறது. இதற்கு சியா விதைகள் சிறந்த தேர்வாகும். அதன் படி, சியா விதையில் உள்ள ஒமேகா-3 மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை வயிற்றுப் பகுதியில் கொழுப்பு படியும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. கூடுதலாக, இதன் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் எடையிழப்புக்கும், இதய ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.

தொப்பை கொழுப்பைக் குறைக்க சியா விதைகளை எவ்வாறு பயன்படுத்துவது?

  • சியா விதை ஊறவைத்த நீர் எடையிழப்புக்கு ஒரு சிறந்த தேர்வாகும். இது ஒரு எளிய மற்றும் நீரேற்றம் மிக்கதாகும். இதற்கு ஒரு கிளாஸ் நீரில் சியா விதைகளைச் சேர்த்து, 15-20 நிமிடங்கள் வைத்து, உணவுக்கு முன் எடுத்துக் கொள்ளலாம்.
  • சியா விதைகளை ஒரே இரவில் தண்ணீர் அல்லது பாலில் ஊறவைத்து, சியா புட்டிங் தயார் செய்யலாம். இது ஒரு திருப்திகரமான மற்றும் சத்தான காலை உணவாக அமைகிறது.
  • சியா விதைகளை ஸ்மூத்திகளில் கலந்து அருந்துவது உடலை முழுமையாக வைத்துக் கொள்ளவும், பசியைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
  • சியா விதைகளை ஓரிரவு முழுவதும் தண்ணீர் அல்லது பாலில் ஊறவைப்பது, ஒரு திருப்திகரமான மற்றும் சத்தான காலை உணவாக அமைகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Chia Seeds for Weight Loss: உடல் ஒல்லியாக மாற சியா விதைகளை இப்படி யூஸ் பண்ணுங்க!

Image Source: Freepik

 

Read Next

Weight Loss Drinks: சட்டுன்னு உடல் எடையை குறைக்க உதவும் 5 ஜூஸ்கள் இங்கே!

Disclaimer