Is bay leaf water good for weight loss: இன்றைய காலகட்டத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக பலரும் பலவிதமான பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் உடல் எடை அதிகரிப்பு பெரும்பாலானோர் சந்திக்கும் பொதுவான பிரச்சனையாகும். நீரிழிவு, இதய நோய் போன்ற நாள்பட்ட நோய்கள் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் உடல் பருமனே காரணமாகும். இந்த பிரச்சனைகளிலிருந்து விடுபட உடல் எடையைக் குறைப்பது அவசியமாகும். அவ்வாறு எடையைக் குறைக்கவும், வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் சில ஆரோக்கியமான பானங்களை எடுத்துக் கொள்ளலாம்.
நாம் பலரும் மருத்துவ குணங்களைக் கொண்டதாகக் கருதப்படும் பல்வேறு மசாலா மற்றும் மூலிகைகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். இதில் ஒன்றாகவே பிரியாணி இலை அமைகிறது. இவை எடையிழப்பு முயற்சிகளில் ஒரு மதிப்புமிக்க தேர்வாக அமைகிறது. இது சுவையுடன் கூடிய பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது. எடையிழப்பு என்று சொல்லும் போது, பலர் சாதுவான, சுவையற்ற உணவுகளே பலன்களைத் தரும் என்று மக்கள் கருதுகின்றனர். ஆனால், உண்மையில் மருத்துவ குணங்கள் நிறைந்த இது போன்ற மூலிகைகளும் உதவுகிறது. இதில் எடையிழப்புக்கு பிரியாணி இலை நீர் தரும் நன்மைகள் மற்றும் அதை எடுத்துக் கொள்ளும் முறை குறித்து காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Turmeric for weight lose : சீக்கிரமா எடையை குறைக்கனுமா? - அப்போ இந்த பானத்தை ட்ரை பண்ணுங்க!
எடை குறைய பிரியாணி இலை தண்ணீர் தரும் நன்மைகள்
செரிமான அமைப்பை மேம்படுத்த
பிரியாணி இலைகளில் நார்ச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இவை செரிமானத்தை மேம்படுத்தவும், சிறந்த குடல் இயக்கத்தை ஆதரிக்கவும் உதவுகிறது. எடையிழப்புக்கு செரிமானம் மிகவும் அவசியமானதாகும். ஏனெனில், இது அதிகளவு ஊட்டச்சத்து உறிஞ்சுதலுக்கு உதவுகிறது. இதன் மூலம் எடை அதிகரிப்பைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் இதில் அதிகளவு கால்சியம் நிறைந்திருப்பதால் பிரியாணி இலை உடலில் கொழுப்பை எரிக்கவும் உதவுகிறது.
நார்ச்சத்துக்கள் நிறைந்த
பிரியாணி இலைகள் நார்ச்சத்துக்கான சிறந்த மூலமாகக் கருதப்படுகிறது. இது வயிறு நிரம்பிய உணர்வை அளிக்கிறது. இதை எடுத்துக் கொள்வது குடல் இயக்கங்களை மேம்படுத்துகிறது. இவை அனைத்துமே எடை நிர்வாகத்திற்கு மிகவும் அவசியமாகும். மேலும் பிரியாணி இலைகள் செரிமான ஆரோக்கியம் மற்றும் குடல் இயக்கங்களை ஆதரிப்பதால் வயிற்றை நிரம்ப வைக்கிறது. எனவே இது ஆரோக்கியமற்ற உணவை அதிகமாக சாப்பிடுவதைக் குறைக்கிறது.
வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த
உடல் எடையிழப்பை ஆதரிக்க ஒரு நல்ல வளர்சிதை மாற்றம் மிகவும் அவசியமாகும். இந்த இலைகள் கலோரிகளை வேகமாக எரிக்கவும், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் உதவுவதாகக் கூறப்படுகிறது. ஒரு நல்ல, வேகமான வளர்சிதை மாற்றம் உடலில் அதிக கலோரிகளை எரிக்கவும், விரைவாக உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது.
ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த
பிரியாணி இலைகள் உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், உடல் எடையிழப்பை ஊக்குவிக்கவும் உதவுகிறது. பிரியாணி இலையானது வைட்டமின் சி மற்றும் யூஜெனால் போன்ற ஆக்ஸிஜனேற்றிகளின் வளமான மூலமாகும். இவை உடலில் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடவும் ஆரோக்கியமான எடை இழப்பை ஊக்குவிக்கவும் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Biryani Leaf Benefits: இலை ஒன்று பலன் நூறு… சுகர் முதல் எடை இழப்பு வரை அனைத்தையும் சரி செய்யும் பிரியாணி இலை!
மன அழுத்த ஹார்மோனைக் குறைப்பதற்கு
இந்த இலைகளில் linalool என்ற இரசாயனம் மன அழுத்தத்திற்கான அறிகுறிகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. அதிகளவிலான மன அழுத்தம் உடல் எடை அதிகரிப்புக்கு மறைமுகமான காரணமாக அமைகிறது. இதைக் குறைப்பதன் மூலம் எடையிழப்பை ஆதரிக்கலாம்.
உடல் எடை குறைய பிரியாணி இலை நீர் தயாரிக்கும் முறை
- இந்த நீரைத் தயார் செய்வதற்கு, ஒரு கைப்பிடி பிரியாணி இலைகளை எடுத்து, அதை கொதிக்கும் வெந்நீரில் சேர்க்க வேண்டும்.
- இதை சில வினாடிகள் கிளறி, பிறகு தீயை அணைத்து விடவேண்டும்.
- பின் இந்தக் கலவையை வடிகட்டி, தண்ணீரை அறை வெப்பநிலைக்குக் குளிர்விக்கலாம்.
- அதன் பின், தயார் செய்த பிரியாணி இலை நீரில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: Bay leaf water benefits: பிரியாணி இலை நீரை உங்க டயட்டில் சேர்ப்பதால் என்னாகும் தெரியுமா?
Image Source: Freepik