Papaya Benefits: வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிட்டால் என்ன ஆகும்?

  • SHARE
  • FOLLOW
Papaya Benefits: வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிட்டால் என்ன ஆகும்?

செரிமானத்தை மேம்படுத்தும்

அதிகாலையில் பப்பாளி சாப்பிடுவது உங்கள் செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது. பப்பாளியில் 'பப்பைன்' என்ற என்சைம் உள்ளது. நீங்கள் உண்ணும் உணவில் உள்ள புரதச்சத்தை உடலுக்குக் கிடைக்கச் செய்கிறது. மேலும் உணவை ஜீரணிக்க எளிதாக்குகிறது. பப்பாளியில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலையும் தடுக்கிறது.

எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

பப்பாளியில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. தினமும் காலை உணவாக சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இது பல தொற்றுகள் மற்றும் நோய்களில் இருந்து உங்களைப் பாதுகாக்கிறது.

எடை குறையும்

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் பப்பாளியை காலையில் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். பப்பாளியில் கலோரிகள் குறைவு. இதில் உள்ள பாப்பைன் மற்றும் நார்ச்சத்து உங்கள் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை எரிக்க உதவுகிறது. அதனால் உடல் எடையை எளிதில் குறைக்கலாம்.

இதையும் படிங்க: Papaya Seeds Benefits: இதய ஆரோக்கியத்தில் பப்பாளி விதையின் பயன்கள் என்ன?

தோல் ஆரோக்கியம்

பப்பாளியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இவை உங்கள் சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றும். தினமும் காலையில் பப்பாளி சாப்பிட்டு வந்தால் சருமம் பளபளக்கும்.

வலியிலிருந்து நிவாரணம்

மூட்டுவலி மற்றும் தசை வீக்கம் போன்ற மூட்டுவலி பிரச்னைகளில் இருந்து விடுபட, பப்பாளி பழத்தை அதிகாலையில் சாப்பிட மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். நீரிழிவு மற்றும் இதய நோய் உள்ளிட்ட பிற உடல்நலப் பிரச்னைகளால் ஏற்படும் வீக்கத்தையும் பப்பாளி குறைக்கிறது.

ஆரோக்கியமான இதயத்திற்கு

பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிடுவது உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. பப்பாளியில் 'லைகோபீன்' உள்ளது. இது உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இது இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.

கண் பார்வையை மேம்படுத்தும்

பப்பாளியில் வைட்டமின்-சி, வைட்டமின்-ஈ மற்றும் பீட்டா கரோட்டின் சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை உங்கள் கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும். தினமும் காலையில் பப்பாளி பழத்தை சாப்பிடுவதன் மூலம் வயது தொடர்பான பிரச்னைகள் மற்றும் கண் பிரச்னைகளில் இருந்து நமது ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.

Image Source: Freepik

Read Next

Post Workout Snacks: உடற்பயிற்சிக்குப் பின் இந்த ஸ்னாக்ஸ்களை சாப்பிடுங்க வெயிட் ஏறாது?

Disclaimer

குறிச்சொற்கள்