What is the healthiest thing to eat after a workout: ஒருவர் ஆரோக்கியமாக இருக்க சரியான உணவு மற்றும் உடற்பயிற்சி மிகவும் முக்கியம். நீங்கள் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இல்லாமல், நாள் முழுவதும் உட்கார்ந்திருந்தால், சரியான உணவுகளை சாப்பிட்டாலும் உடல் எடை குறையாது.
உடல் எடையை குறைப்பதிலும், ஆரோக்கியமாக இருப்பதிலும் யோகா மற்றும் உடற்பயிற்சி முக்கிய பங்கு வகிக்கிறது. இயல்பாகவே நாம் வொர்க்அவுட்டிற்கு பிறகு அதிகமாக பசிப்பதை போல உணர்வோம். அப்படி இருக்கும் போது, நீங்கள் தவறான உணவுகளை உட்கொண்டால, உங்களின் கடின உழைப்பை வீணாக்கிவிடும்.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம் : Food Allergies: இந்த மொத்த உணவுகளும் அலர்ஜியை ஏற்படுத்தலாம் தெரியுமா?
வொர்க்அவுட்டிற்குப் பிறகு ஆரோக்கியமான தின்பண்டங்களை உட்கொள்வதன் மூலம், நீங்கள் இழந்த ஆற்றலை பெறுவதுடன், உடல் எடையையும் வெகுவாக குறைக்கலாம். அந்தவகையில், ஒர்க்அவுட்டுக்குப் பிறகு என்ன சாப்பிடலாம் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஆப்பிள் மற்றும் பீனட் பட்டர் (Apple and peanut butter)

ஆப்பிளுடன் பீனட் பட்டர் அல்லது பாதாம் பட்டர் சாப்பிடலாம். இதன் மூலம், உடலுக்கு ஆரோக்கியமான கொழுப்புகள், புரதங்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் ஆகிய மூன்றும் கிடைக்கும். அதுமட்டுமின்றி, உடலுக்கு உடனடி ஆற்றலையும் தரும். எனவே, உங்கள் சோர்வு நீங்கி மீண்டும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.
இந்த பதிவும் உதவலாம் : Eating Disorders: உணவுக் கோளாறு சிக்கலின் வகைகளும், அறிகுறிகளும்!
பன்னீர் சாலட்
பனீர் புரதத்தின் நல்ல மூலமாகும். மேலும், வயிற்றை நிறைவாக வைப்பதுடன், உடலுக்குத் தேவையான சத்துக்களை வழங்குகிறது. மேலும், இது எடையைக் குறைக்கவும் உதவுகிறது. வொர்க்அவுட்டிற்கு பிறகு வெங்காயம், தக்காளி, வெள்ளரிக்காய் மற்றும் சில காய்கறிகளுடன் சீஸ் சாலட் செய்து சாப்பிடலாம். இது ஆரோக்கியமாகவும் சுவையாகவும் இருக்கும்.
ப்ரோட்டீன் ஷேக் (Protein shakes)

ப்ரோட்டீன் ஷேக் ஜிம் செல்லும் அனைவரும் இயல்பாகவே உட்கொள்ளும் சிற்றுண்டியை ஒன்று. அந்தவகையில், ப்ரோட்டீன் ஷேக் உடலுக்கு தேவையான புரதத்தை வழங்குகிறது மற்றும் உடற்பயிற்சியின் பின்னர் காயமடைந்த தசைகளை சரிசெய்ய உதவுகிறது. நீங்கள் பால் அல்லது தண்ணீருடன் சத்து எடுக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Food Allergy: குழந்தைக்கு உணவில் ஒவ்வாமை எதனால் ஏற்படுகிறது தெரியுமா?
கொண்டைக்கடலை சாலட்
வேகவைத்த கொண்டைக்கடலை சாலட் உடற்பயிற்சிக்குப் பிறகு ஆரோக்கியமான சிற்றுண்டி விருப்பமாகும். இதில் புரதச்சத்து நிறைந்துள்ளது, பச்சைக் காய்கறிகளுடன் கலந்து சாலட் செய்தால், உடலுக்கு நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து இரண்டும் கிடைக்கும்.
முட்டை (Egg)

முட்டை புரதத்தின் சிறந்த மூலமாகும். அந்தவகையில், உடற்பயிற்சிக்கு பின் முட்டை சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாப்பதுடன் உங்கள் பசியையும் கட்டுப்படுத்தும். இதனால் எளிமையாக உடல் எடை அதிகரிப்பை கட்டுப்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Healthy Liver: கல்லீரல் நன்றாக இயங்க என்ன சாப்பிட வேண்டும்?
சக்கரவள்ளி கிழங்கு (Sweet potatoes)
சக்கரவள்ளி கிழங்கு நார்சத்தின் சிறந்த மூலமாகும். மேலும், இதில் வைட்டமின் ஏ, பி, இரும்புச்சத்து பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. இவை உடலில் சதை மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. வொர்க்அவுட்டிற்குப் பிறகு இந்த ஸ்நாக்ஸ்களை சாப்பிடுவது உடல் எடையைக் குறைக்கவும், ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவும்.
Pic Courtesy: Freepik