Doctor Verified

Eating Disorders: உணவுக் கோளாறு சிக்கலின் வகைகளும், அறிகுறிகளும்!

  • SHARE
  • FOLLOW
Eating Disorders: உணவுக் கோளாறு சிக்கலின் வகைகளும், அறிகுறிகளும்!

உணவுக் கோளாறுகளின் சிக்கல்கள் குறித்தும் தீர்வுகள் குறித்தும் Aster RV மருத்துவமனையின் தலைமை ஊட்டச்சத்து நிபுணர், டாக்டர் சௌமிதா பிஸ்வாஸ் அளித்த தகவலை விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க: நல்ல உறக்கம் வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கள்

உணவுப்பழக்கக் கோளாறு என்பது இன்று சகஜமான ஒரு விஷயமாகிவிட்டது. ஆபத்தான உணவு பழக்கங்கள் என்பது உங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தைப் பெறும் திறனில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தலாம். இது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கும். புலிமியா, அனோரெக்ஸியா, அதிகப்படியான உணவு மற்றும் உணவு கட்டுப்பாடு ஆகியவை மிகவும் பொதுவான உணவுக் கோளாறுகளின் வகைகள் ஆகும்.

புலிமியா

புலிமியா என்பது அடிக்கடி அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் கோளாறு ஆகும். அதோடு குறிப்பிட்ட காலத்திற்கு கடுமையாக உணவை கட்டுப்படுத்துவதாலும் புலிமியா ஏற்பட வாய்ப்புள்ளது. எந்தவித கட்டுப்பாடும் இன்றி அதிக அளவில் உணவை சாப்பிடுபவர்களுக்கு இந்த பிரச்சனை பொதுவாக ஏற்படுகிறது. இந்த பிரச்சனை இருப்பவர்கள் அடிக்கடி பசியுடன் இருப்பதை போல் உணருகிறார்கள். தங்கள் பசியை போக்க அடிக்கடி சாப்பிடுவார்கள். இப்படி எடுத்துக் கொள்ளும் போது அதிக கலோரிகள் உட்செல்வதால் வாந்தியெடுத்தல், மலச்சிக்கல் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

அனோரெக்ஸியா

அனோரெக்ஸியா அல்லது அனோரெக்ஸியா நெர்வோசா என்பது உணவுக் கோளாறின் பொதுவான நடவடிக்கையாகும். ஆரோக்கியமற்ற முறையில் திடீர் எடை இழப்பு, சிதைந்த நிலையில் உடல் உருவம், திடீர் எடை அதிகரிப்பு போன்ற தீவிர விளைவு மற்றும் எடை சார்ந்த பிரச்சனைகள் அடங்கும். உடல் எடையையும் வடிவத்தையும் கட்டுப்படுத்த பலர் தீவிர முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இது ஆரோக்கியம் மற்றும் அன்றாட வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அடிக்கடி கலோரிகளை குறைக்க முன்னெடுக்கும் விளைவு காரணமாக இந்த சிக்கல் ஏற்படலாம். அதிக மலமிளக்கி உணவுகளை உட்கொள்வது, வாந்தி எடுப்பது போன்ற உடல் எடையைக் குறைப்பதற்கான பிற முறைகளும் இதில் தாக்கத்தை ஏற்படுத்தும். இவை கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

அதிக உணவை உண்பது

பசியில்லாத போது அதிகமாக உணவை உண்பது அல்லது எந்த ஒரு கவனமும் இல்லாமல் தொடர்ந்து சாப்பிடுவதால் இந்த பிரச்சனை ஏற்படும். மது அருந்திய பிறகு, மக்கள் பெரும்பாலும் குற்ற உணர்வு, வெறுப்பு, அவமானம் அல்லது எடை அதிகரிக்கும் பயம் ஆகியவற்றை உணர்கிறார்கள். இந்த உணர்வை தவிர்க்க அவர்கள் சாப்பாட்டில் கைவைக்கிறார்கள். குறிப்பிட்ட காலத்திற்கு சாப்பிடுவதை கடுமையாக கட்டுப்படுத்த முயற்சி செய்வார்கள். சிலர் கட்டுப்பாடின்றி உணவை எடுக்கிறார்கள், பசியில்லாமல் சாப்பிடுவார்கள் இதுபோன்ற காரணத்தாலும் இந்த பிரச்சனை ஏற்படும்.

சாப்பிடுவதைத் தவிர்த்தல்/கட்டுப்படுத்துதல்

முழுமையாக தவிர்ப்பது மற்றும் கட்டுப்படுத்துவது போன்ற முறையில் உணவை உட்கொள்ளும் போது இந்த கோளாறு ஏற்படுகிறது. உண்ணும் முறை பெரும்பாலும் குறைந்தபட்ச தினசரி ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்வதில்லை. இது அன்றாட செயல்பாட்டில் சிக்கல்களுக்கு வழிவகுக்கும். இந்த கோளாறு உள்ளவர்களுக்கு எடை அதிகரிப்பு அல்லது உடல் அளவு பற்றி பயம் இருக்காது. அதேபோல் இந்த பிரச்சனை உள்ளவர்கள் குறிப்பிட்ட சுவை, நிறம், வாசனை போன்ற உணவுகளை தவிர்க்க முற்படலாம். இந்த பிரச்சனை உள்ளவர்களுக்கு மூச்சுத் திணறல், வாந்தி எடுத்தல் உள்ளிட்ட வயிறு பிரச்சனைகளை ஏற்படலாம். குழந்தைகளுக்கும் இளம் தலைமுறைகளுக்கும் இந்த பிரச்சனை ஏற்படும்.

பொதுவான அறிகுறிகள்:

● சாப்பாடு அல்லது தின்பண்டங்களைத் தவிர்ப்பது, சாப்பிடாமல் இருப்பதற்கு சாக்குப்போக்கு சொல்வது.

● மிகக் குறைந்த அளவிலான உணவைத் தாங்களே திட்டமிட்டு வைத்திருப்பது.

● ஆரோக்கியமான உணவில் மட்டும் அதிக கவனம் செலுத்துதல்.

● வழக்கமான சமூக நடவடிக்கைகளில் இருந்து விலகுதல்.

● உடல்நலக்குறைவு அல்லது அதிக எடை குறித்த புகார்கள், உடல் எடை குறைப்பு குறித்து அடிக்கடி பேசுவது.

● உடல் உருவங்களில் அக்கறை. குறைகள் என்று கருதப்படுவதை கண்ணாடியில் அடிக்கடி சோதிப்பது.

● மீண்டும் மீண்டும் அதிக அளவு உணவுகளை உண்பது.

● எடை இழப்புக்கு உணவுப் பொருட்கள், மலமிளக்கிகள் அல்லது மூலிகைப் பொருட்களைப் பயன்படுத்துதல்.

சராசரி மனிதனை விட அதிகமாக உடற்பயிற்சி செய்தல். நோய்க்கான ஓய்வு நாட்கள் எடுக்காதது, விடுமுறை எடுக்காமல் செயல்பாட்டில் இருப்பது, சமூக நிகழ்வுகள் அல்லது பிற வாழ்க்கை நிகழ்வுகளில் கலந்து கொள்ள மறுப்பது ஆகிய உணர்வுகள் இதில் அடங்கும்.

உணவுக் கோளாறு உள்ளவர்களுக்கான தீர்வுகள்:

குடும்ப உறுப்பினர் அல்லது நண்பர் ஒருவர் உணவு கோளாறுக்கான அறிகுறிகளைக் கண்டறியும் போது, அவர்கள் நலனில் அக்கறை உள்ள நபரிடம் அடிக்கடி பேசச் சொல்லுங்கள். உண்ணும் கோளாறு உருவாகாமல் தடுப்பது கடினம், ஆனால் இரக்கத்துடன் அணுகுவது சிகிச்சை பெற நபரை ஊக்குவிக்கும்.

இதையும் படிங்க: Kidney Infections: இருப்பதை எப்படி தெரிந்துக்கொள்வது

ஆரோக்கியமான உடல் உருவத்தை ஊக்குவித்தல் மற்றும் வலுப்படுத்துதல். மற்றவர்கள் முன்னிலையில் உடல் வடிவத்தை விமர்சிக்காமல் இருப்பது நல்லது.

சமச்சீர் உணவு குறித்த ஆலோசனைகள் இதைத் தவிர்க்க உதவும். ஊட்டச்சத்து நிபுணர்களிடம் உதவியைப் பெறுவது அவர்களின் உடல் எடையை பராமரிக்கவும் உணவைத் திட்டமிட உதவும்.

image source: freepik

Read Next

Chronic Pain: தோள்பட்டை விறைப்பை நீக்க இந்த 3 ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளை செய்தால் போதும்!

Disclaimer

குறிச்சொற்கள்