$
Food Allergies: அலர்ஜி ஏற்படுவதற்கு பல காரணங்கள் உண்டு. நீண்ட நேரம் உணவு எதுவும் எடுக்காமல் ஒரேயடியாக உணவு உட்கொண்டாலும் அலர்ஜி ஏற்பட வாய்ப்பு உள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர். உணவு ஒவ்வாமை உள்ள ஒருவர் சில உணவுகளை உண்ணும் போது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். உடலில் உள்ள பல்வேறு அமைப்புகளையும் பாதிக்கத் தொடங்குகிறது. உணவு ஒவ்வாமை அறிகுறிகள் என்பது நபருக்கு நபர் மாறுபடும்.
ஃபுட் அலர்ஜி ஏற்படுவதன் காரணம் என்ன?
ஃபுட் அலர்ஜி என்பது மிக பொதுவான பிரச்சனை ஆகும். இந்த உணவு எனக்கு சேராது என ஒருசிலர் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். ஃபுட் பாய்சன் என்பது வேறு, ஃபுட் அலர்ஜி என்பது வேறு. மோசமான, சுகாதாரமற்ற மற்றும் கெட்டுப்போன உணவை சாப்பிடுவதால் ஃபுட் பாய்சன் ஏற்படும். இதுபோன்ற உணவை யார் சாப்பிட்டாலும் அவர்களுக்கு ஃபுட் பாய்சன் ஏற்படும். ஃபுட் அலர்ஜி என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகை உணவால் ஏற்படும்.
இதையும் படிங்க: Common Monsoon Diseases: பருவமழையில் பரவும் நோய்த் தொற்றுகள்- முன்னெச்சரிக்கை அவசியம்
ஃபுட் அலர்ஜியை குறைப்பது எப்படி?

உங்கள் செரிமானத்திற்கு எந்தெந்த உணவுகள் ஒவ்வாமை ஏற்படுத்துகின்றதோ அதை அறிந்துக் கொள்வது நல்லது. அலர்ஜி ஏற்படுத்தும் உணவுகளை தள்ளி வைத்து சில நாட்களுக்கு பிறகு லேசாக எடுத்து சாப்பிட்டுப்பாருங்கள். ஒவ்வாமை ஏற்படும் உணவுகளை ஒதுக்கும் போது நீங்கள் எடுத்துக் கொள்ளும் பிற உணவின் மூலம் உங்களுக்கு போதிய ஊட்டச்சத்துகள் கிடைக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். காலிஃப்ளவர், ப்ரோக்கோலி, வெள்ளரிக்காய், மஷ்ரூம், முள்ளங்கி, தேங்காய்ப்பாஸ் போன்ற உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளலாம். தினமும் எலுமிச்சை எடுத்துக் கொள்ளலாம். எலுமிச்சை உடலிலுள்ள சத்துக்களையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் சீர்படுத்தும்.
உணவு ஒவ்வாமை அறிகுறிகள்
உணவு ஒவ்வாமை உள்ளவர்களுக்கு பொதுவாக படை நோய், அரிப்பு மற்றும் வீக்கம் போன்ற தோல் எதிர்வினைகளை உருவாக்கும். குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை செரிமானக் கோளாறுகளையும் உண்டாக்கும். வாச அறிகுறிகளில் தும்மல், மார்பு நெரிசல் மற்றும் மூச்சுத்திணறல் ஆகியவை அடங்கும். உணவு ஒவ்வாமை குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற கடுமையான அறிகுறிகளையும் ஏற்படுத்தும்.
பால்
குழந்தைகளுக்கான பொதுவான ஒவ்வாமைகளில் பாலும் ஒன்று. பாலில் உள்ள புரதங்களுக்கு நோயெதிர்ப்பு அமைப்பு அதிகமாக செயல்படும்போது ஒவ்வாமை ஏற்படுகிறது. கேசீன் மற்றும் மோர் ஆகியவை பால் ஒவ்வாமைக்கான பொதுவான தூண்டுதல்களாகும். பால் ஒவ்வாமை அறிகுறிகள் லேசானது முதல் கடுமையானது வரை ஏற்படும். செரிமானப் பிரச்சனைகள், தோல் வெடிப்பு, சுவாச பிரச்சனைகள் என பல விளைவுகளை சந்திக்க நேரும்.
முட்டை

குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் ஒவ்வாமைக்கு முட்டை முக்கிய காரணமாகும். நோயெதிர்ப்பு அமைப்பு முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் மஞ்சள் கருவில் உள்ள புரதங்களுக்கு வினைபுரிகிறது. முட்டை அலர்ஜியார் சொறி, செரிமானம் மற்றும் சுவாச பிரச்சனைகளை சந்திக்கின்றனர். 5 ஆண்டுகள் வரை இந்த ஒவ்வாமை இருந்து மறையும்.
வேர்க்கடலை
வேர்க்கடலை ஒவ்வாமை மிகவும் கடுமையானதாக இருக்கும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் வேர்க்கடலை ஒவ்வாமை வாழ்நாள் முழுவதும் நீடிக்கும். வேர்க்கடலையில் உள்ள புரதங்கள் கடுமையான ஒவ்வாமையை ஏற்படுத்தும். உங்களுக்கு வேர்க்கடலை ஒவ்வாமை இருந்தால், தோல் எரிச்சல், இரைப்பை குடல் பிரச்சனைகள் மற்றும் சுவாச பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
நட்ஸ்
பாதாம், அக்ரூட் பருப்புகள், முந்திரி போன்ற நட்ஸ் வகைகளும் ஒவ்வாமையை ஏற்படுத்தும். வேர்க்கடலை ஒவ்வாமைகளைப் போலவே நட்ஸ் ஒவ்வாமைகளும் ஏற்படும். ஒருவருக்கு ஒரு வகை உணவு மீது ஒவ்வாமை ஏற்படும் பட்சத்தில் உடனே நட்ஸ் வகைகளையும் நிறுத்துவது நல்லது.
சோயா
சோயாவால் ஏற்படும் ஒவ்வாமை பொதுவான ஒன்று. குறிப்பாக சிறு குழந்தைகளுக்கு. சோயா பொருட்களில் உள்ள புரதங்களானது நோயெதிர்ப்பு அமைப்புடன் இணைந்து தவறாக செயல்படும் போது இந்த ஒவ்வாமை ஏற்படுகிறது. சொறி, செரிமான பிரச்சனைகள், சுவாச பிரச்சனைகள் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். சோயா ஒவ்வாமை உள்ளவர்கள் சோயாபீன் எண்ணெய் போன்ற உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்கிறார்கள்.
இதையும் படிங்க: மலச்சிக்கல் இத்தனை பாதிப்பை ஏற்படுத்துமா?
மீன்

மீன் பலருக்கு ஒவ்வாமை உணவாக இருக்கும். இந்த ஒவ்வாமை ஏற்பட்டால் இது வாழ்நாள் முழுவதும் நீடிக்கும். இந்த வகை ஒவ்வாமை ஏற்பட்டால் லேசாக மீன் எடுத்துக் கொண்டாலும் தோல் வெடிப்பு முதல் உயிருக்கு ஆபத்தான விளைவுகள் வரைை ஏற்படுத்தும்.
image source: freepik