Dust Allergy Remedies: தூசி ஒவ்வாமையால் அவதியா? இந்த வீட்டு வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க

  • SHARE
  • FOLLOW
Dust Allergy Remedies: தூசி ஒவ்வாமையால் அவதியா? இந்த வீட்டு வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க


How To Get Rid Of Dust Allergy And Sneezing: மாறிவரும் பருவ காலத்தில் பலரும் பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். அதில் ஒன்றாகவே அலர்ஜி பிரச்சனையும் அமைகிறது. குறிப்பாக தவறான உணவுப் பழக்கவழக்கங்களால் ஒவ்வாமை பிரச்சனைகள் ஏற்படலாம். மேலும் இந்த ஒவ்வாமையானது வாந்தி, வயிற்றுப்போக்கு, சளி போன்ற இன்னும் பிற நோய்களுக்கு வழிவகுக்கும். இன்னும் சிலருக்கு தூசியால் அலர்ஜி ஏற்பட அதிக வாய்ப்புண்டு. தூசி மற்றும் மண்ணில் உள்ள பாக்டீரியாக்கள் ஒரு நபருக்குள் நுழையும் போது, அது மீண்டும் மீண்டும் தும்மலை ஏற்படுத்தலாம்.

இது தவிர அதிக இருமல் காரணமாக சுவாசிப்பதில் சிரமம் உண்டாகலாம். இந்தப் பிரச்சனை வீட்டின் உள்ளே மற்றும் வெளியே ஏற்படலாம். இது போன்ற பிரச்சனை இருப்பின், இதன் அறிகுறிகள் தீவிரமாக தொந்தரவு செய்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இதன் அறிகுறிகள் லேசானதாக இருப்பின், சில வீட்டு வைத்தியங்களைக் கையாள்வதன் மூலம் இந்தப் பிரச்சனையைக் குறைக்க முடியும். இதில் டஸ்ட் அலர்ஜி ஏற்பட்டால் என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்து காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Body Acne Remedies: உடலில் தோன்றும் கொப்புளங்களை சரி செய்ய இந்த 5 பொருள்கள் போதும்!

தூசி மற்றும் மண் ஒவ்வாமைக்கான அறிகுறிகள்

  • அடிக்கடி தும்மல் ஏற்படுதல்
  • சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுவது
  • சுவாசிக்கும்போது மூச்சுத்திணறல் சத்தம்
  • சருமத்தில் அரிப்பு உணர்வு
  • இருமல் பிரச்சனை

தூசி ஒவ்வாமைக்கான வீட்டு வைத்தியங்கள்

தூசி ஒவ்வாமையிலிருந்து விடுபட உதவும் சில வீட்டு வைத்தியங்களைக் காணலாம்.

துணிகளில் தூசி படிந்த பகுதியை வெந்நீரில் கழுவுதல்

தூசி ஒவ்வாமையைத் தவிர்க்க, தூசி நிறைந்த இடங்களில் வைக்கப்பட்டுள்ள துணிகள் மற்றும் படுக்கை விரிப்புகளை வெந்நீரில் கழுவ வேண்டும். இதன் மூலம் துணிகள் மற்றும் பெட்ஷீட்களில் இருக்கும் ஒவ்வாமைகளை நீக்கலாம். இந்த துணிகளைத் துவைத்த பிறகு வெயிலில் காய வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் ஒவ்வாமை (நோயை உண்டாக்கும் பாக்டீரியாவை) கொல்ல முடியும்.

தலையணை மற்றும் படுக்கை விரிப்புகளின் உறைகளை மாற்றுதல்

நாம் அன்றாடம் பயன்படுத்தும் தலையணைகள் மற்றும் படுக்கை விரிப்புகளில் ஒவ்வாமையை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் இருக்கலாம். இந்த அலர்ஜியைக் குறைக்க தலையணை உறைகள் மற்றும் பெட்ஷீட்களை அடிக்கடி மாற்ற வேண்டும். அலர்ஜியினால் ஏற்படும் அறிகுறிகளைக் குறைக்க, வாரத்தில் இரண்டு முறையாவது தலையணை உறைகள் மற்றும் பெட்ஷீட்களை மாற்ற வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Cold Cough Remedy: சளி, இருமல், ஆஸ்துமா அனைத்துக்கும் ஒரே தீர்வு! இந்த 4 பொருள்கள் போதும்

தூசி நிறைந்த பகுதிகளை மூடி வைப்பது

வீட்டில் சில பகுதிகளில் தூசி அதிகளவு காணப்படலாம். இந்த இடங்களிலிருந்து தூசியை அடிக்கடி சுத்தம் செய்வதை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். பெரும்பாலும் கடையில் தூய்மையில் முழு கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், இந்த இடங்களில் அதிக தூசி மற்றும் மண் நிறைந்திருக்கும். எனவே தூசி வரும் இடங்களை மூடி வைப்பதை உறுதி செய்ய வேண்டும். வீட்டிற்கு வெளியே மண் அல்லது தூசி போன்றவை அதிகம் இருப்பின், வெளியில் ஆன்டி பயாடிக் நிறைந்த தண்ணீரை தெளிக்க வேண்டும். இவ்வாறு செய்யாவிடில் தூசி படிவதற்கு அனுமதிக்கலாம்.

தேன் உட்கொள்வது

தூசி அலர்ஜியைக் கொண்டிருப்பவர்கள் தேனை உட்கொள்ளலாம். ஏனெனில், இதில் அலர்ஜி நீக்கும் பண்புகள் நிறைந்துள்ளது. தேனை வெதுவெதுப்பான நீரில் எடுத்துக் கொள்ளலாம் அல்லது ஒரு ஸ்பூன் தேனை நேரடியாக உட்கொள்ளலாம். எனினும், நீரிழிவு நோயாளிகள் தேன் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது இரத்த சர்க்கரையை அதிகரிக்கலாம்.

ஆப்பிள் சைடர் வினிகர் பயன்படுத்துவது

தூசி ஒவ்வாமை பிரச்சனையைக் கொண்டிருப்பவர்கள் ஆப்பிள் சைடர் வினிகரைப் பயன்படுத்தலாம். ஆப்பிள் சைடர் வினிகரில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்து காணப்படுகிறது. இந்த பண்புகள் ஒவ்வாமையைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த சூழ்நிலையில், ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் சுமார் ஒரு ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரைக் கலந்து காலை நேரத்தில் அருந்தலாம். இதன் மூலம் தூசி ஒவ்வாமையைத் தடுக்கலாம்.

தூசி ஒவ்வாமையைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்

வீடுகளில் மற்ற சில நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் தூசி ஒவ்வாமையைத் தடுக்க முடியும்.

  • பாலுடன் மஞ்சள் கலந்து பயன்படுத்துவதன் மூலம் தூசி ஒவ்வாமையைத் தடுக்கலாம்.
  • தரைவிரிப்புகள் போன்றவற்றைத் தவறாமல் சுத்தம் செய்ய வேண்டும்.
  • வீட்டு ஏசியைப் பயன்படுத்தும் முன்னதாக அதை சுத்தம் செய்ய வேண்டும்.
  • ஒவ்வாமையைத் தடுக்க நீராவியை உள்ளிழுக்க வேண்டும்.

ஒவ்வாமை பிரச்சனை கொண்டிருப்பவர்கள், இது போன்ற பல்வேறு அறிகுறிகளை அனுபவிக்கும் சூழல் ஏற்படலாம். எனவே தூசி நிறைந்த இடத்திற்குச் செல்லும்போது இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் இருப்பின், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Ear Cleaning Tips: உங்க காது சுத்தமா, ஆரோக்கியமாக இருக்கணுமா! இத செய்யுங்க

Image Source: Freepik

Read Next

குளிக்கும் நீரில் இதை கலந்து குளித்தால் போதும்.. மனமும், உடலும் ரிலாக்ஸாகும்!

Disclaimer

குறிச்சொற்கள்