குளிர்காலத்தில் பறக்கும் தூசியால் டஸ்ட் அலர்ஜி அதிகரிக்கும். ஆயுர்வேதத்தின் படி, இந்த ஒவ்வாமைகளை சில வீட்டு வைத்தியம் மூலம் குணப்படுத்தலாம். அது என்னவென பார்க்கலாம்…
ஒவ்வொரு பருவத்திற்கும் அந்த பருவத்தின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப சில குறிப்பிட்ட அலர்ஜிகள் ஏற்படுவது உண்டு. கோடையில் காற்றில் உள்ள மகரந்தத்தால் ஒவ்வாமை ஏற்படுகிறது, அதே சமயம் மழைக்காலங்களில் ஈரமான வானிலையில் வளரும் பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்களால் ஒவ்வாமை ஏற்படுகிறது. தற்போது குளிர்காலத்தில் தூசி மற்றும் பனிமூட்டம் ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது.
முக்கிய கட்டுரைகள்

இந்த குளிர்காலத்தில், குறைந்த உயரத்தில் புழுதி வீசுகிறது, நம் நகரங்களின் சாலைகள் எவ்வளவு தூசி நிறைந்ததாக இருக்கிறது என்பதை நாம் அறிவோம். இந்த தூசியில் சிறிய பூச்சிகள் உள்ளன, அவை டஸ்ட் அலர்ஜியை ஏற்படுத்துகின்றன. இதனால் இருமல், தும்மல், மூக்கில் நீர் வடிதல், கண்களில் நீர் வடிதல், சுவாசிப்பதில் சிரமம் போன்றவை ஏற்படும். சில நேரங்களில் இந்த டஸ்ட் அலர்ஜியை சமாளிப்பது மிகவும் கடினமாக இருக்கும்.
இருப்பினும், டஸ்ட் அலர்ஜியை சமாளிக்க ஆயுர்வேதத்தில் சில தீர்வுகள் உள்ளன. நம் வீட்டில் கிடைக்கும் மசாலாப் பொருட்களைக் கொண்டு டஸ்ட் அலர்ஜியை சரி செய்து கொள்ளலாம்.
தூசி ஒவ்வாமைக்கான ஆயுர்வேத வைத்தியம் குறித்த பயனுள்ள சில வீட்டு குறிப்புகள் இதோ…
மஞ்சள் பால்:

சமஸ்கிருதத்தில் 'ஹரித்ரா' என்று அழைக்கப்படும் மஞ்சள், டஸ்ட் அலர்ஜி உள்ளிட்ட பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு அருமருந்தாகும். மஞ்சள் சுற்றுச்சூழல் எரிச்சல், தொடர் இருமல், வலிகளை குறைக்கிறது. இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான மஞ்சள் பால் குடிப்பது டஸ்ட் அலர்ஜியை தடுக்க உதவும்.
துளசி தேநீர்:
துளசியில் பயோஆக்டிவ் மற்றும் ஆண்டிமைக்ரோபியல் கூறுகள் நிறைந்துள்ளன. துளசி ஒரு பண்டைய வீட்டு வைத்தியம், இது ஒவ்வாமை உட்பட பல சுவாச பிரச்சனைகளை நீக்குகிறது.
துளசி இலைகளை வெதுவெதுப்பான நீரில் கொதிக்க வைத்து, சாறைக் காய்ச்சி துளசி மூலிகை பானம் தயார். இந்த துளசி டீயை பருகினால் டஸ்ட் அலர்ஜி சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கும்.
கருஞ்சீரக எண்ணெய்:
கருஞ்சீரகம் சமஸ்கிருதத்தில் 'கிருஷ்ண ஜீரகா' என்று அழைக்கப்படுகிறது, கருப்பு சீரகம் அல்லது கலோஞ்சி என்றும் அழைக்கப்படும் இது, நுண்ணுயிர் எதிர்ப்புத்திறன் மிக்கதாகும். இது சுவாசக் குழாயில் தொற்று மற்றும் அழற்சியைத் தடுக்கிறது.
இதையும் படிங்க: Ghee: மழைக்காலத்தில் தினமும் நெய் சாப்பிட்டால்… இத்தனை நன்மைகள் கிடைக்குமா?
கருஞ்சீரக எண்ணெய்நாசியழற்சிக்கு ஒரு நல்ல மூலிகை மருந்து. இந்த எண்ணெயை ஒரு நாளைக்கு இரண்டு முறை மூக்கு மற்றும் தொண்டையில் தடவி மசாஜ் செய்வது நாசி மற்றும் வாய்ப் பகுதிகளில் உள்ள நெரிசலைக் குறைக்க உதவுகிறது.
யோகாசனமும் உதவும்:
யோகா பல வகையான மன மற்றும் உடல் நோய்களைக் குணப்படுத்தும் ஒரு சிறந்த சிகிச்சையாகும். அலர்ஜியை குணப்படுத்தும் ஆசனங்களும் உள்ளன.
அர்த்தச்சந்திராசனம், பவனமுக்தாசனம், விருக்ஷாசனம், சேதுபந்தாசனம் ஆகியவை ஒவ்வாமைக்கு நன்மை தரும் யோகாசனங்கள். பிராணயாமா (சுவாசப் பயிற்சி) நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மிகவும் உதவியாக இருக்கும், இதனால் உடல் ஒவ்வாமைக்கு ஆளாகாது. இது உடல் செல்களுக்கு சரியான ஊட்டச்சத்தை அளிக்கிறது, அமைப்புகளின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
Image Source:Freepik