Fri Sep 11, 2026 | 10:20 PM IST

Doctor Verified

Flower Allergy பற்றி தெரியுமா? மலர்கள் எல்லோருக்கும் ஏற்றதல்ல – தெரிந்துகொள்ள வேண்டிய உண்மை இதோ!

மலர்கள் அனைவருக்கும் ஏற்றதல்ல. சிலருக்கு மலர்களால் மூச்சுத்திணறல், தும்மல், தோல் எரிச்சல் போன்ற flower allergy ஏற்படுகிறது. இதற்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள் பற்றி முழுமையான தகவல்.

மலர்கள் இயற்கையின் அழகையும் மணத்தையும் பிரதிபலிக்கும் ஒரு அற்புத படைப்பு. வீடுகளை அலங்கரிப்பதற்கும், ஆராதனைகளுக்கும், சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் மலர்களை மக்கள் விரும்பிப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், சிலருக்கு மலர்கள் மகிழ்ச்சியைக் கொடுப்பதற்கு பதிலாக அலர்ஜி பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, “pollen allergy” எனப்படும் மலர் தூள் அலர்ஜி பலரிடமும் காணப்படுகிறது. இதை பற்றில் அறியும் முன் அலர்ஜி குறித்து முழுமையா தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியம். ENT டாக்டர் ஜாகிர் உசேன், தனது யூட்யூப் பக்கத்தில் தெளிவாக விளக்கியுள்ளார். 

Allergy என்றால் என்ன?

அலர்ஜி என்பது காற்றில் துகள்கள் பறக்கும்போது, அவை மூச்சுக்குழாயில் சென்றுவிடும். சிலரின் உடல், இதை ஒரு “அந்நிய பொருள்” (foreign substance) எனக் கருதி immune system மூலம் எதிர்ப்பு காட்டுகிறது. இதனால்:

* தொடர்ந்து தும்மல்

* மூக்கு அடைப்பு

* கண்களில் நீர் வடிதல்

* தோல் அரிப்பு

* மூச்சுத்திணறல்

போன்ற அலர்ஜி அறிகுறிகள் உருவாகின்றன என்று மருத்துவர் கூறுகிறார்.

artical  - 2025-08-21T123612.926

ஏன் சிலருக்கு மட்டும் அலர்ஜி வருகிறது?

மலர்கள் எல்லோருக்கும் ஒரே மாதிரி பாதிப்பு செய்யாது. காரணம்:

* மரபியல் காரணம் (Genetics): குடும்பத்தில் அலர்ஜி வரலாறு இருந்தால், பிள்ளைகளுக்கும் அதிக வாய்ப்பு.

* Immunity குறைவு: உடல் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள்.

* ஆஸ்துமா (Rhinitis): ஏற்கனவே சுவாச நோய் உள்ளவர்களுக்கு மலர் தூள் தாக்குதல் வேகமாகும்.

* Environmental Factors: நகரங்களில் தூசி, மாசு அதிகமாக இருப்பதால், மலர் தூள் தாக்கமும் அதிகரிக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: நல்லது தான்.. ஆனால் எல்லோருக்கும் தேங்காய் நீர் ஏற்றதல்ல.. சிலர் இதை தவிர்க்க வேண்டும்..

Flower allergy மலர் அலர்ஜி அறிகுறிகள்

* தினமும் காலை அதிக தும்மல்

* மூக்கில் நீர் வடிதல் அல்லது அடைப்பு

* கண்களில் எரிச்சல், சிவப்பு

* தோலில் சுருக்கு / சிவப்பு புள்ளிகள்

* சுவாசம் அடைதல், Wheezing

இவை சாதாரண சளி, காய்ச்சல் போல தோன்றினாலும், seasonal flower allergy காரணமாக இருக்கலாம்.

artical  - 2025-08-21T123531.518

அதிகமாக அலர்ஜி ஏற்படுத்தும் மலர்கள்

* சூரியகாந்தி (Sunflower)

* ரோஜா (Rose) – குறிப்பாக காட்டு வகைகள்

* லில்லி (Lily)

* மரிகோல்டு (Marigold)

* செம்பருத்தி (Sembaruthi)

மிகவும் மணம் வீசும் சில வகை மலர்களும் trigger allergy செய்யக்கூடும்.

மலர் அலர்ஜியை எப்படிச் சிகிச்சை பெறலாம்?

* Doctor Consultation: Allergy specialist-ஐ சந்தித்து “Allergy Test” செய்ய வேண்டும்.

* Antihistamine Tablets / Nasal Sprays: மருத்துவர் பரிந்துரையுடன் எடுத்துக்கொள்ளலாம்.

* Avoiding Exposure: மலர்கள் அதிகம் இருக்கும் இடங்களை தவிர்க்கவும்.

* Mask பயன்பாடு: வெளியில் செல்லும் போது mask அணிவது சிறந்தது.

* Immunotherapy: நீண்ட கால தீர்வாக சிலருக்கு இந்த சிகிச்சை வழங்கப்படுகிறது.

artical  - 2025-08-21T123437.008

வீட்டிலேயே செய்யக்கூடிய முன்னெச்சரிக்கை

* மலர்களை நேரடியாக கையில் பிடித்து வாசனை பார்க்க வேண்டாம்.

* வீட்டில் fresh flowers வைத்து அலங்கரிக்காமல் artificial flowers பயன்படுத்தலாம்.

* காலை நேரத்தில் (pollen அதிகம் இருக்கும் நேரம்) வெளியே செல்லாமல் இருக்கவும்.

* மலர் அலர்ஜி இருப்பவர்கள் air purifier பயன்படுத்துவது நல்லது.

மருத்துவ நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

அலர்ஜி நிபுணர்கள் தெரிவிப்பதாவது, “flower allergy சாதாரண பிரச்சினை போலத் தோன்றினாலும், அது asthma attack-க்கு காரணமாக மாறலாம். சிறிய குழந்தைகள் மற்றும் மூத்தவர்களுக்கு மிகுந்த கவனம் தேவை” என்கிறார்கள்.

இறுதிச் சொல்

மலர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி தருபவை என்றாலும், சிலருக்கு அது அலர்ஜி மற்றும் சுவாச பிரச்சினை ஏற்படுத்தக்கூடும். எனவே, “மலர்கள் அழகு – ஆனாலும், எல்லோருக்கும் ஏற்றதல்ல” என்பது உண்மை. சரியான மருத்துவ ஆலோசனையும், முன்னெச்சரிக்கையும் இருந்தால், இந்த பிரச்சினையை கட்டுப்படுத்த முடியும்.

Read Next

Kidney-ல் கல் இருக்கும் போது.. இந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்..

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content