கிட்னி கல் (Kidney Stone) என்பது இன்று பலருக்கும் ஏற்படும் ஒரு கடினமான உடல்நலப் பிரச்சனை. மிகுந்த வேதனையையும், சிறுநீரக செயல்பாடுகளில் பாதிப்பையும் உண்டாக்கும் இந்த நிலை, தவறான உணவுப் பழக்கங்களால் மேலும் மோசமடைகிறது. கிட்னி கல் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய சில உணவுகள் குறித்து இங்கே தெரிந்துக் கொள்வோம்.
கிட்னியில் கல் இருந்தால் தவிர்க்க வேண்டிய உணவுகள் இங்கே..
அதிக ஆக்சலேட் (Oxalate) உள்ள உணவுகள்
பசலைக் கீரை (Spinach), பீட்ரூட் (Beetroot), சாக்லேட் (Chocolate) போன்ற உணவுகளில் ஆக்சலேட் அதிகம் உள்ளது. ஆக்சலேட், கால்சியத்துடன் சேர்ந்து கிட்னியில் கல் உருவாகும் ஆபத்தை அதிகரிக்கிறது. ஆகையால் கிட்னி கல் இருந்தால், ஆக்சலேட் அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்கவும்.
அதிக உப்பு உள்ள உணவுகள்
உப்பில் உள்ள சோடியம் (Sodium), சிறுநீரில் கால்சியம் அளவை அதிகரிக்கிறது. இது கல் உருவாகும் வாய்ப்பை பல மடங்கு உயர்த்தும். பாக்கெட் ஸ்நாக்ஸ், கருவாடு, மோர் மிளகாய் போன்ற அதிக உப்பு உள்ள உணவுகளை தவிர்க்கவும்.
அதிக புரதம் உள்ள இறைச்சிகள்
செம்மீன், ஆட்டு இறைச்சி, பன்றி இறைச்சி போன்றவற்றில் உள்ள அதிக புரதம், சிறுநீரில் யூரிக் ஆசிட் (Uric Acid) அளவை அதிகரிக்கிறது. யூரிக் ஆசிட் கற்கள் உருவாக வழிவகுக்கும். இதற்கு பதிலாக பருப்பு, பாசிப் பயறு, சுண்டல் போன்ற தாவர புரதத்தை எடுத்துக்கொள்ளலாம்.
மேலும் படிக்க: கிட்னி ஹெல்தியா இருக்கனுமா.? இந்த சூப்பர் ஃபுட்ஸ் இருக்க கவலை எதுக்கு.!
அதிக சர்க்கரை உள்ள பானங்கள்
சோடா, எனர்ஜி டிரிங்க்ஸ், மற்றும் செயற்கை இனிப்பு பானங்கள் சிறுநீரக செயல்பாட்டை பாதிக்கின்றன. அதிக சர்க்கரை, சிறுநீரின் pH அளவை மாற்றி, கல் உருவாகும் வாய்ப்பை அதிகரிக்கிறது.
அதிக பால் மற்றும் பால் பொருட்கள்
கிட்னி கல் நோயாளிகளுக்கு மிகுந்த கால்சியம் உட்கொள்வது பாதகமாக இருக்கலாம். அதிக பால், பன்னீர், க்ரீம் ஆகியவை கல் உருவாக்கும் சாத்தியத்தை அதிகரிக்கின்றன.
ஜங்க் மற்றும் ஃபாஸ்ட் ஃபுட்ஸ்
பர்கர், பீட்சா, ஃப்ரைட் சிக்கன் போன்ற ஜங்க் உணவுகளில் அதிக உப்பு, கொழுப்பு, செயற்கை சேர்மங்கள் இருப்பதால் சிறுநீரகங்கள் அதிக சுமையை சந்திக்கின்றன.
இறுதியாக..
கிட்னி கல் என்பது உணவில் சிறிய கவனக்குறைவாலும் மோசமடையக்கூடிய பிரச்சனை. அதிக தண்ணீர் குடிப்பது, குறைந்த உப்பு, குறைந்த ஆக்சலேட் உள்ள உணவுகளைச் சாப்பிடுவது, சிறுநீரக நலனுக்கு பாதுகாப்பு. நம் உடல் நலம் நம் கையில் என்பதால், உணவில் சிறிய மாற்றங்களே பெரிய பாதுகாப்பைத் தரும்.